செப்டம்பர் மாதத்தின் சிறப்பு தெரியுமா?

அனைத்து தமிழ் சொந்தங்களும் இந்த பதிவை முழுமையாக படிக்கவும்…
“இந்த மாதம் செப்டம்பர் மாதம். இந்த மாதத்துக்கென்று ஒரு தனிச் சிறப்பு உண்டு. அது என்னன்னு தெரியுமா உங்களுக்கு?”

“அட! இது கூடவா தெரியாம இருப்போம்… பகுத்தறிவுப் பகலவன் நம்ம பெரியார் தாத்தா அவர்கள் பிறந்த மாதம்…” என்று உடனே விடை சொல்வோம்…

“அது மட்டுமில்லே… நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் அய்யா தந்தை பெரியார்னு சொன்ன அறிஞர் அண்ணா அவர்கள் பிறந்ததும் இந்த மாதம்தான்” என்று தான் எல்லோரும் சொல்வோம் .

“இந்த மாதம் 5ஆம் தேதிதான் தேசிய ஆசிரியர் நாள்னு கொண்டாடுவாங்க…

“இன்னும் நிறைய சிறப்பு இருக்கு. செப்டம்பர் 2ஆம் தேதி உலக தேங்காய் நாள். இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவை தலைமையிடமாகக் கொண்ட ஆசிய மற்றும் பசிபிக் தேங்காய் சமூகத்தினால் (Asian and Pacific Coconut Community-APCC) ஏற்படுத்தப்பட்டது தான் உலக தேங்காய் நாள். செப்டம்பர் மாதத்தின் முதலாவது சனிக்கிழமை உலக தாடி நாள்.

செப்டம்பர் 8ஆம் தேதி பன்னாட்டு கல்வி நாள். இந்த நாள் 1967ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோவால் அனுசரிக்கப்படுது.

செப்டம்பர் 10ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு ரூ£ள். இதை உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவிச்சிருக்கு.

அறிஞர் அண்ணா பிறந்த செப்டம்பர் 15 பன்னாட்டு ஜனநாயக நாள். 2007ஆம் ஆண்டு முதல் அய்க்கிய நாடுகள் பொதுச்சபை இதை கொண்டாட முடிவு செய்திருக்கு.

அதே 15ஆம் தேதி பொறியாளர்கள் நாள். அய்தராபாத் நகரத்துக்காக வடிவமைக்கப்பட்ட வெள்ளப் பாதுகாப்பு அமைப்பின் தலைமைப் பொறியாளராக இருந்த மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாள். பொறியாளர் நாளாகக் கொண்டாடப்படுது.

செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை பன்னாட்டு சிவப்புப் பனிக்கரடி நாள். சிவப்புப் பனிக்கரடியின் எண்ணிக்கை குறைஞ்சு வர்றதைக் குறிக்கிற விதமா சிவப்புப் பனிக்கரடி அமைப்பினாலே இந்த நாள் ஏற்படுத்தப்பட்டது.

பள்ளி வங்கியில் மாணவர்களிடம் நிதி சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 15ஆம் தேதி சஞ்சாயிகா நாள். 1970ஆம் ஆண்டில் இந்திய அரசால் உருவாக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான பண சேமிப்பு திட்டம் இது.

செப்டம்பர் 16 _ ஓசோன் அடுக்குப் பாதுகாப்புக்கான உலக ஓசோன் நாள். அய்க்கிய நாடுகள் பொதுச் சபையால் 1994லே இந்த நாள் ஏற்படுத்தப்பட்டது.

செப்டம்பர் 18 முதல் 24 வரை பன்னாட்டு காது கேளாதோருக்கான வாரம். செப்டம்பர் 20 பல்கலைக்கழக விளையாட்டுகளுக்கான பன்னாட்டு நாள்.

செப்டம்பர் 21 பன்னாட்டு அமைதி நாள். செப்டம்பர் 22 உலக காண்டாமிருக நாள். அதே செப்டம்பர் 22 உலக ரோஜா நாள். செப்டம்பர் 23 சைகை மொழிகளுக்கான பன்னாட்டு நாள். காது கேட்காதவங்களோட சைகை மொழியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துறதே இதோட நோக்கம். செப்டம்பர் 26 பன்னாட்டு ஒட்டுமொத்த அணு ஆயுத ஒழிப்பு நாள்.

அதே செப்டம்பர் 26 உலக கருத்தரிப்பு நாள். அனைத்து விதமான கருத்தரிப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துறதுதான் இந்த நாளின் நோக்கம்.

செப்டம்பர் 27 உலக சுற்றுலா நாள். செப்டம்பர் மாதத்தின் கடைசி வியாழக்கிழமை உலக கடல்சார் நாள். பாதுகாப்பான கடல் பயணம், கடல்சார் பாதுகாப்பு மற்றும் கடல் சார் சூழல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைச் சுட்டிக் காட்டுறதுதான் இதன் நோக்கம். செப்டம்பர் 28 அனைத்துவித தகவலையும் பெறுவதற்கான பன்னாட்டு நாள்.

அதே செப்டம்பர் 28 பன்னாட்டு வெறிநாய்க்கடி ரூ£ள். வெறிநாய்க்கடி நோயைத் தடுப்பது குறித்தும், இந்தக் கொடிய நோயைக் குணப்படுத்தும் செயல்பாடுகளைச் சுட்டிக் காட்டவும் இந்த நாள் அனுசரிக்கப்படுது. மேலும், வேதியியல் அறிஞர் _ விஞ்ஞானி லூயி பாஸ்டரின் இறந்த நாளைக் குறிக்குது.

இந்த செப்டம்பர் 28 – துப்பாக்கி சுடுபவர்கள் நாளாகவும் அனுசரிக்கப்படுது.

செப்டம்பர் 29 _ உலக இதய நாள். இதய நோய்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த நாள் கடைப்பிடிக்கப்படுது.

செப்டம்பர் 30 _ பன்னாட்டு மொழி பெயர்ப்பாளர்கள் நாள்.

செப்டம்பர் மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமை உலக முதலுதவி நாள். நெருக்கடி காலத்தில் முதலுதவி செய்வது எப்படி ஒருவரின் உயிரைக் காப்பாற்றும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது இந்த நாள்.

செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை உலகின் நீர் வழிகளைப் பெருமைப்படுத்துவதற்காக உலக நதிகள் நாள் கொண்டாடப்படுது.

இப்படி செப்டம்பர் மாதத்தின் எல்லா நாள்களுமே சிறப்பு மிக்க நாள்களாக இருந்தாலும், முக்கியமான ஒரு நாளை பல பேர் மறந்தே போயிட்டாங்க.”

அது எந்த நாள் …?

“தேசிய தலைவர்,கப்பலோட்டிய தமிழன் என்று பெருமையாக அழைக்கப்படும் வ.உ.சி ஐயா அவர்கள் பிறந்த செப்டம்பர் 5ஆம் தேதிதான் அந்த நாள். 1876ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் பிறந்தவர் வ.உ.சி! வள்ளியப்பன் உலகநாத சிதம்பரம் என்பதின் சுருக்கம்தான் வ.உ.சி. இந்த நாட்டு விடுதலைக்காக உண்மையாகப் பாடுபட்டவரு. அவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றவரு. வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர். அவரோட அரசியல் வாழ்க்கை நல்ல ஒழுக்கமும், நேர்மையும், ஆற்றலும் நிறைஞ்சது.

பிரிட்டானிய கப்பல்களுக்குப் போட்டியா முதல் உள்நாட்டு இந்தியக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். அவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை நடத்துச்சு.

பிரிட்டானிய அரசால் தேசத் துரோகியாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலே அடைக்கப்பட்டாரு.

சிறையிலே அவர் அனுபவிச்ச கொடுமைக்கு அளவே இல்லே. தலையை மொட்டை அடிச்சு கை கால்களில் விலங்கு மாட்டி கடுமையான வேலைகளைச் செய்ய வைச்சாங்க. கல்லும் மண்ணும் இருக்கும் கூழைக் குடித்துவிட்டு நூல் நூற்றார். கல் உடைத்தார். மாடுகள் இழுக்க வேண்டிய செக்கை அவர் இழுத்தார்.

அவர் சிறையிலிருந்தபோது சுதேசி கப்பல் நிறுவனத்தை நடத்த முடியாமல் அவரது கப்பலை ஆங்கிலக் கப்பல் நிறுவனத்துக்கே விற்றுவிட்டனர்.

1908 முதல் 1912 வரை சிறையில் இருந்தார். பின்னர் கோவையிலும், சென்னையிலும், சிரமங்களுக்கு இடையே வாழ்ந்து 1932இல் தூத்துக்குடிக்கு வந்தார்.

கடைசிக் காலத்தில் மெய்யறம், மெய்யறிவு, பாடல் திரட்டு, சுயசரிதை என நான்கு நூல்களும், திருக்குறளுக்கு உரையும், பல கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

போராட்ட வாழ்க்கை வாழ்ந்த வ.உ.சி. 1936 நவம்பர் 18ஆம் நாள் இறந்தார். நாட்டு நலனுக்காகத் தன் வாழ்க்கையையே இழந்த வ.உ.சி. நம்ம பகுத்தறிவுத் தாத்தா பெரியாருக்கு நல்ல நண்பர். யார் மறந்தாலும்… இப்படிப்பட்ட உண்மையான தியாகி வ.உ.சி ஐயாவை நாம மறக்கலாமா?”…

“இத்தனை சிறப்பு இந்த செப்டம்பர் மாதத்துக்கு இருக்குன்னு இப்பதான் தெரிஞ்சுது இந்த மாதத்தில் பிறந்த வ.உ.சியின் பிறப்பு! இந்தியாவின் சிறப்பு!!…”

“சிறந்த மனிதராம் வ.உ.சி.யின் சிறப்பும் இப்பதான் புரிஞ்சுது…”

சுதேசி செய்திகள் சேனலை அனைவரும் பாருங்கள்…
ஆதரவு தாருங்கள்….
இன்னும் பல்வேறு செய்திகளை தர காத்திருக்கிறது…

#சுதேசி_செய்திகள்
#sudhesi_news