Velalar Name Issue

தமிழ்நாட்டில் பெரும்பான்மையாகவும்,குறிப்பாக கொங்கு மண்டலத்தில் அதிகமாகவும் வாழக்கூடிய சமுகமான கொங்கு வேளாளர் வெள்ளாளர் சமூகத்தின் சாதிப் பெயரை பள்ளர்கள் சமூகத்தை சார்ந்த ஒருசிலர் தங்களுக்குள் உட்பிரிவுகளாக உள்ள குடும்பர், பள்ளர், வாதிரியார், காலாடி, கடையன், தேவேந்திரன் உள்ளிட்ட 7 குடி பெயர்களை ஒன்றினைத்து தேவேந்திர குல “வேளாளர்”என அரசானை கேட்டு அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்த கோரிக்கையை மத்திய பாஜக மோடி அரசு ஆரம்பம் முதலே ஆதரித்து வருகிறது. முக்கியமாக 2015ம் ஆண்டு பள்ளர் சமூகமும், பாஜகவும் சேர்ந்து மதுரையில் நடத்திய மாநாட்டில் அமித்ஷா அவர்கள் கலந்து கொண்டு, வேளாளர் சாதி பெயரை பள்ளர் சமுகத்திற்கு தருவதாக கூறியதோடு, அக்கோரிக்கையில் முதல் கையொப்பமாக அவரே கையொப்பமிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து திமுக ஸ்டாலின்,பாஜக முருகன் காங்கிரஸ் அழகிரியும் வரலாற்று அழிப்பிற்காகவும், வாக்கு அரசியல் இலாபத்திற்காகவும் வேளாளர் சாதி பெயரை பள்ளர் சமுகத்திற்கு தர வேண்டும் என அறிக்கைவிட்டு, தொடர்ந்து தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டின் தொன்மையான வரலாற்றில் முக்கிய பங்கு கொண்ட பாரம்பரியமிக்க சமுகமாகவும், உலகின் பெருமை மிக்க வேளாளர் நாகரீகத்தை உருவாக்கிய சமுகமாகவும் கொங்கு வேளாளர் சமூகம் விளங்கி வருகின்றது.

தொன்மைமிகு வரலாற்றில் பல பெருமைகளோடு அடையாளப்படுத்தப்பட்டு விளங்குகின்ற “வேளாளர்” என்னும் சாதிப் பெயரை வேற்று சமுகத்திற்கு பறித்து கொடுக்கும் தீய எண்ணத்தோடு, நம் சமூகத்திற்கு எதிராக திட்டமிட்டே செயல்பட்டு வரும் பாஜக, காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகளை தேர்தலில் நாம் புறக்கணிக்க வேண்டும்.

கொங்கு நாட்டின் பூர்வகுடி மக்களாகிய கொங்கு வேளாளர்களின் வரலாறு, பண்பாடு, கலாச்சாரம், வாழ்வியல்,பெருமை, தொன்மை ஆகியவைகளை பறைசாற்றும் குலப் பெயராக வேளாளர் சாதி பெயர் பல்லாயிரம் ஆண்டுகளாக அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது.

கொங்கு வேளாளர்களின் தொன்மையான வரலாற்றை இலக்கியங்கள்,கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள் மூலம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பதிவு செய்யப்பட்டு நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்து சென்றுள்ளனர். அவற்றை முன்னோர்கள் பாது காத்து கொடுத்தபடி, இத்தலைமுறையினரும், வரப்போகும் ஆயிரமாயிரம் தலைமுறைகளுக்கு கத்து கொடுக்க வேண்டியது நம் கடமையாகும்.

கொங்கு வேளாளர்களின் உட்பிரிவாக உள்ள தேவேந்திர குலப்பெயரை மாற்று சமூகத்திற்கு தாரை வார்க்க முணைவதும், அதற்கு ஆதரவளிப்பதும் வேளாளர் சமூக மக்களின் வாழ்வியல் பற்றிய புரிதலற்ற அறியாமையா? அல்லது
வேளாளர்களின் வரலாறை பறித்து கொடுத்து வேளாளர்களை வரலாற்றில் இருந்தே அழிக்கும் நோக்கமா? அல்லது அவர்களுக்கு துணையாக எந்த அரசியல் கட்சியும் வராது என்ற கொடும் சிந்தனையா? என எதுவாக இருந்தாலும் நாம் ஒன்று கூடி அவர்களுக்கு உணர வைப்போம்!

வேளாளர் என்ற நமது சாதியின் பெயரை மாற்று சமூகத்திற்கு வழங்கினால் கொங்கு வேளாளர்களின் வரலாற்று ஆவணங்களாக உள்ள இலக்கியங்கள் கல்வெட்டுகள் செப்பேடுகள், குல தெய்வ கோவில், கோவில் உரிமைகளை, தங்களுடையது என பள்ளர் சமூகம் கேட்கநேரிடும். அது மிகுந்த பின்னடைவை நம் கொங்கு வேளாளர் சமூகத்தின் எதிர் கால தலைமுறைகளுக்கு ஏற்படுத்தும். கொங்கு வேளாளர் மற்றும் ஒட்டு மொத்த வேளாளர் சமூகத்திலும் திருமண இன கலப்புகளுக்கும் வழிவகுப்பதோடு, நிரந்தர வரலாற்று அடையாள அழிப்புக்கு வித்திட்டுவிடும்.

ஏற்கனவே கொங்கு வேளாளரின் வரலாற்று அடையாளங்களாக விளங்குகின்ற பட்டக்காரர், காணியாளர், கோவில் உரிமைகள் தங்களுடையது எனவும், கொங்கு வேளாள கவுண்டர்கள் வந்தேறிகள் எனவும், பள்ளர் சமுகத்தின் நிலங்களை வேளாளர்கள் பறித்திவிட்டதாகவும், ஆதாரமற்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் பள்ளர் சமுகத்தின் நோக்கம் பட்டியல் வெளியேற்றம் என்ற பெயரில் வேளாளர் வரலாற்றை அடைவதாகவே தெரிகிறது.

ஒரு இனக்குழுவின் வரலாறு, பண்பாடு,கலாச்சாரம்,வாழ்வியல் போன்றவைகளை அறிய முணைந்தாலோ, ஆய்வு மேற்கொண்டாலோ அதை சாதியின் பெயரை கொண்டே அறியப்பட்டு வருகிறது. தனது சாதிப் பெயரை இழந்த சமூகம் வரலாற்றில் எச்சியிருக்கும் தன் அடையாளத்தையும் இழந்துவிடும், என்பதை உணர்ந்து எம் கொங்கு வேளாளர் சமுகம் இப்பிரச்சனையை மிகுந்த எச்சரிக்கையுடன் அனுகியாக வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

கொங்கு வேளாளர் சாதியின் வரலாற்று பெயரை தாரை வார்க்க துடிக்கும் கட்சிகளை கண்டித்து
ஆரம்பம் முதலே இந்த துரோக செயலை எதிர்த்து வரும் எம் கொங்கு மக்கள் முன்னணியின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் இளந்தீரன் சிஆறுமுகம் அவர்கள் தலைமையில் சேலத்தில் நடத்தப்பட உள்ள அறப்போராட்டத்திற்கு அணிதிரன்டு, அலைகடலென ஆர்பாரித்து வாரீர்! வாரீர்!!

தன்மானம் காக்க
வரலாற்று பெயரை காக்க ஒன்று திரள்வோம்! உரிமை காப்போம்!

இவன்,
கொங்கு மக்கள் முன்னணி
கொங்கு மக்கள் வரலாற்று ஆய்வு மையம்,