Velalar Name Issue

வேளாளர் சமூகத்தின் சாதிப் பெயரை பள்ளர்கள் சமூகத்தை சார்ந்த ஒருசிலர் தங்களுக்குள் உட்பிரிவுகளாக உள்ள குடும்பன், பள்ளன் , வாதிரியான் , காலாடி, கடையன், தேவேந்திரன் உள்ளிட்ட 7 குடி பெயர்களை ஒன்றினைத்து தேவேந்திர குல “வேளாளர்”என அரசானை கேட்டு அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்த கோரிக்கையை மத்திய பாஜக மோடி அரசு ஆரம்பம் முதலே ஆதரித்து வருகிறது. முக்கியமாக 2015ம் ஆண்டு பள்ளர் சமூகமும், பாஜகவும் சேர்ந்து மதுரையில் நடத்திய மாநாட்டில் அமித்ஷா அவர்கள் கலந்து கொண்டு, வேளாளர் சாதி பெயரை பள்ளர் சமுகத்திற்கு தருவதாக கூறியதோடு, அக்கோரிக்கையில் முதல் கையொப்பமாக அவரே கையொப்பமிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து திமுக ஸ்டாலின்,பாஜக முருகன் காங்கிரஸ் அழகிரியும் வரலாற்று அழிப்பிற்காகவும், வாக்கு அரசியல் இலாபத்திற்காகவும் வேளாளர் சாதி பெயரை பள்ளர் சமூகத்திற்கு தர வேண்டும் என அறிக்கைவிட்டு, தொடர்ந்து தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டின் தொன்மையான வரலாற்றில் முக்கிய பங்கு கொண்ட பாரம்பரியமிக்க சமூகமாகவும், உலகின் பெருமை மிக்க வேளாளர் நாகரீகத்தை உருவாக்கிய சமுகமாகவும் விளங்கி வருகின்றது.

தொன்மைமிகு வரலாற்றில் பல பெருமைகளோடு அடையாளப்படுத்தப்பட்டு விளங்குகின்ற “வேளாளர்” என்னும் சாதிப் பெயரை வேற்று சமூகத்திற்கு பறித்து கொடுக்கும் தீய எண்ணத்தோடு, நம் சமூகத்திற்கு எதிராக திட்டமிட்டே செயல்பட்டு வரும் பாஜக, காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகளை தேர்தலில் நாம் புறக்கணிக்க வேண்டும்.

வேளாளர் என்ற நமது சாதியின் பெயரை மாற்று சமூகத்திற்கு வழங்கினால்  வேளாளர்களின் வரலாற்று ஆவணங்களாக உள்ள இலக்கியங்கள் கல்வெட்டுகள் செப்பேடுகள், குல தெய்வ கோவில், கோவில் உரிமைகளை, தங்களுடையது என பள்ளர் சமூகம் கேட்கநேரிடும். அது மிகுந்த பின்னடைவை நம் வேளாளர் சமூகத்தின் எதிர் கால தலைமுறைகளுக்கு ஏற்படுத்தும்.  ஒட்டு மொத்த வேளாளர் சமூகத்திலும் திருமண இன கலப்புகளுக்கும் வழிவகுப்பதோடு, நிரந்தர வரலாற்று அடையாள அழிப்புக்கு வித்திட்டுவிடும்.

ஒரு இனக்குழுவின் வரலாறு, பண்பாடு,கலாச்சாரம்,வாழ்வியல் போன்றவைகளை அறிய முணைந்தாலோ, ஆய்வு மேற்கொண்டாலோ அதை சாதியின் பெயரை கொண்டே அறியப்பட்டு வருகிறது. தனது சாதிப் பெயரை இழந்த சமூகம் வரலாற்றில் எச்சியிருக்கும் தன் அடையாளத்தையும் இழந்துவிடும், என்பதை உணர்ந்து எம் வேளாளர் சமூகம் இப்பிரச்சனையை மிகுந்த எச்சரிக்கையுடன் அனுகியாக வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

வேளாளர் சாதியின் வரலாற்று பெயரை தாரை வார்க்க துடிக்கும் கட்சிகளை கண்டித்து
ஆரம்பம் முதலே இந்த வேளாளர் சமுதாயம் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

22.11.2020 முசுகுந்த நாட்டு பெண்கள் பட்டுக்கோட்டை தபால் நிலையம் அருகில் முசிறி 36 கிராமத்தில் உள்ள பெண்கள் இணைந்து வேளாளர் என்பது எங்களுடைய அடையாளம் கலாச்சாரம் பண்பாட்டு எங்களுக்கே உரிய சாதி பெயர் இதை மற்ற இனத்திற்கு விட்டு கொடுக்க மாட்டோம் இதற்கு தூண்டுதலாக இருக்கும் அரசியல் கட்சி மற்றும் மாற்று சமுதாயத்தினர் அனைவருக்கும் எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் மற்றும் கவனம் ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது…
இது வேளிர் குலமக்கள் எதற்கும் அஞ்சாமாட்டோம்…