திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திற்கு கலைஞர் பெயர் வைக்க கூடாது

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு வர தயார் நிலையில் உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதி பெயர் வைப்பதற்கு திருப்பூர் மேயர் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்…
 ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.54 கோடி செலவில் அடுக்குமாடி வாகன நிறுத்தம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, பயணிகளுக்கான பொருட்கள் வைக்கும் அறைகள் ,பேருந்துகள் வருகை அறிவிப்பு போன்ற நவீன வசதிகளுடன் திருப்பூர் பழைய பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு வர தயார் நிலையில் உள்ளது.
விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட இருக்கும் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திற்கு யார் பெயரை வைக்கலாம்?
1932 ல் காங்கிரஸ் இயக்கம் தடை செய்யப்பட்ட போது பொதுக்கூட்டங்கள். ஊர்வலங்கள் நடத்த தடைவிதிக்கப்பட்டிருந்தது. தேச நலனை மட்டுமே மனதில் கொண்டு காவல்துறையின் உத்தரவையும் மீறி வெள்ளைக்காரர்கள் அடக்குமுறையை எதிர்த்து நாட்டின் சுதந்திரத்திற்காக ஊர்வலம் நடத்தியபோது காவலர்கள் நடத்திய தடியடியில் பலத்த காயமடைந்து தனது மண்டை உடைந்து ரத்தம் சொட்டச்சொட்ட,  தனது உயிர் பிரிந்து கொண்டிருக்கும் நிலையில்கூட தேசியக்கொடியை இருக்கமாக பிடித்து இருந்தார் என்பது வரலாறு. அப்பேர்பட்ட வரலாற்று  சிறப்பினை பெற்ற சுதந்திர போராட்ட தியாகி கொடிகாத்த திருப்பூர் குமரனின்  பெயரை வைக்கலாம்…
அதுபோல் இந்திய நாட்டின் விடுதலைக்காக தமது செத்து அனைத்தும் இழந்து சுதேசி கப்பல் கம்பெனி ஆரம்பித்து. கப்பலோட்டிய தமிழன் என்று பெயர் பெற்று. சிறைக்கு சென்று செக்கிழுத்தார் இப்படி பல தியாகங்கள் செய்த தமிழர் தந்தை வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் பெயரை வைக்கலாம்…
கொங்கு மண்ணில் வெள்ளையனை நடுங்க வைத்த மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர் பெயர் வைக்கலாம்…
இது போன்ற பல தியாகங்கள் செய்த வீரர்கள் இருக்கிறார்கள். இவர்கள் பெயரை வைக்கலாம்…
வை.பி.பாலாபிள்ளை
சுதேசி செய்திகள்