ஜாதி கலவரங்களை தூண்டும் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள்

தமிழகத்தில் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் போன்ற கட்சிகள் திட்டமிட்டு தங்களின் துணை அமைப்புகள் மூலமாக தமிழகத்தில் பதற்றத்தையும் ஜாதி, மத கலவரங்களையும், பிரிவினைகளையும் தூண்டி வருவதையே வாடிக்கையாக வைத்துள்ளனர்.

 

இவர்களின் அரசியல் பிழைப்புக்காக தங்களின் துணை அமைப்புகளான தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ம.க.இ.க, மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகள் மூலமாக சமூக பதட்டத்தை ஏற்படுத்துகின்றனர்.

 

தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்ற பெயரில் தீண்டாமைச்சுவர் என்ற பொய்யாக ஒரு பிம்பத்தை கட்டமைத்து அண்ணன் தம்பதிகளாக பழகி வரும் இரு சமுதாயங்களுக்கு இடையே பகைமையை தூண்டி கோவில்களை இவர்களே மூட வைப்பது பின்பு கோவில்களை மறுபடியும் திறக்க வேண்டும் குறிப்பிட்ட தரப்புக்கே முதல் மரியாதை என்று உளவியல் ரீதியாக மக்களை பிளவுபடுத்தி சண்டையை இழுத்து அதன்மூலம் அரசியல் குளிர் காய்வது கம்யூனிஸ்ட்களின் கைவந்த கலை. மேலும் தமிழகத்தில் இரு வெவ்வேறு சமூகத்திற்கு இடையே திட்டமிட்டு ஜாதி கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சாதி மறுப்பு திருமணம் என்ற பெயரில் தங்கள் அலுவலகங்களில் வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்கின்றனர்.

மேலும் லவ் ஜிகாத்தை நேரடியாக ஆதரிக்கின்றோம் என்ற பெயரில் இஸ்லாமிய அமைப்புகளுடன் கைகோர்த்து மத ரீதியான பதட்டத்தையும் ஏற்படுத்த முயல்கின்றனர்.

 

இந்த கம்யூனிஸ்ட்களின் அடிப்படை சித்தாந்தமான பகைமையை தூண்டி குளிர்காய்வோம் என்ற ரீதியில் நேற்று திருநெல்வேலி மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்ற பெயரில் ஒரு ஜோடிக்கு காதல் திருமணத்தை செய்து வைக்க இரு வீட்டாரையும் அழைத்து வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளதாக செய்திகள் வெளி வருகிறது.

 

இவர்கள் செய்த கட்டப்பஞ்சாயத்தின் காரணமாகவே ஒரு தரப்பு ஆத்திரமுற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கி உள்ளனர். எந்தவித எதிர்பார்ப்பும் திட்டமிடலும் இல்லாமல் அரசியல் பூசப்படாத காதல் திருமணங்களை இந்து முன்னணி நூறு சதவீதம் வரவேற்கிறது. ஆதரிக்கிறது.

 

ஆனால் திட்டமிட்டு சமூகப்பதட்டத்தை ஏற்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணம், திருமணம் கடந்த உறவு என்ற பெயரில் கம்யூனிஸ்ட் கட்சிகள் அரசியல் சதுரங்கமாடுவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

 

திருமணங்கள் நடத்த, பதிவு செய்ய பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. மாறாக தங்கள் கட்சி அலுவலகத்தில் வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்வது தென் மாவட்டங்களில் திட்டமிட்ட கலவரத்தை தூண்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் சதி செய்கிறதோ! என்று நினைக்கத் தோன்றுகிறது. உடனடியாக தமிழக அரசாங்கமும் காவல்துறையும் இவர்களின் சதி வேலையை கண்டறிந்து தமிழகத்தில் ஜாதி ,மத கலவரங்கள் ஏற்படாத வண்ணம் பாதுகாக்குமாறு  கேட்டுக்கொள்கிறோம்…