ஆகாச கருடகிழங்கு

நீர் இல்லாமல் வேறுமனே கயற்றில் கட்டி தொங்க விட்டாலும் இது காற்றின் ஈரத்தில் முளைத்து வளரும் ஆகாசகருடகிழங்கு 🌳

 

இது ஒரு வகை கொடி இனத்தை சேர்ந்தது

இது திருஷ்டி, தோஷங்கள் மட்டுமல்லாமல் சித்த மருத்துவத்திலும் தொன்றுதொட்டு பயன்பட்டு வருகிறது.

 

மூலிகையின் பெயர் -:ஆகாச கருடன் கிழங்கு.

கொல்லன் கோவை, பேய்சீந்தில் முதலியன..

 

ஆகாச கருடன் கிழங்கு பற்றிய சித்தர் பாடல்.🐝

 

“அரையாப்பு வெள்ளை யகலாக் கொறுக்கை

கரையாத கட்டியிவை கானார்- வரையிற்

றிருடரெனச் செல்லும்விடஞ் சேர் பாம்பு

கருடன் கிழங்கதனைக் கண்டு”…..🐝

 

பொருள் :- 🐝கருடன் கிழங்குக்கு அரையாப்புக் கட்டி, வெள்ளை, கொருக்கு மாந்தை, அற்புத விரணம், ஆகியவைகள் தீரும். கடும் விஷத்தையுடைய சர்ப்பங்கள்(பாம்புகள்) இந்தக் கருடன் கிழங்கைக் கண்டால் அஞ்சி நடுநடுங்கும்.

 

நிறைய மருத்துவ குணங்கள் சொன்னாலும் இதை ஜாக்கிரதையாக பயன்படுத்த வேண்டிய ஒரு மூலிகை ..வயற்றுப்போக்கு மற்றும் வாந்தியை தூண்டும் தோல் மற்றும் விஷ கடிக்கு சுகம் தரும் …

 

அமானுஷிய சக்திகள் இதற்க்கு உண்டு எனவும் கெட்ட அதிர்வுகளை வீட்டில் ஏற்படாமல் காக்கும் எனவும் சொல்லுகிறார்கள் .

 

வீட்டில் தோஷம் இருந்தால் இது வாடி தனது உயிரை விடும் .. இது துளிர் விட்டு வளர்ந்தால் வீடிற்கு நல்லது …🌾🌾🌾