Thandavaraya pillai

அனைத்து வேளாளர் உறவுகளும் இந்த யூடீப் சேனலை சப்ஸ்க்ரைப் செய்து பெல் பட்டனை க்ளிக் செய்யவும் நன்றி 🙏

 

 

 

தோற்றம்

சிவகங்கை இராச்சியத்தில் திருக்கோட்டியூருக்கு அருகில் அரளிக்கோட்டை
(முல்லையூர்) எனும் கிராமத்தில் காத்தவராய பிள்ளை என்பாருக்கு மகனாக இவர் 1700ம் ஆண்டில் பிறந்தார். அவர் தமது சமுதாயத்திற்கென்றே உரிய பண்பான கல்வி ஆற்றல் விவேகம் ஒருங்கே அமைந்தவராய் உருவானார்.தமிழின் மீது பெரிய பற்று கொண்டிருந்தார்.இவர் கார்காத்தார் வெள்ளாளர் சமூகத்தை சார்ந்தவர் ஆவார் . 1740 ஆம் ஆண்டு அமைச்சராக பொறுப்பேற்றார்.அதற்கு முன் கணக்கு எழுதும் அலுவலராக பணியாற்றினார்.

தாண்டவராயன் பிள்ளையின் சிறப்புகள் :

தாண்டவராய பிள்ளையின் சிறப்புக்கள் அருங்குணங்கள் அருட்கொடைகள் தெய்வத் திருப்பணிகள் ஆகியவற்றை மிதுலைப் பட்டி எனும் ஊரில் வாழ்ந்த குழந்தைக் கவிராயர் எனும் புலவர் இயற்றிய “மான் விடு தூது” எனும் நூல் சிறப்பாக விவரிக்கிறது.

அவர் செய்த தர்மங்களையும் அவருடைய  அவயசிறப்பையும் , அவருடைய  தந்தை , தமையன்மார் , தம்பிகளுடைய பிள்ளைகள்  முதலியோர்  பற்றிய செய்திகளையும்  விளக்குகின்றார் .
இவருடைய  பரம்பைரயினர் கணக்கெழுதும்  உத்திேயாக முடையவர்கள் .
தம்முடைய உறவினர்களை மதித்துப்பாதுகாப்பவர். சங்கீதம் கற்பதிலும் அதனை கேட்பதிலும் பெரிய ஆர்வம் உள்ளவர் இவர்.
இவர் காலத்தில் சிவகங்கை  ஸம்ஸ்தானத் தைலவராக இருந்த  ராசபுலி வடுகநாத துரை என்பவர்  இவருடைய  அறிவின் திறமையையும் , ஆற்றலையும்  உணர்ந்து இவைரத்
தமக்கு மந்திாியாக அமர்த்திக்கொண்டார்.அந்த  ஸம்ஸ்தான காாியங்கள்
யாவற்றையும்  இவர் மிகவும்  சிறப்பாக  நடத்தி வந்தார் .
அதிகார ஒழுங்கினாள்   ஸம்ஸ்தானாதிபதி அனைவரும் கவலையின்றி வாழ்ந்து வந்தனர்.
இவருக்கு,அவர் பல்லக்கு, தண்டிகை , கவாி, குைட, காளாஞ்சி, குதிரை , ஊர்  முதலிய பரிசுகளை  வழங்கினார்.தாண்டவராய பிள்ளை வீரமும் , கணக்கில்  நுட்பமும் தெளிந்த அறிவும் , இன்னாரை இன்னார் போல நடத்தவேண்டும் என்ற தகுதி உணர்ச்சியும் பெற்று இருந்தார்.
ஸம்ஸ்தானத்தின் வளங்களை போற்றி பாதுகாத்தார்.ஆயக்கலைகளை கற்றுதெரிந்துருந்தார்.பிறருக்கு கற்றும்கொடுத்தார்.சின்ன மருது அவர்களுக்கு பயிற்சியும் கொடுத்தார் இம் மனிதன். ஆகவே மருதுசகோதர்களுக்கு இவர் மீது பற்று ஏற்பட்டது.

பிரதானியின் குடும்பம்:

இவருக்கு  இராமகிருஷ்ணா பிள்ளை ,விசிவநாத பிள்ளை ,சூாிய நாராயண பிள்ளை என்னும்  மூன்று தமையன்மார்கள் இருந்தனர் ; அம்மூவருக்கும்  பத்மநாப பிள்ளை ,சசிவர்ணராச பிள்ளை , சுப்பிரமண்ய பிள்ளை  என்பவர்கள் புதல்வர்கள்;
இன்னவர் இன்னவருடைய குமாரர் என்று தெரியவில்லை.
தாண்டவராய பிள்ளைக்கு இராமகிருஷ்ணா பிள்ளை என்ற ஒரு குமாரர் இருந்தார்.தன்னுடைய தமையனின் பெயரையே தன்மகனுக்கு சூட்டினார். அவருக்கு ஒரு சகோதரி உண்டு .அவளுடைய கணவரின் பெயர் நமசிவாய பிள்ளை.இவர்களின் புதல்வன் பெயர் கைலாச பிள்ளை ஆவர்.
இன்றும் அவரது குடுபத்தினர் மதுரை, திருக்கோஷ்டியூர், சிவகங்கை ,சென்னை போன்ற பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

பிரதானிப் பணி

மதுரை மன்னருக்கான போட்டியில் பங்காரு திருமலை நாயக்கரை எதிர்த்த ஆற்காட்டு நவாபு சந்தா சாகிபு, பங்காரு திருமலையையும் அவர்தம் மகன் விஜயகுமார் நாயக்கரையும் அம்மைய நாயக்கனூர் போரில் தோற்கடித்த பின்னர் நாயக்கர்களுக்கு சசிவர்ணத்தேவரின் வீரமும் தாண்டவராய பிள்ளையின் விவேகமும் பெரு துணையாக நின்று சிவகங்கை அருகே உள்ள வெள்ளிக்குறிச்சிக் கோட்டையில் இரு நாயக்கர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து உதவிற்று.

மதுரைமீது படையெடுப்பு

சசிவர்ணர் 1750 இல் காலமானார். அவரது மகன் முத்துவடுகநாதத் தேவர் மன்னரானார். 1752 இல் ராமனாதபுரச் சேதுபதியும் முத்து வடுக நாதரும் விஜய குமார் திருமலை நாயக்கரை மதுரை மன்னாராக்கினர். மைசூர் தளபதி மாயனா விஜயகுமாரை மன்னர் பதவியிலிருந்து விரட்டியடித்தார். ராம நாதபுரம் தளபதி வெள்ளையன் சேர்வைகாரரும் சிவகங்கை பிரதானி தாண்டவராய பிள்ளையும் மதுரை மீது படையெடுத்து மாயனாவைத் தோற்கடித்தனர்.

பிள்ளையின் கோவில் திருப்பணிகள்

சைவப் பெருங்குடியில் உதித்த இயற்கை இறை நேசர் தாண்டவராய பிள்ளை குன்றக்குடி முருகன் கோவிலைப் புதுப்பித்தார்,அங்கு வையாபுரி தடாகம் நந்தவனம் வேத பாடசாலை அமைத்தார்.
திருப்புத்தூரில் வைரவ நாத சுவாமி கோயிலுக்கும் திருக்கோட்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோவிலுக்கும் ஏராளமான திருப்பணிகளைச் செய்தார்.
பூசை முதலியவற்றை  பக்தியுடன் செய்பவர் ;
பலவைகயான தர்மங்களை புரிந்தவர்.
இவர் முருக பெருமானுக்கு  நித்தியக் கட்டளை , சுவாசி கட்டளை , தைப்பூச கட்டளை  என்பவை  நன்கு நடைபெறச்செய்தார்.
திருப்பத்தூரில் எழுந்துஅருளியுல  ஸ்ரீ தளீசுவரர், வயிரவ மூர்த்தி , பிரான்மைலயில் எழுந்தருளியுள்ள மங்கை பாகர், வயிரவர், திருக்கோஷ்டியூர்  ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள்  என்னும் மூர்த்திகளுக்கு  மண்டபம், மதில், நந்தவனம், வாகன, நெய்  விளக்கு முதலியவற்றை அமைத்து  குறையின்றி நடை பெறச்செய்தார்.
தென்பாகனேரி என்னும் ஊருக்கு  வடக்கே இருந்த பெரிய  கட்டை  அழித்து ஊராகி அங்கே சோலைகளை அமைத்து அங்கே ஒரு பெரிய தடாகம் அமைத்து , அதற்கு தன் மன்னனின் பெயரான “முத்து வடுகநாத சமுத்திரம் ” என பெயரிட்டார்.
சோழபுரம்  என்னும்  ஊாில் திாியம்பக தீர்த்தத்தை  இவர் உண்டாக்கினார்.
வைகை நதிக்கரையிலுள்ள  பரம்பரைக்குடியில்   குளம் , கிணறு போன்றவையே வெட்டி நந்தவனம், பூஞ்சோலை , மடம்,  அகியவற்றை அமைத்தார்.
இவர் ஜோதிடத்தில் சிறந்த வல்லுனராக  விளங்கினார் எனவே,திருக்கோஷ்டியூரில் அவர் உருவாக்கிய தெப்பக்குளத்திற்கு “ஜோசியர் தெப்பக்குளம்” என்று மக்கள் பெயர் சுட்டி இன்றும் அழைத்து வருகின்றனர்.

தாமரைப் பட்டயம் வழங்கல்

சிவகங்கை சமஸ்தானத்தை உருவாக்கி மன்னர் சசிவர்ணத் தேவரின் மனதில் நீங்காத நிறைவான இடத்தைப் பெற்றப் பிள்ளையைப் பாராட்டி மன்னரது மகன் முத்துவடுகநாதத் தேவர் அவருக்கு ஒரு தாமரைப் பட்டயம் வழங்கி பிள்ளையைப் பெருமைப் படுத்தியுள்ளார். பிரபா வருடம் (28-4-1747) சித்திரை மாதம் 16 ம் தேதி இந்த பட்டயம் தாண்டவராய பிள்ளைக்கு முத்துவடுகநாதத் தேவர் மற்றும் சசிவர்ணத் தேவரின் கைகளால் வழங்கப்பட்டது.

காளையார் கோவில் போர்

ஆற்காடு நவாபிற்கும் ஆங்கிலேயருக்கும் சிவகங்கை மற்றும் இராமநாதபுரத்தின் மீது ஆசை வருகிறது. 1772 மே மாதம் திருச்சியிலிருந்து மேஜர் ஸ்மித், மதுரையிலிருந்து பான்ஜோர் தலைமையிலும் படை புறப்படுகிறது. அந்தச் செய்தி கேட்டு சிவகங்கை கொதிக்கிறது.

ஆங்கிலேயர்கள் சிவகங்கையின் இரு பக்கங்களைத்தாக்க கிழக்கிலிருந்து ஜோசப்ஸ்மித் மற்றும் மேற்கில் இருந்து பெஞ்சூர் ௧௭௭௨ ஆம் ஆண்டு சிவகங்கை பளையம் மீது படையெடுத்தனர். சிவகங்கை பாளைய நாடு முழுவதும் பெரிய முள் நிறைந்திருந்தன. ராஜா முத்து வடுகநாத தேவர் படையெடுப்பை எதிர்பார்த்து சாலைகளில் தடைகளை அமைத்தார் காளையார்க்கோவில் காடுகளில் அகழிகளை நிறுவினார்.

1772 ஆம் ஆண்டின் 21 ஆம்தேதி, ஸ்மித் மற்றும் பெஞ்சூர் ஆகியோர் சிவகங்கை நகரை ஆக்கிரமித்து கைப்பற்றினர். அடுத்தநாள், ஆங்கிலப்படைகள் காளையார்கோவிலுக்கு அணிவகுத்து கீரனூர் மற்றும் சோழபுரம் பகுதிகளை கைப்பற்றின. 1772 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் தேதி சிவகங்கைப் படைகளை பெஞ்சர் முற்றுகையிட்டார். ராஜா முத்து வடுகநாதர் மற்றும் அவரது பல வீரர்களுடன் அந்த வீர போரில் இறந்து விட்டார்.சிவகங்கை அரசர் முத்துவடுகநாதர் இறந்த செய்தி கேட்டு தாண்டவராய பிள்ளை மெய் கலங்கிப் போனார். மன்னர் முத்துவடுகநாதர் போரில் இறந்த செய்தியை மருது சகோதரர்கள் மற்றும் தாண்டவராய பிள்ளை அவர்கள் கொல்லங்குடியில் தங்கியிருந்த ராணி வேலுநாச்சியாரிடம் சென்று தெரிவித்தனர். முத்து வடுகநாதர் இறந்தவுடன் வேலு நாச்சியார் உடன்கட்டையேறி, தனது உயிரைப் போக்கிக் கொள்ள விரும்பினார்.

பிரதானி தாண்டவராய பிள்ளை மற்றும் பெரிய மருது, சின்ன மருது முதலியோர் வேலுநாச்சியாரை சமாதானம் செய்து இழந்த சீமையை எவ்வகையிலும் எங்கள் உயிரைக் கொடுத்தாவது மீட்டுத் தருவதாக அவருக்கு வாக்குறுதி வழங்கினர்.

ராணியும் பிள்ளையும்:

முத்து வடுக நாதர் தம் மனைவி ராணி வேலு நாச்சியார், இளவரசி வெள்ளச்சி நாச்சியார் தாண்டவராய பிள்ளை மற்றும் மருது இருவர் உதவியுடன் மேலூர் வழியாக  திண்டுக்கல் அருகே உள்ள விருப்பாச்சிக்கு விரைந்தனர்.தாண்டவராய பிள்ளை திண்டுக்கல் கோபால நாயக்கரிடம் மிகுந்த நட்பு கொண்டு இருந்தார். எனவே நாச்சியார் மற்றும் மருது சகோதரர்களை ஆழைத்து கொண்டு விருப்பாட்சியில் தஞ்சம் புகுந்தனர்.

தாண்டவராய பிள்ளையின் நெருங்கிய நண்பரான கோபால நாய்க்கர், அவர்களுக்கு மிகுந்த பாதுகாப்பும் தங்குவதுற்கும் இடம் போன்றவற்றை வழங்கினார்.
திண்டுக்கல் கோட்டைத் தளபதியாக ஹைதர் அலியின் மைத்துனர் சையத் சாகிப் என்பவர் பொறுப்பு வகித்தார். ராணி வேலுநாச்சியாரையும், தாண்டவராய பிள்ளையையும், மருது சகோதரர்களையும், கோபால நாயக்கர் சையத் சாகிப்பிற்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

சிவகங்கையில் நவாபின் ஆட்சி ஏற்பட்டது. ராணி வேலு நாச்சியாரை மீண்டும் சிவகங்கை அரியணையில் ஏற்ற பிள்ளை திண்டுக்கலிருந்த ஹைதர் அலியின் உதவியை நாடினார்.

பிரதானி தாண்டவராயபிள்ளை 8-12-1772 வேலுநாச்சியார் சார்பாக ஹைதர் அலிக்கு   ஒரு கடிதமெழுதி ஐயாயிரம் குதிரை வீரர்களையும், ஐயாயிரம் போர் வீரர்களையும்  அனுப்பி வைத்தால், அவர்களுடன் இணைந்து போரிட்டு, இரு சமஸ்தானங்களையும்   நவாபிடமிருந்து கைப்பற்ற இயலுமென்றும், தங்களுக்கு செலுத்த வேண்டிய ‘நஜர்” (செலவு தொகை) பின்னர் முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அக்கடிதம் எழுதும் பொழுது தாண்டவராயன் பிள்ளை தொண்டைமண்டலத்தில் உள்ள பயக்குடி என்னும் ஊரில் இருந்தார்.சிவகங்கை மட்டுமல்ல ஏனைய பாளையங்களையும் மீட்டு  தருவதாக  ஹைதர் அலியும் தாண்டவராய பிள்ளையிடம் உறுதியளித்தார்.மேலும் பிரதானி, சிவகங்கைச் சீமை நாட்டார்களுக்கும், தூதுவர்கள் மூலம் செய்தி அனுப்பி, அவர்களுடன் தொடர்பு வைத்திருந்தார். சிவகங்கைச் சீமையை விடுவிப்பதற்கான பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டார். பிள்ளையின் கனவை நினைவாக்க மருது சகோதரர்கள் அல்லும் பகலும் உறங்காமல் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.
சிவகங்கைச் சீமையை மீட்பதற்குப் பிரதானி தாண்டவராயபிள்ளை மறைமுகமாக மருதுபாண்டியர்கள் உடன் சேர்ந்து செயல்படுகின்றார் என்பதை நவாப்பும், கம்பெனியாரும் அறிந்து கொண்டனர். நவாப்பின் மகன் உம்தத்-உல்-உமராவிற்கு இச்செய்தி கிடைத்தவுடன் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட்டார். பிரதானியின் முயற்சியை முறியடிப்பதில் மிகவும் தீவிரமாகச் செயல்பட்டார்.

சிவகங்கை பிரதானியின் மரணம்:

சிவகங்கை சீமையின் முதல் அமைச்சரான தாண்டவராயன் பிள்ளை அவர்கள் வயது முதிர்வின் காரணமாக விருப்பாட்சி பாளையத்தில் இருந்தபோது காலமானார்.உடல் நலிவுற்று முதுமையின் காரணமாக படை உதவி கேட்ட ஆறு மாதங்களுக்குள் 1773ம் ஆண்டு இம்மண்ணுலகைவிட்டு மறைந்தார்.

தாண்டவராய பிள்ளை மரணித்த பிறகு குழந்தைக் கவிராயர் இராமகிருஷ்ணா பிள்ளையிடம் ஆறுதலையும் தெரிவித்தார். வேலு நாச்சியார் சகோதரர்கள் அனைவரும் இறுதி அஞ்சலியில் பங்கேற்றனர். சிவகங்கை அன்று சோகக்கடலில் மூழ்கியது..

தாண்டவராய பிள்ளையின் கனவை நினைவாக்க வேண்டுமென்று மருது சகோதரர்கள், பிள்ளையவர்கள் விட்டுச் சென்ற பெரும்பணியைத் திறம்படத் திட்டமிட்டுச் செயல்படுத்தினர். அதில் வெற்றி பெற வேண்டுமென்று அவர்கள் தீவிரமாக உழைத்தனர்.