வேளாளர்களை எதிர்த்தால் திமுக படுதோல்வி நிச்சயம்

நடைபெற இருக்கும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக ஆலோசனை கூட்டமும் அதைதொடர்ந்து இன்று மாலை வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் நெல்லை மாவட்ட அலுவலகத்தில் வைத்து …கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் மற்றும் மாநில இளைஞரணி செயலாளர் திரு ‌பந்தல் S.ராஜா அவர்கள் தலைமையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. இதில் மாநில துணை பொதுச்செயலாளர் தேவி.ஆறுமுகம், மாநில சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சுப்புராஜ்
திருநெல்வேலி மாவட்ட செயலாளர் புல்லட் ராஜா
மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர்
திரு‌.ரெட்டியார்பட்டி.ஈசுவரன்
தகவல் தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் திரு.வஉசி.சந்துரு
மாவட்ட இளைஞரணி செயலாளர் திரு.புதுமனை ராஜா
மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் திரு‌.பிரபா
மாவட்ட மாணவரணி தலைவர் திரு.விக்னேஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு ஊடக நண்பர்களிடம் நமது தேர்தல் நிலைப்பாடு பற்றி விளக்கப்பட்டது.

1. முற்படுத்தப்பட்ட ஏழை மக்களுக்கான 10% இட ஒதுக்கீடை மாநில அரசு உடனே அமல் படுத்த வேண்டும்.

2. சுதந்திர போராட்ட தியாகி ஐயா வ.உ.சி அவர்களின் மணிமண்டபம் முறையாக பராமரிக்கப்பட்டு, சுதந்திர போராட்ட நினைவு சின்னங்களை உள்ளடக்கிய அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும்.

3. வேளாளர் மக்கள் அதிகம் வசிக்கும் நெல்லை மாநகராட்சியின் மேயர் பதவி எங்கள் சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட வேண்டும்.

4.கொடைக்கானலில் பள்ளி வளாகத்தில் எரித்து கொல்லப்பட்ட சிறுமி பிரித்திகா மரணத்திற்கு காரணமான கயவர்கள் கைது செய்யப்பட வேண்டும். சிறுமியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

பெரும்பான்மையாக நம் மக்கள் வசிக்கும் பகுதிகளில் தேர்தல் நம் சமுதாய மக்களை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்றும் எடுத்துரைக்கப்பட்டது.

#பந்தல்ராஜா
#மாநில_அமைப்பு_செயலாளர்
#மாநில_இளைஞரணி_செயலாளர்
#வெள்ளாளர்_முன்னேற்றக்_கழகம்
#தமிழ்நாடு