Aathisudi

ஆத்தி சூடி.

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே (காப்பு)

அறஞ்செய விரும்பு 1
ஆறுவது சினம். 2
இயல்வது கரவேல் 3
ஈவது விலக்கேல் 4
உடையது விளம்பேல் 5
ஊக்கமது கைவிடேல் 6
எண்ணெழுத் திகழேல் 7
ஏற்பது இகழ்ச்சி 8
ஐயமிட்டுண் 9
ஒப்புர வொழுகு 10
ஓதுவ தொழியேல் 11
ஔவியம் பேசேல் 12
(ஃ)அஃகஞ் சுருக்கேல்13

கண்டொன்று சொல்லேல் 14
ஙப்போல் வளை 15
சனி நீராடு 16
ஞயம்பட வுரை 17
இடம்பட வீடெடேல்18
இணக்கமறிந்திணங்கு 19
தந்தைதாய் பேண் 20
நன்றி மறவேல் 21
பருவத்தே பயிர்செய் 22
மண்பறித் துண்ணேல் 23
இயங்கித்திரியேல் 24
அரவ மாட்டேல்25
இலவம்பஞ்சிற்றுயில் 26
வஞ்சகம் பேசேல் 27
அழகலாதனசெய்யேல் 28
இளமையிற்கல் 29
அறனை மறவேல்30
அனந்த லாடேல்31

கடிவது மற 32
காப்பது விரதம் 33
கிழமைபட வாழ் 34
கீழ்மை யகற்று 35
குணமது கைவிடேல் 36
கூடிப் பிரியேல் 37
கெடுப்ப தொழி 38
கேள்வி முயல் 39
கைவினை கரவேல் 40
கொள்ளை விரும்பேல் 41
கோதாட் டொழி 42

சக்கர நெறிநில் 43
சான்றோரினத் திரு 44
சித்திரம் பேசேல் 45
சீர்மை மறவேல் 46
சுளிக்கச் சொல்லேல் 47
சூது விரும்பேல் 48
செய்வினை திருந்தச்செய் 49
சேர்விட மறிந்துசேர் 50
சையெனத் திரியேல் 51
சொற்சோர்வு படேல் 52
சோம்பித் திரியேல் 53

தக்கோனெனத் திரி 54
தானமது விரும்பு 55
திருமாலுக் கடிமைசெய் 56
தீவினை யகற்று 57
துன்பத்துக் கிடங்கொடேல் 58
தூக்கி வினைசெய் 59
தெய்வ மிகழேல் 60
தேசத்தோ டொத்துவாழ் 61
தையல்சொற் கேளேல் 62
தொன்மை மறவேல் 63
தோற்பன தொடங்கேல் 64

நன்மை கடைப்பிடி 65
நாடொப்பன செய் 66
நிலையிற் பிரியேல் 67
நீர்விளை யாடேல் 68
நுண்மை நுகரேல் 69
நூல்பல கல் 70
நெற்பயிர் விளை 71
நேர்கோ னெறிநில் 72
நைவினை நணுகேல் 73
நொய்ய வுரையேல் 74
நோய்க்கிடங் கொடேல் 75

பழிப்பன பகரேல் 76
பாம்பொடு பழகேல் 77
பிழைபடச் சொல்லேல் 78
பீடுபெற நில் 79
புகழ்பட வாழ் 80
பூமி விரும்பு 81
பெரியாரைத் துணைக்கொள் 82
பேதைமை யகற்று 83
பையலோ டிணங்கேல் 84
பொருடனைப் போற்றிவாழ் 85
போற்றடிப் பிரியேல் 86

மனந்தடு மாறேல் 87
மாற்றானுக் கிடங்கொடேல் 88
மிகைபடச் சொல்லேல் 89
மீதூண் விரும்பேல் 90
முனைமுகத்து நில்லேல் 91
மூர்க்கரோ டிணங்கேல் 92
மெல்லியா டோள்சேர் 93
மேன்மக்கள் சொற்கேள் 94
மைவிழியார் மனையகல் 95
மொழிவதை மொழி 96

வல்லமை பேசேல் 97
வாதுமுற் கூறேல் 98
வித்தை விரும்பு 99
வீடு பெறநில் 100
(வு)உத்தமனா யிரு 101
(வூ)ஊருடன் கூடிவாழ் 102
வெட்டெனப் பேசேல் 103
வேண்டுவினை செய் 104
வைகறைத் துயிலெழு 105
(வொ)ஒன்னாரைத் தேறேல் 106
(வோ)ஓதுவது வேதம் 107