veera kodi velalar

வீரக்குடி வேளாளர் வரலாறு

முசுகுந்த நாடு என்பது முசிறி என்ற ஊரை தலைமையிடமாக கொண்டு
முசுகுந்த நாடு என்பது முசிறி என்ற ஊரை தலைமையிடமாக கொண்டு வாழ்ந்தது வந்த முசுகுந்த சக்கரவர்த்தி என்ற அரசனின் தலைமையின் கீழ் வாழ்ந்த்த மக்களின் பகுதி…

ஆரம்பத்தில் இது 32 கிராமமாகவும் பின்னர் 36 கிராமமாகவும் மாறியது என்பது வரலாறு…இங்உங்கள் கற்பனைக் குதிரையை காலத்தின் பின்நோக்கி தட்டிவிடுங்கள். கட்டிடங்கள் இல்லாத, வாகனங்கள் இல்லாத ஆதிகாலம். குறிஞ்சி நிலத்தில் மட்டுமே மக்கள் வாழ்ந்த காலம். எங்குநோக்கினும் பசுமை மரங்களும், வன விலங்குகளும், பெயர் தெரியாத பறவைகளும் இருக்கின்றன. மனிதன் தன் பாதுகாப்பிற்காக மரத்தின் தடியை உபயோகிக்க தொடங்குகிறான். அதன் பரிணாமத்தில் கூரான கல்லை அதன் முனையில் இணைக்கிறான். அதிதமிழனின் முதல் ஆயுதமான வேல் உருவான வரலாறு இதுதான். இன்றுவரை அதன் ஆதாரம் முருகன் வடிவில் இந்துமதத்தினால் காக்கப்பட்டு வந்திருக்கிறது. குறிஞ்சி நிலத்தலைவன் அல்லது தெய்வம் சேயோன் என்கிற முருகன் என்பதை ஞாபகத்தில் கொள்ள வேண்டும். பிராமணர்களின் திரிபு காரணமாக சக்தி கொடுத்தாக கதையிருந்தாலும் உண்மை இதுதானே.

வேல், சூலம், வில் போன்றவை வனமிருங்களை வேட்டையாட பிறந்தவை. அரம்,வாள்,கத்தி போன்றவை மனிதனுக்கு மனிதனுக்கு சண்டையிட உதவியவை. பின்நாளில் மனித சண்டைகளுக்கு நியதிகள் உண்டாக்கப்பட்டன. ஆயுத பயிற்சிகளும் ஆரம்பமாயின. வேல் கையாளுவதிற் சிறந்த வேலாளன், சூலத்தில் சிறந்த சூலன்/சூரன் – சூலத்தான், வில்லில் சிறந்த வில்லாளன் (அம்பெனும் விசியைக் கையாளத் தெரிந்த விசியன்), அரத்தில் சிறந்த அரையன், கத்தியாளுவதில் சிறந்த கத்தியன் இப்படி பிரிவுகள் உண்டாக தொடங்கின. குறிஞ்சியில் மக்கள் தொகை அதிகமாக, மக்கள் முல்லைக்கு இடம் பெயர்ந்தார்கள். முல்லையில் கால்நடைகளை வளர்க்கும் அளவிற்கு மனிதர்கள் உயர்ந்தார்கள். கால்நடைகள் செல்வங்களாக பார்க்கப்பட்டன. களவு தோன்றியது.

களவு தோன்றினால் காவலும் தோன்றுமல்லவா, காவலுக்கு தலைவன் உருவானான். மனிதர்களின் பரிணாமம் வளர்ந்து, மருத நிலத்திற்கு வந்தார்கள். மருதம் குறிஞ்சி, முல்லை போல காடுகளாக இல்லை. நீர் நிலைகள் அதிகம் உள்ள இடமாக மருதம் இருந்தது. ஆறுகளும், குளங்களும் இருந்தன. கால்நடைகளுக்கான உணவு தேவைக்காகவும், தனக்காகவும் நெல் பயிரிடுதலை ஆரமித்தான் மனிதன். குறிஞ்சி நிலத்தில் வேலாளனாக இருந்தவன், தனது ஆயுதத்தினை விவசாயம் செய்ய உபயோகிக்கிறான். வெள்ளம் என்று அழைக்கப்படும் நீரை பாசனத்திற்கு பயன்படுத்தும் அறிவை பெருகிறான். வேலாளன், வேளாளன் ஆகிறான். அதாவது குறிஞ்சி நிலத்து வேலன் முல்லை நிலத்தில் வேலாளனாகி மருத நிலத்தில் வேளாளன் ஆகிறான்.

Download Sudhesi News App here

மருத நிலத்தின் மீதான பற்று இன்னும் வெள்ளாளர்களுக்கு தீர்ந்த பாடில்லை. என் அன்னையின் பெயர் மருதாம்பாள், பாட்டாவின் பெயர் மருதபிள்ளை. இப்படி மருத நிலத்தின் ஞாபகமாக காலம் காலமாக இந்த பெயர்கள் வழக்கில் உள்ளன. ஆதித் தமிழ் மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு காரணத்தோடுதான் பெயர்கள் சூட்டினார்கள். அதுவும் அழகிய தமிழில். மருத நிலத்தில் பிறந்தவன் மருதன். பெரும்பாலும் மருத நிலத்தில் வாழ்ந்த வெள்ளாளர்களுக்கு பிள்ளை குலப் பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. இல்லத்துப் பிள்ளைமாரில் பெரும் வீரனான மருதநாயகம் பிள்ளை கூட மருத நிலத்தவன் என்ற அடையாளத்தின் எடுத்துக்காட்டாகவே இருக்கிறார்.

வீரகோடி  வெள்ளளால மக்கள் ஆவார்கள்…இவர்களின் முக்கிய தொழில் உழவுத்தொழில்..
சோழர்கள் – சேர, சோழ, பாண்டியர் எனும் தமிழ் மூவேந்தர்களில் சோழர்களும் ஒருவர். புலியை கொடியின் சின்னமாக கொண்டும், ஆத்தி மலரை சூடியும் பெருமைமிகுந்த மன்னர்களாக வாழ்ந்துள்ளார்கள். காலத்தின் அடிப்படையில் சோழர்களை முற்கால சோழர்கள், பிற்கால சோழர்கள் என வகைபடுத்தி இருக்கிறார்கள். கலை, அரசியல், சமூகம் என எல்லா துறைகளிலும் சிறந்துவிளங்கியிருக்கிறார்கள்.

சோழர்கள் என்ற பெயருக்கான காரணத்திற்கு தேவநேயப் பாவாணரும், பரிமேலழகரும் வேறு வேறு கருத்தினை தெரிவிக்கின்றார்கள். நெல்லின் மற்றொரு பெயரான சொல் எனும் பெயரே லகரம்-ழகரம் ஆகத் திரிந்து “சோழ” என்று வழங்கிற்று என்கிறார் தேவநேயப் பாவாணர். குலப்பட்டமாக சோழர் என்பது வழங்கி வந்ததாக பரிமேலழகர் கூறுகிறார். இரண்டில் எது சரி என்பதை வரலாறை ஆராய்ந்தவர்கள் தான் கூறவேண்டும்.

வெள்ளாளர் –

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐவகை நிலங்களுள், மருத நிலத்தில் செம்மைபடுத்தப்பட்ட விவசாயம் தொடங்கியது. அங்கு வெள்ளத்தை தடுத்து ,தங்கள் தொழில் நுட்ப அறிவோடு கால்வாய் மூலம் நீரை ஏரிக்கு திருப்பி, அங்கு சேமிப்பு முடிந்த உடன் உபரி நீரை அடுத்த ஏரிக்கு கடத்தி, சங்கிலி தொடர் போல நீர் மேலாண்மையை உருவாக்கி, தங்கள் விவசாயத்தின் உயர்வுக்கு பயன் படுத்திய மிகச் சாதாரண மக்கள் வெள்ளாளர் எனப்பட்டனர்.

 

VELALAR SONGS DOWNLOAD

சரி, இதனைக் கொண்டு சோழ நாட்டில் வாழ்ந்த வெள்ளாளர்களை “சோழிய வெள்ளாளர்கள்” என்று   அர்த்தம் கொள்ளாமா?. ஏறத்தாள இதுவே சரியான கருத்து என்று சொல்வேன். நாஞ்சில் நாட்டு வெள்ளாளர், கொங்கு வெள்ளாளர், தொண்டைமண்டல வெள்ளாளர், பாண்டி வெள்ளாளர் என்பவைகளின் பின்னனியும் இதைப் போன்ற குறிப்பிட்ட நாட்டின் வெள்ளாளர்களையே குறிக்கிறது. சோழிய வெள்ளாளர் என்பதில் உள்ள இரு சொல்லுக்கும் பொதுவான பொருள் பார்த்தோம். சிலர் சோழிய வேளாளர் என்றும் சொல்கின்றார்களே,. வெள்ளாளர், வேளாளர் இரண்டும் ஒன்றா என்ற சிந்தனை எழுகிறது.