சோழிய வேளாளர்

அனைத்து வேளாளர் உறவுகளும் இந்த யூடீப் சேனலை சப்ஸ்க்ரைப் செய்து பெல் பட்டனை க்ளிக் செய்யவும் நன்றி 🙏

 

சோழியர் என்று அழைக்கப்படும் சோழிய வேளாளர் (Chozhia Vellalar) இனமானது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சமூகங்களுள் தொன்மை வாய்ந்தது வேளாளர் சமூகத்தில் ஒரு பெரும் பிரிவாகும். இவர்கள் பண்டய சோழ தேசமான இன்றய டெல்டா பகுதி என்றழைக்கக் கூடிய தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டிணம், திருச்சி ஆகிய மாவட்டங்களை பூர்வீகமாக கொண்டதால் சோழ வெள்ளாளர், சோழ வேளாளர், சோழிய வேளாளர், சோழ நாட்டு வெள்ளாளர் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களின் முக்கியத் தொழில் வேளாண்மை ஆகும். இவர்கள் தமிழ்நாடு அரசு சான்றிதழ் படி முற்பட்ட வகுப்பினராக இருந்து பின்னர் பிற்பட்ட வகுப்பினராக மாற்றப்பட்டுள்ளனர். சோழிய வேளாளர்கள் நிலவுடமையாளர்கள் , பரந்த மனப்பான்மை கொண்டவர்கள், நம்பிக்கைகுரியவர்கள், தெய்வபக்தி நிறைந்தவர்கள் எனப் பலவாறாக அறியப் படுகின்றனர்.இவர்கள் கோவில் அறங்காவலர்கள் மற்றும் கிராமத் தலைவர்கள் போன்ற பொறுப்புகளில் இன்றுவரை விளங்கி வருகின்றனர்.

தோற்றம்

வேளிர் என்ற பண்டய தமிழ் குடியில் தோன்றிய இவர்கள் வேள், வேளிர், வேளான், வேளாளர் என பெயர் பெற்றனர். வேளாளர் எனும் சொல்லே பேச்சி வழக்கில் மருவி வெள்ளாளர் ஆனது. சோழியம் எனப்படும் சோழ நாட்டை பூர்வீகமாக கொண்டதால் சோழிய வெள்ளாளர் ஆனார்கள். இவர்கள் வேளாளர் சமூகத்தின் கீழ் வரும் பெரும் சாதியினர்.

வரலாறு

இவர்கள் பொதுவாக சோழ நாட்டின் வேளாண்குடிகளாகவும், தற்காலிக போர்குடிகளாகவும், பெரும் நிலவுடமையாளர்களாகவும், சிற்றரசர்களாகவும் இருந்துள்ளார்கள். சைவ சமயத்தை சேர்ந்த இவர்கள் சோழர்களின் ஆட்சி காலத்திலிருந்தே மேன்மை நிலையை அடைந்திருந்தனர். சோழிய வேளாளர்கள் சோழர்களின் அமைச்சர்கள், படைத்தளபதிகள், அரசு அதிகாரிகள், ஊர் தலைவர்கள் போன்ற உயரிய பதவிகளில் இருந்து அவர்களின் ஆட்சிக்கு பெரும்பங்காற்றியதை கல்வெட்டுக்கள் மற்றும் செப்பேடுகளின் மூலம் அறிய முடிகிறது. கொடும்பாளூர் வேளிர்களின் கல்வெட்டுக்கள் மற்றும் கரிகாலச் சோழனின் முடிசூட்டும் கல்வெட்டுகளின் வாயிலாக இவர்கள் சோழர்களுடன் மண உறவு கொண்டிருந்ததை அறிய முடிகிறது. திரு.நீலகண்ட சாஸ்திரிகளின் சோழர் வரலாறு என்ற நூலில் இவர்களைப் பற்றிய செய்திகள் மற்றும் வரலாற்று குறிப்புகள் அதிகமாக காணப்படுகிறது.

Download Sudhesi News App here

கோத்திரம்

சோழிய வெள்ளாளருள் கருப்புடையான், மருதூருடையான் போன்ற 64 கோத்திரங்கள் இருப்பதாக சோழ மண்டல சதகம் சொல்கின்றது.

புலம்பெயர்வு

தொடக்க காலத்தில் சோழிய வெள்ளாளர்கள் தமிழ்நாட்டின், சோழ மண்டலமான கிழக்கு மாவட்டங்களில் இருந்தார்கள். இவர்களில் சிலர் 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் அரசு பணி மற்றும் தொழில் காரணமாக திருச்சி மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் இருந்து, தமிழ்நாட்டில் மற்ற பகுதிகளில் குடிபெயர்ந்தனர்.

குலப்பட்டம் மற்றும் குலதெய்வ வழிபாடு

பிள்ளை மற்றும் வேளாளர் என்ற குலப்பட்டத்தினை தங்கள் பெயர்களுக்கு பின்னால் போட்டுக் கொள்ளும் வழக்கம் உள்ளவர்கள்.

   சோழிய வேளாளர்கள் தங்கள் குலதெய்வமாக அங்காளம்மன்,மாரியம்மன்,பேச்சியம்மன்,
பச்சையம்மன்,காத்தாயி அம்மன், கருப்பசாமி, மதுரைவீரன்,காத்தவராயன்,பெரியசாமி போன்ற
 சிறு தெய்வங்களை குல தெய்வமாக கொண்டவர்கள்.
    இவர்கள் தங்கள் பங்காளிகளுடன் சேர்ந்து குலதெய்வத்திற்கு ஆடு மற்றும் கோழிகளை 
பலி கொடுத்து படையலிட்டு வழிபடும் பழக்கம் உடையவர்கள்.

சோழிய வெள்ளாளர் இல்லத்துப் பிள்ளைமார் இல்லை

சோழிய வேளாளர்கள் இல்லத்துப் பிள்ளைமார்களுடன் தொடர்புடையவர்கள் என்ற கருத்து ஏற்புடையதல்ல. ஈழவர் என்று அழைக்கப்படும் கேரளத்தை பூர்வீகமாகக் கொண்ட இல்லத்துபிள்ளைமார்க்கும் சோழ தேசத்தின் பூர்வகுடிகளான சோழிய வேளாளர்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது பிள்ளைமார் என்ற பட்டத்தால் சில குழப்பங்கள் ஏற்படுகிறது.

VELALAR SONGS DOWNLOAD

முக்கிய சோழிய வெள்ளாளர்

 

  • முத்து இருளப்ப பிள்ளை – விஜயரகுநாத முத்துராமலிங்க சேதுபதி அமைச்சர்.
  • மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை – செந்தமிழ்க் களஞ்சியம் “இலக்கணத் தாத்தா” வித்துவான்
  • சொ. மறைமலை அடிகள் புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர்
  • பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிள்ளை – மக்கள் கவி
  • சிவசங்கர நாராயண பிள்ளை (எஸ்.எஸ்.பிள்ளை) – கணித மேதை
  • ப. ஜீவானந்தம் – பொதுவுடமைத் தலைவர் 1952 ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
  • நவநீதம் பிள்ளை – பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ஐநா மனித உரிமைகள் ஆணையாளர்
  • எல். டி. சுவாமிகண்ணு பிள்ளை – இந்திய வானியலாளர், தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் சபாநாயகர்
  • நாமக்கல் கவிஞர் வே. ராமலிங்கம்  பிள்ளை
  • டாக்டர் வி. ஜெயபால் – மருத்துவர் தமிழ்நாட்டு வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர்
  • கனகராஜ் சிதம்பரம் பிள்ளை – உலக புகழ் மிக்க விருந்தோம்பல் நிபுணர்
  • A. பெருமாள் பிள்ளை, இந்திய தேசிய காங்கிரஸ், ஓமலூர், சேலம், தமிழ்நாடு
  • T.கலியமூர்த்தி பிள்ளை – திருவாரூர்
  • முனைவர். ம. எழில் பரமகுரு (கல்வியாளர், மதுரை தியாகராசர் கல்லூரி தமிழ் பேராசிரியர்)