V.o.c uyil

வ.உ.சிதம்பரனாரின் உயில் ஒரு பகுதி இது

இப்போழுதும் ₹200 விலை போகக் கூடிய சட்ட புஸ்தகங்கள் என்னிடமிருக்கின்றன அவற்றை விற்க வேண்டும்.

என் மனைவி மக்களுக்கு அன்னவஸ்திர கல்வி செலவுகளுக்கு யாதொரு ஐவேசுமில்லை. அதற்கு ஒரு நிதியுண்டு பண்ண நான் முயல்கிறேன். என் நிலங்களில் நஞ்சை தவிர பெரிய புஞ்சை தவிர பெரிய புஞ்சை சங்கிலி இரண்டும் தோட்டமும் என் தங்கை அன்னவஸ்திரத்திற்காக விடப்பட்டுள்ளன…

தூத்துக்குடி நேஷனல் பேங்க் ஆப் இந்தியா லிமிடெட்டுக்கு 5 மாத வீட்டு வாடகை ₹135

தூத்துக்குடி சரோஜினி ஸ்டோர்ஸ் ஜவுளி பாக்கி ₹30

வன்னியஞ் செட்டியார் எண்ணெய் கடைக்கு ₹30

சில்லறை கடன் ₹60

இன்ஸ்பெக்டர் பிள்ளைக்கு ₹20

சோமநாத்துக்கு ₹16

வேதவல்லி ₹50

எனது தம்பி மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு சாப்பாடு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்

உண்மையான சத்திய சோதனையும், நெஞ்சுக்கு நீதியும் இதுதான், இந்த உயில்தான்

“சிறையில் நான் இழுத்தது செக்கு அல்ல, அது பாரதமாதாவின் தேர்” என சொன்ன அந்த அப்பழுக்கில்லா தேசபக்தனின் தியாகத்தின் சின்னமாக நிற்கின்றது இந்த உயில்..

 

V.O.C SONGS DOWNLOAD