ஏன் அதிமுக தோற்கடிக்கப்பட வேண்டும் ?

ஏன் அதிமுக தோற்கடிக்கப்பட வேண்டும் ?

1.அதிமுக இரட்டை தலைமையில் பயணிக்கிறது
இபிஎஸ் – ஒபிஎஸ் ஆகிய இருவருக்கும் நல்ல உறவு இல்லை

2.தமிழகம் முழுவதும் கட்சிக்குள் பல கோஷ்டி பூசல் உள்ளது
அதனை சரிசெய்யும் அளவிற்கு தலைமையிடம் ஆளுமை பண்பில்லை

3.சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் வன்னியர் உள் ஒதுக்கீடு மற்றும் சீர்மரபினர் இட ஒதுக்கீடு வழங்கிய விவகாரம்
முக்குலத்தோர், முத்தரையர், தொட்டிய நாயக்கர் போன்ற சமூகங்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது

4.வேளாளர் பிரச்சினை விசயத்தில் தேவையில்லாமல் இரு சமூக கருத்துகளை கேட்காமல் அனைத்து வெள்ளாளர்களின் உணர்வுக்கு எதிராக செயல்பட்டது

5.பட்டியலில் இருந்து பள்ளர்களை வெளியேற்றுவதாக கூறி ஏமாற்றியது

6.முத்தரையர் மாநாட்டில் கலந்து கொண்டு முத்தரையர்களை கருவேப்பிலை போல தேர்தல் நேரத்தில் தூக்கி எறிந்து அச்சமூக மக்களை ஏமாற்றியது

7.மத்திய அரசின் தமிழின விரோத மும்மொழி கொள்கையை ஆதரித்ததது

8.அரசு வேலைவாய்ப்பில் தமிழரல்லாதவர்கள் பயன் அடையும் வகையில் செயல்படும் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்தது

9.இலங்கை தமிழர் விசயத்தில் எந்தவொரு நிலைப்பாடும் எடுக்காமல் மவுனம் சாதிப்பது

10.ஜெயலலிதா அவர்களின் தோழி சசிகலா அவர்களின் மூலம் முதல்வர் பதவி அடைந்து இன்று அவருக்கு துரோகம் இழைத்தது

11.ஜெயலலிதா அவர்களின் ஆளுமைக்கு கலங்கம் விளைவிக்கும் விதமாக மத்திய அரசு தயவில் ஆட்சி செய்துவருவது

12.தமிழகம் முழுவதும் அமைச்சர்களின் அராஜகம்
குறிப்பாக கட்சியினர் உதவி கேட்டு வந்தால் கூட பணம் பறிப்பது

13.தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவின் போது 2 லட்சம் கோடி இருந்த கடன் தொகை இன்று 6 லட்சம் கோடியாக மாறியுள்ளது
தமிழக மக்களை அடகு வைத்து 6 லட்சம் கோடியை அமைச்சர்கள் பகிர்ந்துள்ளனர்

14.பெட்ரோல் , டிசல் மற்றும் கேஸ் விலை கடுமையாக உயர்ந்துள்ளது
இப்போது வெற்று அறிக்கை விட்டுள்ளனர்
5 ஆண்டுகளாக எதையும் செய்யாமல் வெற்று அறிக்கையை நம்ப மக்கள் தயாரில்லை

15.அரசு அலுவலகங்களில் லஞ்ச லாவண்யம் பெருகிவிட்டது
பிறந்த சான்றிதழுக்கு 500 லஞ்சம் , இறப்பு சான்றிதழுக்கு 1000 லஞ்சம் , வாரிசு சான்றிதழுக்கு 5000 லஞ்சம் , பட்டா மாறுதல் 10000 லஞ்சம் , இட விற்பனை பதிவு சென்ட்க்கு 25000 லஞ்சம் , மாவட்ட ஆட்சியரை சந்திக்க 200 லஞ்சம் , காவல் நிலையத்தில் வழக்கை எடுத்துக்கொள்ள 500 லஞ்சம் , முதியோர் பென்சனில் 200 கமிசன் இந்த மாதிரி சொல்லி கொண்டே போகலாம்

16.மணல் குவாரி , கல் குவாரி , மற்றும் டாஸ்மாக் பார்கள் என அதிமுக அமைச்சர்களின் பினாமிகள் சட்ட விரோதமாக பணம் சம்பாதிக்கின்றனர்

17.தூத்துக்குடி தூப்பாக்கி சூடு , சாத்தான்குளம் வியாபாரிகள் படுகொலை இந்த மாதிரி அரசின் மெத்தன போக்கு

18.கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவில்லை , கொரோனா காலத்தில் மகளீர்கள் வாங்கிய கடனை தற்போது தனியார் நிறுவனங்கள் பல மடங்கு அதிக வட்டி போட்டு கடனை வசூலிக்கிறது , இதனை அரசு கண்டுக்கொள்ளவில்லை

20.தமிழக விவசாயிகள் பாதிப்படையும் வகையில் தவறான ஆலோசனையின் படி மத்திய அரசு கொண்டு வந்த புதிய விவசாயிகள் திட்டத்திற்கு தமிழக அதிமுக அரசு ஆதரவு அளித்தது

இப்படிக்கு

*வேளாளர்கள்*
(கவுண்டர் + முதலியார் + பிள்ளை + செட்டியார் )