Sudhesi Kappal

பாரத நாட்டிலிருந்து வந்த கப்பல்களை பார்த்து அதிர்ந்தான் பிரிட்டிஷ்காரன். இவ்வளவு பெரிய கப்பலா? அதுவும் நம்முடைய துறைமுகத்துக்கு வந்து நிற்கிறதே? நம்முடையதெல்லாம் இத்தனை சிறியதாக இருக்கிறதே? நாம் இவனை ஆள்கிறோம்.

ஆனால் நம் முன்னால் இவன் இத்தனை பெரிய கப்பலை கொண்டுவந்து நிறுத்திவிட்டானே என்று பொங்கினார்கள் பிரிட்டிஷ்காரர்கள். இவனை ஆளும் நமது ஆட்களுக்கு அறிவு வேண்டாமா? ஒரு அடிமையின் கப்பலை இங்கு கொண்டு வந்து எப்படி நிறுத்தலாம் என்று மனதில் எரிந்தார்கள்.

உடனடியாக அனைத்து வியாபாரிகளும் அரசாங்கத்திடம் சென்று முறையிட்டனர். அரசு உடனடியாக சட்டம் ஒன்றை விதித்தது.

அதன்படி இந்தியர்கள் யாரும் கப்பல் ஓட்டக்கூடாது, கப்பல் கட்டுமானம் செய்யக்கூடாது. இருக்கும் கப்பல்களில் யாரும் தலைமை பொறுப்புக்கு வரக்கூடாது. மாலுமி மட்டத்திலேயே இருக்கலாம். அப்படியே வேலைக்கு வந்தாலும் அந்த கப்பலில் 75% பேர் பிரிட்டிஷ்க்காரனாகத்தான் இருக்கவேண்டும் என்று சட்டம் போட்டார்கள்.

தமிழன் ஒருவன் கொதித்து எழுந்தான். அந்த சட்டத்திலுள்ள ஓட்டைகளை ஆராய்ந்தான். கப்பல் நிறுவனம் துவங்கினான்.

கப்பலோட்டிய தமிழன், கப்பலோட்டிய தமிழன் என்று சொல்கிறோமே, தமிழன் கப்பலே ஓட்டவில்லையா? ராஜராஜனும், ராஜேந்திரனும் ஓட்டாத கப்பலா? இந்த தமிழன் அந்நியனின் தடையை எதிர்த்து கப்பல் ஓட்டினான். வியாபாரம் செய்தான். அதுதான் சாதனை.

அந்நிய பொருட்கள் பகிஷ்காரம் செய்யும் போராட்டத்திலும், தொழிற்சாலை ஸ்ட்ரைக் போராட்டத்திலும் கலெக்டர் ஆஷ் துரைக்கு எதிராக போராடினார்.

அப்போதே கட்டம் கட்டியது அரசு. வழக்கு என்று வந்தபோது மனதில் தோன்றும் தண்டனைகளை தரலாம் என்று சட்டம் இருந்ததால் இவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை தரப்பட்டது. மாட்டை அடிப்பது போல அடித்து 16 மணி நேரம் வேலை வாங்கினார்கள். உடல் நலம் கடுமையாக குன்ற ஆறு ஆண்டுகளில் வெளியே வந்தார்.

உள்ளே செல்லும்போது திருநெல்வேலி பற்றி எரிந்தது. ஆஷ் துறையை வாஞ்சிநாதன் சுட்டு கொன்றான். வெளியே வரும்போது எண்ணி இருவர் வரவேற்றனர். அதில் ஒருவர் சுப்ரமணிய ஐயர். இரண்டாமவர் பிரிடிஷ்க்காரனால் குஷ்டரோகியாக ஆக்கப்பட்ட சுப்ரமணிய சிவா

வெளியே வந்தபோது போராட மனத்திலும், உடம்பிலும் பலமில்லை. மீண்டும் வக்கீலாகலாம் என்றால் அரசு தடை செய்திருந்தது. வாலஸ் என்ற அந்நிய அதிகாரி இவருக்காக போராடி உத்தரவை வாபஸ் பெற செய்ய வைத்தார். அதனால் தன் கடைசி பிள்ளைக்கு வாலசேஸ்வரன் என்று பெயர் வைத்தார்.

நீதிக்கட்சிக்காரர்கள் வந்து எங்கள் கட்சியில் வந்து சேருங்கள். பார்ப்பன கட்சியான காங்கிரசை எதிர்ப்போம், பார்ப்பனர்களை எதிர்ப்போம், நாத்தீகம் பேசுவோம் என்றபோது மறுத்து என் உயிர் நண்பர்களான சுப்ரமணிய சிவா ஒரு பிராமணன்.

என்னை வரவேற்ற ஒரே ஜீவன் சுப்ரமணிய ஐயர் ஒரு பிராமணன். எனக்காக ஆஷ் துறையை சுட்டு தற்கொலை செய்துகொண்ட வாஞ்சிநாதன் ஒரு பிராமணன்.

எனக்காக பாடல் எழுதி பரணி பாடிய பாரதி ஒரு பிராமணன். இவர்களையா எதிர்க்க சொல்கிறீர்கள்?

என் உயிருள்ளவரை நடக்காது என்று கூறி அனுப்பினார். எண்ணெய் வியாபாரம் செய்தார். தோற்றார்.

புத்தகங்கள் எழுதி ஒரு நாள் உயிர் நீத்தார். அந்த நாள், இந்த நாள். நவம்பர் 18, 1936 அன்று இறைவன் அவரை அழைத்துக்கொண்டான.