Veerapagu chettiyar

வீரபாகு செட்டியார் என்னும் மாபெரும் அரசியல் ஆளுமையை வெள்ளாளர்கள் மறக்க முடியுமா???

அன்றைய காலகட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் அரசியலை தன்னந்தனி ஆளாக ஆட்சி செய்த உயர்திரு. வீரபாகு செட்டியார் இவர் தான்…

செட்டியார் என்றதும் நம்மவர்கள் மாற்று சமுதாயத்தவர் என்று எண்ண வேண்டாம்

நம்முடைய சைவ வேளாளர்களுக்கு செட்டியார் என்ற பட்டமும் உள்ளது என்பதை மறந்து விடாதீர்கள்

அதாவது சைவ வெள்ளாள செட்டியாரை, சுருக்கமாக சைவ செட்டியார் என்றழைப்பது வாடிக்கை

இந்த வீர திருமகனாரின் வாழ்க்கை வரலாற்றை நாம் மறந்து போனது நம் வம்சத்தின் துரதிஷ்டம் என்றே சொல்லலாம்….

1957 மற்றும் 1962 ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஶ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து மக்கள் பணியாற்றியவர்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் பதவிக்கு வருவது அவ்வளவு சாதாரணமான விடையமே அல்ல…

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழ்மாநில தலைவராக உயர்திரு.காமராசர் அவர்கள் பதவி வகித்ததற்கு பிறகு

அந்த உயர்வான பொறுப்பிற்கு வருவதென்பது குதிரை கொம்பான விசயம்

ஆனால் அப்பேர்பட்ட பெருமையான பொறுப்பிற்கு சர்வ சாதரணமாக தனது ஆளுமையால் வந்தவர் உயர்திரு. வீரபாகு செட்டியார் அவர்கள்

கப்பலோட்டிய கடவுள் வ.உ.சிதம்பரம் பிள்ளை ஐயா அவர்களின் திருப்பெயரில் தூத்துக்குடியில் ஒரு கல்லூரியை நிறுவி பலரின் அறிவுப்பசியை போக்கியவர்.

அகில பாரத அளவிலும் சரி, நமது தமிழகமாநில அளவிலும் சரி, ஒருங்கிணைந்த திருநெல்வேலிஜில்லா அளவிலும் சரி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொறுப்புகளில் பொறுப்பேற்று அதை திறம்பட செய்த சேவை செம்மல் இவர்.

நமது வேளாளர் சமுதாயத்தில் பிறந்து பல்வேறு இக்கட்டான சவால்களுக்கு மத்தியிலும் தனது அலப்பறிய ஆளுமையால் இரண்டு மாவட்டங்களின் அரசியல் சரித்திரத்தை நிர்ணயித்தவர் குலபதி A.P.C.வீரபாகு செட்டியார் அவர்கள்

இந்த மாமனிமதர் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்கும் சமயம் பதவி பிரமாணத்தில் தமிழ் மொழியிலே கையொப்பம் இடுவார் என்பது குறிப்பிடதக்கது

கிட்டதட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொறுப்புக்களில் பதவி வகித்த இந்த மாமனிதர், அந்த முக்கிய பொறுப்பிற்கு வரும் சமயம் தமிழ் மொழியில் கையொப்பம் இடுவார் என்றதை எண்ணும் போது வேளாளர்களின் தமிழ் மொழி பற்று வியக்கதக்கது என்பது இவர் மூலம் தெரிய வருகிறது

ஐயா நம்முடைய சமுதாயத்தில் பிறந்து நம்முடைய ஆளுமையை பல முறை தமிழகத்திற்கு பறைசாற்றி உள்ளார் என்பது அசைக்க முடியாத உண்மை

  • வீரம், விவேகம், கருணை இம்மூன்றும் வேளாளர்களின் பிறப்பு குணம்