V.O.C

ஐயா வ.உ.சிதம்பரம்பிள்ளை பற்றி சில வரலாறு:

1.வ.உ.சி.யின் முழுமையான பெயர் என்ன? வ.உ.சிதம்பரனார்
2. வ.உ.சி எந்த மாவட்டத்தில் பிறந்தார்? அப்போதைய திருநெல்வேலி மாவட்டம்
3. வ.உ.சி எந்த ஊரில் பிறந்தார்? ஒட்டப்பிடாரம்
4. வ.உ.சி.யின் தந்தை பெயர் என்ன? உலகநாதபிள்ளை
5. வ.உ.சி.யின் தாயார் பெயர் என்ன? பரமாயி அம்மாள்
6. வ.உ.சி எப்போது பிறந்தார்? 05.09.1872
7. வ.உ.சி.யுடன் உடன்பிறந்தோர் எத்தனைபேர்? நான்கு இளைய சகோதரர்கள் இரண்டு இளைய சகோதரிகள்
8. வ.உ.சி.யின் தந்தை என்ன தொழில் செய்தனர்? வழக்கறிஞர்
9. வ.உ.சி. என்ன தொழில் செய்தார்? வழக்கறிஞர்
10. வ.உ.சி. எந்த பள்ளியில் சேர்க்கப்பட்டார்? ஒட்டப்பிடாரத்திலுள்ள திண்னைப்பள்ளியில்
11. வ.உ.சி யின் ஆசிரியர் பெயர் என்ன? வீரப்பொருமாள் அண்ணாவி
12. வ.உ.சி முதன்முதலில் எம்மொழியில் கல்வி பயின்றார்? தமிழ் வழிக்கல்வி
13. தன்மகன் வழக்கறிஞர் ஆக ஆங்கில வழிக்கல்வி பயிலவேண்டும் என்பதற்காகவே ஒட்டப்பிடாரத்தில் ஆங்கில வழி பள்ளியை துவங்கியவர் யார்? வ.உ.சி.யின் தந்தை உலகநாத பிள்ளை
14. வ.உ.சி.எந்த பள்ளியில் தனது உயர்நிலைப் படிப்பை தொடர்ந்தார்? தூத்துக்குடி செயின்ட் சேவியர் உயர்நிலைப்பள்ளி
15. வ.உ.சி. எங்கு தனது மெட்ரிகுலேசன் படிப்பை முடித்தார்? கார்டுவெல் கல்லூரியில்
16. வ.உ.சி.எந்த சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றார்? திருச்சி சட்டக்கல்லூரி
17. வ.உ.சி எந்த ஆண்டு சட்டப்படிப்பை முடித்தார்? 1895
18. வ.உ.சி. எந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார்? ஒட்டப்பிடாரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம்
19. வ.உ.சி. எந்த வழக்குகளில் சிறந்தவராக திகழ்ந்தார்? கிரிமினல் வழக்குகள்
20. வ.உ.சி எத்தகைய வழக்குகளை எடுப்பது இல்லை? பொய் வழக்குகள் நீதிக்கு புறம்பான வழக்குகளை எடுப்பது இல்லை
21. வ.உ.சி 1900ல் எங்கு வழக்கறிஞராக பணியாற்ற சென்றார்? தூத்துக்குடி
22. வ.உ.சி தனது எத்தனையாவது வயதில் திருமணம் செய்து கொண்டார்? 23
23. வ.உ.சி.யின் மனைவி பெயரென்ன? வள்ளியம்மை
24. வ.உ.சி.யின் மனைவி எந்த ஆண்டு இறந்தார்? 1901
25. வ.உ.சி.யின் இரண்டாவது மனைவியின் பெயரென்ன? மீனாட்சி அம்மாள்
26. சுதேசிக் கொள்கை என்றால் என்ன? உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும் அன்னியப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது
27. பிரிட்டி இந்திய ஸ்டீம் நாவிகேசன் கப்பல் எந்த இரு நாடுகளுக்கு இடையே இயங்கியது? இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே
28. பிரிட்டிஷ_க்கு எதிராக சுதேசிக் கப்பல் கம்பெனியை துவங்கியது யார்? வ.உ.சிதம்பரனார்
29. வ.உ.சி.யின் சுதேசி கப்பல்களால் பாதிக்கப்பட்டது யார்? பிரிட்டிஷ் வணிகர்கள்
30. வ.உ.சி.யின் சுதேசி கப்பல் கம்பெனி எந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டது? 1906
31. வ.உ.சி தொடங்கிய சுதேசி கப்பல் கம்பெனியின் தலைவராக வ.உ.சி யாரை நியமித்தார்? மதுரை தமிழ்ச்சங்க தலைவர் பாண்டித்துரை தேவர்
32. வ.உ.சி தொடங்கிய சுதேசி கப்பல் கம்பெனியில் பயன்படுத்தப்பட்ட வாடகை கப்பல்கள் யாருக்கு சொந்தமானது? சலைன் ஸ்டீமர்ஸ் கம்பெனி
33. பிரிட்டீஷாரின் அச்சறுத்தலுக்கு பயந்து சுதேசி கப்பல் கம்பெனிக்கு தனது கப்பல்களை வாடகைக்க தரமறுத்தவர் யார்? சலைன் ஸ்டீமர்ஸ் கம்பெனியின் உரிமையாளர் எஸ்ஸாஜிபாஜ் பாய்
34. இலங்கையின் இருந்து கப்பலை குத்தகைக்கு பேசி இந்தியாவிற்கும் இலங்கைக்கு இடையே இயக்கியவர் யார்? வ.உ.சி
35. சொந்தமாக கப்பல் வாங்குவதற்காக வ.உ.சி எங்கு சென்றார்? பம்பாய்
36. கப்பல் வாங்குவதற்காக வ.உ.சி பம்பாய் சென்றபோது நோய்வாய்பட்டடிருந்த தனது ஒரே மகன் உலகநாதனை காணவரும்படி உறவினர்கள் அழைந்தபோது வ.உ.சி என்ன சொன்னார்? கப்பல் வாங்காமல் வரமாட்டேன் என்றார்
37. தனது மகன் உலகநாதன் இறந்த போது வ.உ.சி எங்கிருந்தார்? பம்பாய்
38. வ.உ.சி பம்பாயில் வாங்கிய கப்பலின் பெயர் என்ன? காலிபா
39. வ.உ.சி.யின் நண்பர் எஸ்.வேதமூர்த்தி பிரான்ஸ் நாட்டிலிருந்து வாங்கி வந்த கப்பலின் பெயர் என்ன? லாவோ
40. ஒரே நேரத்தில் இரண்டு கப்பல்களை ஓட்டிய வ.உ.சியை மக்கள் எவ்வாற அழைத்தனர்? கப்பலோட்டிய தமிழர்
41. சுதேசி கப்பல் கம்பெனியை விட்டு நீங்கள் விலகினால் ஒரு லட்சம் ரூபாய் தருவதாக(1906)வ.உ.சி.யிடம் கூறியவர்கள் யார்? பிரிட்டிஷ் வணிகர்கள்
42. பிரிட்டிஷார் ஒரு லட்சம் ரூபாய் தனக்கு தருவதாக கூறியதை ஏற்காமல் சுதேசி கப்பல் கம்பெனியை தொடர்ந்து நடத்தியவர் யார்? வ.உ.சி
43. வ.உ.சி.சுதேசி கப்பல் கம்பெனி மட்டுமல்லாது வேறு எதை எல்லாம் துவங்கினார்? 1.சென்னை விவசாயக் கைத்தொழில் சங்கம் 2. தரும சங்க நெசவுச்சாலை 3. தேசிய பண்டகச்சாலை
44. வ.உ.சி.யின் சுதேசிக்கப்பல்களை முடக்க பிரிட்டீசாருக்கு உதவியவர்கள் யார்? இந்திய அதிகாரிகள்
45. வ.உ.சி 1908ல் என்ன சங்கத்தை நிறுவனார்? தேசாபிமானச் சங்கம்
46. வ.உ.சி.யின் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட தலைவர் யார்? சுப்பிரமணிய சிவா
47. வ.உ.சி எந்த மில் தொழிலாளர்கள் பிரச்சனைக்காக போராடினார்? ஆங்கிலயர்களின் தூத்துக்குடி கோரல்மில்
48. 1908ம் ஆண்டு மார்ச் 12ம் நாள் எந்த மாவட்ட கலெக்டர் வ.உ.சியையும் சுப்பிரமணிய சிவாவையும் அழைத்து பேசினார்? திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் விஞ்ச்
49. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வ.உ.சி.யிடன் என்ன உறுதிமொழி கடிதம் கேட்டார்? சுதந்திர போராட்டங்களில் கலந்து கொள்ளக்கூடாது என்ற உறுதிமொழிக்கடிதம்
50. சுதந்திர பேராட்டங்களில் தொடர்ந்து ஈடுபடுவேன் என கூறிய வ.உ.சியை திருநெல்வேலி கலெக்டர் என்ன செய்தார்? கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்
51. கைது செய்யப்பட்ட வ.உ.சிக்கும் சுப்பிரமணியசிவாவுக்கும் எத்தனை ஆண்டுகள் சிறைதண்டனையை திருநெல்வேலி மாவட்ட செஷன்ஸ் கோர்ட் வழங்கியது வ.உ.சிக்கு நாற்பது ஆண்டுகள் அந்தமான் சிறை தண்டனை சுப்ரமணிய சிவாவுக்கு 10 ஆண்டுகள் அந்தமான் சிறை தண்டனை
52. வ.உ.சிக்கு 40 ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிபதி யார்? பின்ஹே என்ற ஆங்கிலேயர்
53. வ.உ.சி முதன் முதலாக சிறை சென்றபோது அவருக்கு வயது என்ன? 35 வயது
54. வ.உ.சிக்காக ஆதரவாக நீதிமன்றத்தில் சாட்சி கூறிய தேசியகவி யார்? மகாக்கவி பாரதியார்
55. பாரதியை விசாரித்த ஆங்கிலேய நீதிபதி பின்ஹே என்ன கூறினார்? தேசபக்தி பாடல்களை இயற்றி இளைஞர்களை தூண்டு விடுகிறீர்கள் உங்கள் பாட்டை கேட்டால் செத்த பிணமும் உணர்ச்சி பெற்று எழுந்து வரும் என்று கூறினார்.
56. வ.உ.சியை விடுதலை செய்யகோரி போராடிய இளைஞர்களில் துப்பாக்கியால் 4 பேரை சுட்டுக் கொன்றவர் யார்? திருநெல்வேலி துணைக் கலெக்டர்
57. நாடு முழுவதும் ஏற்பட்ட கொந்தளிப்பால் பயந்துபோன ஆங்கில அரசு வ.உ.சிக்கு எத்தனை ஆண்டாக தண்டனையை குறைத்தது? 10 ஆண்டுகள்
58. வ.உ.சிக்கு வழங்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை மேல் முறையீடு மூலம் எத்தனை ஆண்டாக அவரது ஆதரவாளர்கள் குறைத்தனர்? ஆறு ஆண்டுகள்
59. வ.உ.சி எந்தெந்த சிறைகளில் இருந்தார்? கோயம்புத்தூர் சிறை கண்ணனூர் சிறை
60. வ.உ.சிக்கு எந்த சிறையில் செக்கிழுக்கும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்? கோயம்புத்தூர் சிறை
61. வ.உ.சியின் நண்பர் சுப்பிரமணிய சிவாவுக்கு சிறையில் என்ன வேலை கொடுக்கப்பட்டது? கம்பளி மயிர் வெட்டும் பணி
62. சுப்பிரமணிய சிவாவுக்கு சிறைச்சாலையின் கொடுமையால் என்ன நோய் ஏற்பட்டது? தொழுநோய்
63. தனது ஒரே மகன் இறந்ததை கூட பொருட்படுத்தாமல் வ.உ.சி தொடங்கிய சுதேசி கப்பல் கம்பெனியை வ.உ.சி சிறையில் இருந்தபோது ஆங்கிலேய அரச என்ன செய்தது? கம்பெனியை மூடச்செய்து கப்பல்களையும் விலைக்கு வாங்கிக்கொண்டனர்
64. வ.உ.சிக்கு ஆதரவாக போராடிய 4 இளைஞர்களை சுட்டுக் கொன்ற துணை கலெக்டர் ஆஷ்-ஐ திருநெல்வேலி கலெக்டரான போது அவரை சுட்டுக் கொன்றது யார்? வீரன் வாஞ்சிநாதன்
65. வ.உ.சி. 1912ல் சிறையில் இருந்து வெளிவந்த போது யார் மட்டும் சிறை வாயிலுக்கு அவரை வரவேற்றார்? சுப்பிரமணிய சிவா
66. வ.உ.சி. சிறையில் இருந்தபோது எழுதிய நூல்கள் எவை? மனம்போல் வாழ்வு மெய்யறிவு மெய்யறம்
67. வீர வாஞ்சிநாதன் ஆஷ்-ஐ சுட்டுக்கொன்ற போது ஆஷ்-ஐ ரயிலில் எங்கு சென்றார்? திருநெல்வேலியிலிருந்து கொடைக்கானலுக்கு
68. வீர வாங்சிநாதன் ஆஷ்-ஐ என்று சுட்டுக்கொன்றார்? 17.07.1911
69. வீர வாஞ்சிநாதன் ஆஷ்-ஐ சுட்டுக்கொன்று விட்டு என்ன செய்தார்? தன்னை தானே சுட்டுக்கொன்று தற்கொலை செய்து கொண்டார்
70. வீர வாஞ்சிநாதன் ஏன் தன்னை தானே சுட்டு இறந்து போனார்? தான் அகப்பட்டால் தான் சார்ந்திருந்த புரட்சிப்படையை சார்ந்த இளைஞர்கள் மாட்டிக் கொள்வார்கள் என்று
71. வீர வாஞசிநாதன் எந்த இரயில் நிலையத்தில் கலெக்டர் ஆஷ்-ஐசுட்டுக்கொன்றார் மணியாச்சி
72. வீர வாஞ்சிநாதன் இறப்பு குறித்து வ.உ.சி என்ன கூறினார்? நாடு சுதந்திரம் பெறுவதற்காக இளைஞர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள கூடாது என்று கூறி வருந்தினார்.
73. வ.உ.சி என்று சிறையில் இருந்து விடுதலையானார்? டிசம்பர் 1912
74. ராஜதுரோகம் குற்றம் சாட்டப்படிருந்த வ.உ.சி.யின் வழக்கறிஞர் பட்டம் ஆங்கில அரசால் என்ன செய்யப்பட்டது? இரத்து செய்யப்பட்டது
75. தனது வழக்கறிஞர் அங்கீகாரத்தை பெற வ.உ.சி எங்கு சென்று தங்கி முயற்சி மேற்க்கொண்டார்? சென்னை
76. சென்னையில் தங்கியிருந்த வ.உ.சி எந்த தொழிற்சாலை சங்கத்தின் பிரதிநிதியாக செயல்பட்டார்? பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை சங்கம்
77. வ.உ.சி.யின் வழக்கறிஞர் அங்கீகாரத்தை பெற அவருக்கு உதவிய ஆங்கிலேய நீதிபதி யார்? நிதிபதி வாலஸ்
78. நீதிபதி வாலஸ் தனக்கு செய்த உதவிக்காக வ.உ.சி என்ன செய்தார்? தனது மகனுக்கு வாலீஸ்வரன் என பெயர் வைத்தார்
79. வ.உ.சி தனது மகன் ஆறுமுகத்திற்கு ஏன் அப்பெயரை வைத்தார்? சுதேசி கப்பல் இயக்க உதவியாக இருந்த ஆறுமுகம் பிள்ளை நினைவாக
80. வ.உ.சி. தனது மகள் வேதவள்ளிக்கு ஏன் அப்பெயரை வைத்தார்? தனக்கு பொருளுதவி செய்த வேதியப்பர் நினைவாக…