Vellalar

சோழர் பயணம்

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுக்க, கடத்தூர் கிராமத்தில் உள்ள கல்வெட்டுகளை ஆய்வு செய்ய சென்றிருந்தேன்.

சோழர்களின் பூர்வ பகுதியான ஆறை எனும் பழையாறை யின் பாதுகாப்பினை கட்டுப்பாட்டில் வைத்திருந்த படைப்பிரிவின் பெயர் ஆயிரவர் படை. இந்த ஆயிரவர் படை பிரிவினர் தங்கியிருந்த பகுதிதான் பழையாறை பகுதியில் ஆயிரவர் படைவீடு என்று வழங்கி இன்று அது ஆரியப்படை வீடு என்று திரிபாகி தனி ஒரு ஊராக விளங்கிறது.

இவ்வாறு சோழர்களின் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றிய படைபிரிவு பிற்காலத்தில் கொங்கு நாட்டிலும் ஆறை என்ற பெயரிலேயே ஒரு பகுதியை உருவாக்கிக்கொண்டு சோழர்கள் கொங்கு நாடு குடியேறிய பிறகு இந்த ஆயிரவர் படைபிரிவும் கொங்கு நாடு குடியேறிவிடுகிறது.

இதனை “கடத்தூரான ராஜாராஜ நல்லூரில் நிலை நின்ற ஆயிரவர்” என்ற வாசகம் மூலம் இந்த ஆயிரவர் படை பிரிவு கடத்தூரில் நிலை படையாக நிறுத்தப்பட்டிருந்தார்கள் என்பதை தெளிவாக அறிய முடிகிறது.

மேலும் இந்த ஆயிரவர் படைபிரிவு வெள்ளாளர்களின் தலமையின் கீழ் இருந்தது என்பதை “கடத்தூரில் நிலைநின்ற ஆயிரவருக்கு நாயகம் குமரன் குமரனான தனஞ்செய பல்லவரையனேன்” என்றும் “கடத்தூரில் நிலைநின்ற ஆயிரவற்கு படைவளவன் வெள்ளாளன் குமரன் குமரனான தனஞ்செய பல்லவரையனேன்” என்றும் கூறும் பல கல்வெட்டுகளின் மூலம் தெளிவாக அறியலாம்.

பதிவின் படத்தில் ஆயிரவருக்கு படைவளவன் என்ற வாசகத்தை மார்க் செய்து பதிந்திருக்கிறேன் சூம் செய்து படியுங்கள்.

சோழர்களின் அத்தனை படைபிரிவுகளுமே வெள்ளாளர்கள் தலமையிலான படைபிரிவுகளே என்று பலமுறை பதிவுசெய்திருப்பேன் இக்கல்வெட்டுகள் எனது கூற்றுக்கு மென்மேலும் வலுசேர்கின்றது.

அத்துடன் வெள்ளாளர்களின் அஷ்ட மங்கலம் என்று கூறப்படும் மங்கல சின்னங்களின் புடைப்பு சிறப்பமும் இந்த ஊரில் கிடைக்கிறது அவற்றின் படத்தையும் இணைத்துள்ளேன்.

வேளாளர்கள் என்பவர்கள் வெறும் உழுகுடிகள் மட்டுமே என்ற தவறான பிரச்சாரம் இதுவரை முன்னெடுக்கப்பட்டு உளவியல் ரீதியாக தாக்கப்பட்டு வேளாளர்கள் அரசியல் ரீதியாக எழுச்சி பெறமால் பார்த்துக்கொண்டார்கள்.

ஆனால் இன்று நான்கு திசையிலும் பரந்து விரிந்து வாழும் வேளாளர்கள் தாங்கள் வெறும் உழுகுடிகள் கிடையாது தலைசிறந்த அறம் சார்ந்த போர்குடிகள் என்பதை உணர தொடங்கியதே தமிழக அரசியலில் மிகப்பெரியதிருப்புமுனை.

இந்த எழுச்சி வருங்காலங்களில் விருட்சமாய் வளர்ந்து நிற்கும் என்பதில் கடுகு அளவு கூட சந்தேகம் இல்லை.

சோழர்களின் ஆட்சி காலமே வேளாளர்களின் பொற்காலம்

மீண்டும் சோழராட்சி அமைப்போம்.

சோழம் மீளும்

நன்றி
சோழர் சிவப்பிரகாஷ்.
22/11/2020