Vellalar

 

பண்பாடுகளின் தாயகமாக விளங்கும் பெருமைமிகு பெயரே வேளாளர்

வேளாளர் விளக்கம்

வேளாளர் என்பார் வள்ளன்மையால் மிக்கிருக்கும் தாளாளராவர்..
வேளாண்மையாவது உழுதுண்டு வாழும் வாழ்வாகும்…
தாளாண்மையாவது இம்முயற்சியால் ஈட்டிய பொருளைத் தக்கார்க்குக் கொடுத்து மகிழ்வதாகும்.. 🙏🏻
இவ்விரு பண்புகளோடு வாய்மை குன்றா வகைமையோடு வாழ்ந்தவரே வேளாளர்❗ 👍🏼

வேளாளர்கள் சக்தியின் மைந்தர்கள் எனவே பிள்ளை என குறிக்கப்பட்டு வந்திருக்கின்றனர். பின்னர் அரசின் உயர்பதவிப் பட்டமாக வேளாளர்களுக்கு பிள்ளை, முதலி என்பது வழங்கப்பட்டிருக்கிறது. முதலி – முதலியார் என்றும் பிள்ளையார் என்பதே பிள்ளைமார் என்றாகி யிருக்கிறது. வேளாளர் (பிள்ளைமார், முதலியார்)கள் கங்கை மைந்தர்கள் என குறிப்பிடப்படுவதைப் போல முருகப்பெருமானும் கங்கை மைந்தர் என குறிப்பிடப்படு கிறார் வேள் – மண், நிலம்  ஆளர் – ஆள்பவர்   வேள் – மன்னன், தலைவனாக ஆள்பவர் (முருகப்பெருமான் திருப்பெயர்களில் ஒன்று) நீண்ட புகழுடையவன், யாவருக்கும் பிடித்தமானவர், மதிப்பிற்குரியவர்,  என்பதே வேளாளர் குலப்பொருள். எனவே தொழில் முறையைக் கொண்டு மட்டும் வேளாளர் இனத்தோர் என அழைக்கப்படவில்லை என்பது விளங்கும்..❗

கம்பரும் வேளாளரை கங்கை குலத்தவர் என கூறுகிறார்..
கங்கை மைந்தர்கள் என்பதனையே “கங்கை குலத்தவர்” என கம்பர் குறிப்பிட்டுள்ளார்..

 

VELALAR SONGS DOWNLOAD

அத்தகைய பெருமைமிகு..
*வேளாளர் பெயரை சமீப காலமாக.. அரசியல், சுயநலம் மற்றும் சில காரணங்களுக்காக… வேற்று சமுதாயத்தில் சிலரை தூண்டி- தங்களது சுயலாப வியூகங்களை வகுத்து வரும் நிகழ்வுகளுக்கு எங்களின் கருத்து..*
👇👇

🏵 பெருமைமிகு “வேளாளர்” என்ற பெயரை வேற்று சமுதாயத்திற்கு வழங்க கூடாது ❗

🏵 பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற்றம் போன்றவைகள் அவர்கள் விருப்பம் ❗
அதுபற்றி முடிவு செய்வது அந்த சமூகத்தில் உள்ள பெரும்பான்மையான அடிதட்டு மக்களே❗

🏵️ பட்டியல் வெளியேற்றம் சம்மந்தமாக எங்களுக்கு ஆட்சேபமும் இல்லை.. எவ்வித கருத்து பதிவும் இல்லை ❗

🏵️ வேளாண்மை / உழவு தொழில் செய்வதால் வேளாளர் பெயர் என்றால்.. வேளாண்மை தொழில் செய்யாத சமூகம் இந்த உலகில் ஏது❓
அனைவருக்கும் வேளாளர் பெயரை தாரைவார்க்க பரிசீலனை செய்யுமா இந்த அரசுகள் ❓❓

அல்லது அப்படி கேட்பவர்கள், அவர்கள் சமுதாயத்தில் பாதி பேருக்கும் மேல் தற்போது உழவு /வேளான் தொழில் செய்வதில்லை என்பதால் அவர்களை அந்த சமுதாயத்தில் இருந்து பிரிந்து விட முடியுமா⁉…

🏵 வேளாளர் என்பது வெறும் தொழில் சார்ந்த பெயரல்ல என்பதை உணர்க. ❗

அது சிறந்த பண்பாடுகளின் அடையாளம் ❗

🏵 எந்த ஒரு சமூகமும் மேல் நிலைக்கு வருவதை எதிர்ப்பவர்கள் அல்லர் “வேளாளர்”
உண்மையில் அனைத்து சமூதாய மக்களுடன் இனக்கமாக வாழ்பவர்களே வேளாளர் ‼️

🏵️ வேளாளர் என்போர்..
வேளாள..
பிள்ளைமார் – முதலியார் – செட்டியார் & கொங்கு கவுண்டர் என்ற உறவுகளே ❗👍

🏵 இரண்டரை கோடிகளுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட..
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவியுள்ள எங்கள் சமூதாயத்திற்கு எதிராக களம் இறங்கும் கட்சிகள்..
தேர்தல் நேரத்தில் தெருவில் இறங்கி களமாட முடியாது என்பதையும் உணர்க ‼️

அது கொங்கு மண்டலம் என்றாலும்,
டெல்டா என்றாலும்,
தலைநகராம் சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலும் 👍

Download Sudhesi News App here

அமைதியான சூழல் இருக்கும் தமிழ் சமூதாயத்தில் தேவையற்ற குழப்பங்கள், சச்சரவுகளுக்கு வழிவகுக்கும் இதுபோன்ற கோரிக்கைகளை அனைத்து கட்சிகளும் புறம் தள்ள வேண்டும்..

சுயநலமிக்க அரசியல் காரணங்களுக்காக ஏதாவது விபரீத முடிவெடுக்க நினைத்தால்..

இந்தியா முழுவதும் பரவியுள்ள வேளாளர் ஒன்று திரண்டு எங்கள் வலிமையை அரசியல் கட்டமைப்பு, சட்ட விதிகளின் படி..

ஏன் எந்த ஒரு வியூகங்கள் மூலமாகவும் எங்களின் எதிர்ப்பை காட்டுவோம்..❗

வேளாளர் மாண்புகளை மீட்டெடுக்கும் நேர்மறையான நமது செயல்பாடுகள் தொடரும்❗👍🏼

அரிமா வ.அண்ணாதுரை பி.ஏ.பி.எல்
வேளாளர் கூட்டமைப்பு