saiva velalar

 

ஒவ்வொரு வேளாளரையும் நெஞ்சை நிமிர்த்தி வாழ வைக்கும் பதிவு இது..

ஆயிரகணக்காண ஆண்டுகளாக  தஞ்சை பெரிய கோவிலில் சோழனின் ஆணைக்கிணங்க பொறிக்கபட்ட “ஓதுவார்களின்” பிரமிக்கவைக்கும் கல்வெட்டு

வெள்ளாள சொந்தங்களே நமக்கில்லாத வரலாறா????

நமக்கில்லாத பெருமையா?????

பண்டைய காலத்தில் சைவ வேளாளரில் உருவாகிய “ஓதுவார்” மரபினரது பழம்பெரும் கல்வெட்டானது இன்றும் தஞ்சையில் பெருவுடையார் கோயிலில் கிடைக்கப்பெறுகிறது.

ஓதுவார்கள் சைவ வேளாளரில் நால்வகை தீஷை பெற்று திருமுறைகளையும் பாராயணம் செய்ய சைவ மடங்களிலும் கோயிலிலும் இறைத்தொண்டு செய்யும் சைவ வேளாளர்களாவர்.

இவர்கள் சிவபிடாரர் என அழைக்கப்பெற்றதாக கல்வெட்டு தரும் செய்தியின் மூலம் அறிய பெறுகிறோம்.
பிடாரன் என்பதற்கு தமிழ் அகராதியில் சிவனின் மகன் என்றும் ஆசாரியன் அதாவது சிவபிடாரன் = சிவ ஆசாரியான் என சிறப்பிக்கப்பட்ட மரபினராவர். தங்கள் பெயருடன் இக்கல்வெடில் இம்மரபினர் சிவன் என பெயரை சேர்த்திருக்கும் சிவகோத்திர சைவ வேளாளர் என்பது மேலும் சிறப்பான விஷயம்.
——————————————————————-
தஞ்சை பெரிய கோவிலின் வடபுற திருமாளிகை சுவரின் வெளிப்பக்கம் உள்ள இராஜராஜனது கல்வெட்டு ஒன்றில் அவரது 29வது ஆட்சியாண்டு வரையில் தஞ்சை பெரிய கோவிலில் 48 பிடாரர்களை நியமிக்கப்பட்டுள்ளதும் அவர்களுக்கு தினசரி படைக்க வேண்டிய நெல் அளவினையும் கூட விரிவாக பிடாரர்கள் பெயர்களுடன் குறித்திருப்பது  சிறப்பான செய்தியாகும்.

மேற்கண்ட 48 சைவ வேளாள பிடாரர்களுடன் உடுக்கை மற்றும் மத்தளம் வாசிக்க இருவர் நியமிக்கப்பட்டிருந்தனராம்.

ஆக 50 பேர்களது பெயர் கல்வெட்டில் விவரிக்கப்பட்டுள்ளது.  அவையாவன

1.பாலன் திருவாஞ்சியத்தடிகளான ராஜராஜ பிச்சன் என்ற சதாசிவன்,

2. திருவெணாவல் செம்பொற்சோதியான  தட்சிணமேரு விடங்க பிச்சன் எனும் ஞான சிவன்,

3. பட்டாலகன் அம்பலத்தடியான மனோத்ம சிவன்,

4. பட்டாலகன் சீருடைக்கழலான பூர்வ சிவன்,

5. பொற்சுவரன் திருநாவுக்கரையனான பூர்வ சிவன்,

6. மாதேவன் திருஞானசம்பந்தன் எனும் ஞான சிவன்,

7. கயிலாயன் ஆரூரான தர்ம சிவன்,

8. செட்டி எடுத்தபாதமான கவச சிவன்,

9. இராமன் சம்பந்தனான சத்திய சிவன்,

10. அம்பலவன் பத்தர்களான வாம சிவன்,

11. கம்பன் திருநாவுக்கரையனான
சதாசிவன்,
12. நக்கன் சீராளன் எனும் வாம சிவன்,
13. அப்பி திருநாவுக்கரையனான நேத்திர சிவன்,
14. சிவக்கொழுந்து சீராளனான தர்ம சிவன்,
15. ஐநூற்றுவன் வெண்காடனான சத்திய சிவன்,
16. அரையன் அணுக்கனான தர்ம சிவன்,
17. அரையன் அம்பலகூத்தன் எனும் ஓம்கார சிவன்,
18. ஆரூரான் திருநாவுக்கரையனான ஞான சிவன்,
19. கூத்தன் மழலை சிலம்பான பூர்வ சிவன்,
20. ஐநூற்றுவன் சீயாரூரான தத்புருஷ சிவன்,
21. சம்பந்தன் ஆரூரன் எனும் வாம சிவன்,
22. அரையன் பிச்சன் எனும் தர்ம சிவன்,
23. காசியபன் எடுத்தபாதபிச்சனான ருத்ர சிவன்,
24. சுப்பிரமணியன் ஆச்சனான தர்ம சிவன்,
25. கூத்தன் அமரபுஜங்கன் எனும் சத்திய சிவன்,
26. வேங்கடன் எனும் அகோர சிவன்,
27. மாதேவன் திருநாவுக்கரையன் எனும் விஞ்ஞான சிவன்,
28. கூத்தன் வேங்கடன் எனும் ருத்ர சிவன்,
29. ஐநூற்றுவன் திருவாய்மூரான அகோர சிவன்,
30. திருமலை கூத்தன் எனும் வாம சிவன்,
31. ஐநூற்றுவன் எடுத்தபாதமான தர்ம சிவன்,
32. அரையன் தில்லைக்கரைசான பூர்வ சிவன்,
33. காளி சம்பந்தனான தர்ம சிவன்,
34. காபாலிக வாலி எனும் ஞான சிவன்,
35. வேங்கடன் நமசிவாயம் எனும் ருத்ர சிவன்,
36. சிவன் ஆனந்தன் எனும் யோக சிவன்,
37. சிவக்கொழுந்து சம்பந்தன் எனும் அகோர சிவன்,
38. இராமன் கணவதி எனும் ஞான சிவன்,
39. பிச்சன் வெண்காடன் எனும் அகோர சிவன்,
40.மறைக்காடன் நம்பி ஆரூரன் எனும் ஞான சிவன்,
41. சோமன் சம்பந்தன் எனும் ஞான சிவன்,
42. சத்தி திருநாவுக்கரையனான ஈசான சிவன்,
43.பொற்சுவரன் நம்பி ஆரூரன் எனும் தர்ம சிவன்,
44. அச்சன் திருநாவுக்கரையன் எனும் நேத்திர சிவன்,
45. ஐயாறன் பெண்ணோர்பாகன் எனும் ஹிருதய சிவன்,
46. ராஜாதித்தன் அம்பலத்தடி எனும் சிவா சிவன்,
47. செல்வன் கணவதி தெம்பனான தர்ம சிவன்,
48. கூத்தன் தில்லைக்கூத்தன் எனும் ஞான சிவன்,

49. உடுக்கை வாசிக்கும் திவேதைகோமபுரத்து தாத்தைய கிரமவித்தன் மகனான சூர்ய தேவ கிரமவித்தன் எனும் விடங்க உடுக்கை விஜ்ஜாதிரன் எனும் சோம சிவன்,

50. கொட்டிமத்தளம் வாசிக்கும் குணப்புகழ் மருதனான சிவாசிவன்,
ஆகிய ஐம்பது பேருக்கும் தினசரி முக்குறுணி நெல் படைக்கப்பட வேண்டும் என பதியப்பட்டுள்ளது.
பிராமணர்களுக்கு மட்டுமே நெல்லும் நிலமும் வழங்கிய கல்வெட்டுக்கள் செய்தி மத்தியில் இது சிறப்பான ஒன்றாகும். ஆனால் இன்றைய தினத்தில் அரசு துறையில் ஓதுவார் படிப்பு என்கிற பெயரில் பல சாதிகளும் திருமுறை வாசிப்பில் ஈடுபட்டு ஓதுவார் என போட்டுக்கொண்டு ஆசாரம் கெடும் சூழலில் சைவ வேளாள ஓதுவார் மரபினர்கள் பிள்ளை பட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர். நமது ஆசாரங்கள் காக்க மற்றும் சைவ சமய தனித்துவம் பேன விழிப்புணர்வு அவசியம் அதைகருதி இதனை பகிருங்கள்.