ஆறுநாட்டு வேளாளர் வரலாறு

ஆறுநாட்டு வேளாளர் வரலாறு! :-

ஆறுநாட்டு வேளாளர்களாகிய நமக்கு ஆதி ஊர் சிதம்பரம், சிதம்பரம் கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னரே புகழ்பெற்று இன்றுவரை ஒளியோடு விளங்கும் கோயிலை உடையது. சிதம்பரம் கடற்கரையிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. சிதம்பரம் கடல் மட்டத்திலிருந்து 5 மீட்டர் உயரத்தில் உள்ளது. சிதம்பரம் 1873 முதல் ஒரே வட்டத்தின் தலைநகராக இருந்து வருகிறது. சிதம்பரம் நகராண்மைக் கழகம் 1886ல் ஏற்பட்டது. சிதம்பரம், கடலூர் ஆகிய இரு வட்டங்களும் அடங்கிய ஒரு கோட்ட ஆட்சியின் தலைநகரம் சிதம்பரம் ஆகும். ஆறு நாட்டு வேளாளர்களின் வரலாற்றை ஆராயும்போது, திருச்சி திருவானைக்காவல், நமது சத்திரத்திலிருக்கும் இரண்டு செப்பேடுகள் முக்கியமான தடயமாக இருக்கிறது. இச்செப்பேடுகள் வாசிக்கப்படும் போது கீழ்க்கண்டவை புலனாகிறது.

1. செப்பேடுகள் எழுதப்பட்டிருக்கிறது. பிரிதிவிராஜ்யம் காலம்.
2. செப்பேடுகளில் நம் முன்னோர்கள் நமக்கென்று ஓர் மனை வாங்கி, மடம் ஏற்படுத்தியது சிதம்பரத்தில்.
3. செப்பேடுகளில், ஆறு நாட்டு வேளாளர்கள் என சாதி பெயர் கூறி 36 கோத்திரங்கள் நிர்ணயித்திருப்பது.
4. திருமணம் செய்து கொள்ள வேண்டிய முறைகளை நிர்ணயித்திருப்பது.
5. ஆறு நாட்டு வேளாளர்களுக்கான ஆறு நாடுகள் குறிப்பிட்டிருப்பது. செப்பேடுகள் தவிர்த்து மற்ற தடயங்கள்.
6. சிதம்பரம், பூகோள வரைபடம், வரைபடத்தில் இரண்டு கிராமங்கள் இருப்பது.
7. திருச்சிராப்பள்ளி ஜில்லா பூகோள வரைபடம்.
8. திருச்சி ஜில்லாவிலிருக்கும். கொல்லி மலைத் தொடர்ச்சி பூகோள வரைபடம்.

செப்பேடுகள்:

1. செப்பேடுகள் எழுதப்பட்டது பிருதிவிராஜ்யக் காலம் எனக் கூறப்பட்டிருக்கிறது. ஆகவே பிருதிவிராஜ் காலத்தை ஆராயும்போது, பிருதிவிராஜர் கி.பி. 1141 ஆம் ஆண்டு பிறந்தது, வளர்ந்தது, ராஜ்யத்தை ஆண்டு, இறந்த காலம் கி.பி 1192. எனவே பிருதிவி ராஜ்ய காலத்தை பன்னிரண்டாம் நுற்றாண்டு எனலாம். பன்னிரெண்டாம் நூற்றாண்டில் சோழ மாமன்னன் இரண்டாம் இராசராசன் கி.பி. 1146- 1182 வரை சிதம்பரத்தையும் திருச்சியையும் ஆண்டார் என சரித்திரம் கூறுகிறது.

2. செப்பேடுகளில் கூறுகிறபடி ஆறுநாட்டு வேளாளர்கள் பன்னிரண்டாம் நூற்றாண்டில், சிதம்பரம் என்கிற ஊரில், நம்மவர், கூடுவதற்கு தங்குவதற்கு என ஓர் மனை வாங்கி அம்மனையில் ஓர் மடம், சத்திரம் கட்டியிருக்கிறார்கள்.

3. செப்பேடுகள் கூற்றுப்படி பன்னிரண்டாம் நூற்றாண்டில், சிதம்பரத்தில், ஆறுநாட்டு வேளாளர்கள், தங்களவர்களை, முப்பத்தி ஆறு கோத்திரக்காரர்களாக வகுத்துக் கொண்டிருக்கின்றார்கள். வகுத்தமைக்கு சாட்சியாக, சிதம்பரம் கோவில் நிர்வாகஸ்தர், நயினார் பண்டாரம் அவர்களின் முன்னிலையில் முப்பத்தாறு கோத்திரங்களின் கோத்திரக்காரர்கள் கோத்திரக்காரர் களின் தலைவர் ஒருவரால் கையயழுத்திட்டி ருக்கிறார்கள். அதன் படி ஒவ்வொரு கோத்திரத்தின் பெயரின் பின்னால் கையயழுத்து என சொல்லப்படுகிறது. முப்பத்தாறு கோத்திரங்கள் விவரம்.

 

1. எதுமலுடை நல்லதம்பி எழுத்து

2. மானவிழும்பத்தரையன் பொன்னான் எழுத்து

3. தெத்துமங்கலமுடையான் எழுத்து

4. சணமங்கல மங்காம காத்தானெழுத்து

5. ஆலக்குடையா னெழுத்து

6. பெருவலுடையா னெழுத்து

7. சமய மந்திரி எழுத்து

8. பார்பலுடையா எழுத்து

9. பூண்டிலுடையான் எழுத்து

10. மிரட்டுடையான் எழுத்து

11. பாவலுடைய சக்கிரவர்த்தி எழுத்து

12. சிலசங்குடையான் எழுத்து

13. நேமங்குடையான் எழுத்து

14. களப்பாளான் எழுத்து

15. முருக்கத்துடையான் எழுத்து

16. குளக்கானத்துடையான் எழுத்து

17. கல்லக்குடையான் எழுத்து

18. தேவங்குடையான் எழுத்து

19. மாத்துடையான் எழுத்து

20. சிவதுடையான் எழுத்து

21. பாச்சூர் நாடு விழும்பத்திரையன் எழுத்து

22. சாத்துடையான் எழுத்து

23. நிம்மலுடையான் எழுத்து

24. இருங்கலுடையான் எழுத்து

25. முடிகொண்ட வேளாளர் எழுத்து

26. கோனுடையான் எழுத்து

27. கூத்துடையான் எழுத்து

28. வளவதிரை நல்லதம்பி எழுத்து

29. கொன்னக்குடையான் எழுத்து

30. வேளாளர் பனையாண்டார் எழுத்து

31. வில்வராயன் எழுத்து

32. கயத்துடையான் எழுத்து

33. தேவிமங்கலம் வேளாளர் எழுத்து

34. கன்னங்குடையான் எழுத்து

35. பாவலுடையான் எழுத்து

36. நல்லுடையான் எழுத்து

(கனக சபை தவுத்தராயன் அஸ்த விகிதம்)

செப்பேடு வாசகங்களை நோக்கும்போது. ஆறுநாட்டு வேளாளர் என ஒரு குலம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் தான் தோன்றியிருக்கின்றது. என ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது, பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு முன் ஆறுநாட்டு வேளாளர்கள் சாதாரண வேளாளர்களாக வாழ்ந்திருக்க வேண்டும். சரித்திர ஏடுகளில் பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குமுன் வேளாளர் என்று மட்டுமே குறிக்கப்பட்டிருக்கிறது.

 

கேஸ்ட் அண்டு ட்ரைப் என்ற புத்தகத்தில் கொங்கு வேளாளர், மொட்டை வேளாளர், என பல வேளாளர் பிரிவுகளை கூறுகிறது. ஆனால் புத்தகம் 1901ம் வருடம்தான் அச்சிடப்பட்டிருக்கிறது. புத்தகத்தில் ஆசிரியர் பன்னிரண்டாம் நூற்றாண்டின் பின்வரலாறுகளை கூறுகிறாரே தவிர 12ம் நூற்றாண்டுக்கு முன் வரலாறுகளைக் கூறவில்லை. ஆகவே வோளாளர்களின் உட்பிரிவுகள் பன்னிரண்டாம் நூற்றாட்டில்தான் ஏற்பட்டிருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. கொங்கு நாட்டு வேளாளர்கட்கும் ஆறு நாட்டு வேளாளர்கட்கும் நிலவுகிற கலாச்சாரம் ஒரே மாதரியாக இருந்திருக்கிறது. ஆறுநாட்டு வேளாளர்கள் பன்னிரண்டாம் நூற்றாண்டில் சிதம்பரம், நடராஜர் ஆலயத்தில் நயினார பண்டாரத்தின் முன் சாதி எடுத்த காலத்திற்கு முன்னமேயே கொங்கு வேளாளர்கள் என்று இருந்திருக்கிறார்கள். கலாச்சாரத்தை ஆராயும்போது ஆறு நாட்டு வேளாளர்கள், கொங்கு நாட்டு வேளாளர்களின் இருந்து ஏற்பட்ட உட்பிரிவாக இருக்கலாம். கொங்கு நாட்டு வேளாளரும், ஆறுநாட்டு வேளாளரும் ஆக இருவரும் கவுண்டர்களே.

 

4. செப்பேடுகளின் கூற்றுப்படி. ஆறு நாட்டு வேளாளர்கள், தங்களை 36 கோத்திரங்களாக வருத்துக்கொண்டு அத்தை மகன் மாமன் மகளையும், கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். ஒரே கோத்திரத்தில் மணமகனையும் மணமகளையும் தேர்ந்தெடுக்கூடாது. விவாகம் செய்யக்கூடாது. அக்காள் மகளை திருமணம் செய்யக்கூடாது. அத்தை, மாமன் பிள்ளைகள் ஊனமாயி ருந்தாலும் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்.

 

குறிப்பு: ஆறு நாட்டு வேளாளர் குல திருமணம் ஆகாத இளைஞர்கள் இச்செப்பேட்டில் கூறியுள்ளபடி தவறாமல் அத்தை மகன், மாமன் மகளையும், மாமன் மகன் அத்தை மகளையும், சிறிதேனும் எதிர்பார்ப்புகள் இல்லாமல், திருமணம் செய்து கொண்டால் ஆறு நாட்டு வேளாளர் குலத்தில் கல்யாணம் ஆகாமல் பெண்கள் பின்தங்க மாட்டார்கள். எனவே நம் ஆறுநாட்டு வேளாளர் குல திருமணமாகாத வாலிபர்கள் நம் முன்னோர்களின் செப்பேடு வேண்டுதல்படி திருமணம் செய்தல் நலம்.

5. செப்பேடுகள் கூறும் ஆறுநாடுகள் கீழ்கண்டவை.

 

1. திருப்படையூர் நாடு

2. பாச்சூர் குறட்டுப்பத்து நாடு

3. கீழ்வள்ளுவப்ப நாடு

4. மேல் வள்ளுவப்ப நாடு

5. கரிகால நாடு

6. ஆமூர் நாடு

 

சிதம்பரம் அக்காலத்தைய பூகோளப் படத்தை உற்று நோக்கினீர்களானால் இரண்டு ஊர்கள் ஆங்கிலேயரின் மாற்று உச்சரிப்புடன் காணலாம். அவையாவன:

1. கீழ்வள்ளுவப்ப நாடு ஆங்கிலேயர் உச்சரிப்புப்படி கீழ் நுவம்பட்டு

2. மேல வள்ளுவப்ப நாடு ஆங்கிலேயர் உச்சரிப்புப்படி மேல நுவம்பட்டு தஞ்சாவூரிலுள்ள நூலக அலுவலர் திரு. பெருமாள் அவர்கள் மேற்கூறப்பட்டிருப்பது சரி என ஊகிக்கிறார். மேலும் அவர்தான் தமிழ்நாட்டு பூகோளப் படங்கள் சர்வே பிளான்கள் அனைத்துக்கும் பொறுப்பாளர். திருச்சி ஜில்லா பூகோளப் படத்தையும் திருச்சி ஜில்லாவைச் சேர்ந்த கொல்லிமலை வட் டாரத்தையும் உற்று கவனித்தீர்களானால் பூகோளப் படத்தில் சிதம்பரம் செப்பேட்டில் கூறியடி கீழ வள்ளுவப்ப நாடும். மேல வள்ளுவப்ப நாடும் உள்ளன. செப்பேட்டில் கூறப்பட்ட எந்த ஒரு ஊரும் காணப்படவில்லை. சி தம்பரம் பூகோளப்படத்தில், செப்பேட்டில் கூறியபடி இரு ஊர்கள் உள்ளன. மற்ற நான்கு ஊர்களும் மிகச் சி றியனவாக இருந்திருக்க வேண்டும். அதனால் பூகோளப் படத்தில் அச்சிடப்படவில்லை போலும்.

அன்புள்ள உறவினர்களே தடயங்களை வைத்தும், சரித்திரங்களை ஆராய்ந்து பார்க்கும் போது கீழ்க்கண்ட முடிவை சமர்ப்பிக்கிறேன்.

1. ஆறுநாட்டு வேளாளர்களின் ஆதி ஊர் சிதம்பரம்.

2. ஆறுநாட்டு வேளாளர் என்ற சாதி 1170- 1192ம் ஆண்டுகளின் இடையே ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

3. ஆறுநாட்டுவேளாளர் குலத்தினர் சிதம்பரத்தைவிட்டு திருச்சிக்கு 1700- 1800 இடையேயான வருடங்களில் குடியேறியிருக்கிறார்கள்.

4.ஆறுநாட்டு வேளாளர்கள் சிதம்பரத்திலிருந்து திருச்சி வந்தபின் முதலாவதாக 1876ல் தான் நிலம் வாங்கியிருக்கிறார்கள் என தடயங்கள் உள்ளன. ஆக மேற்கண்ட உறுதியான ஆதாரங்களின் துணைகொண்டு ஆறுநாட்டு வேளாளர்கள் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பே சிதம்பரத்தில் வசித்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்றும், பன்னிரண்டாம் நூற்றாண்டில் தமக்கென்று ஒரு மடத்தையும் ஃ சத்திரத்தையும் ஸ்தாபித்திருக்கிறார்கள் எனவும் புலப்படுகிறது.

 

சிதம்பரத்திலிருந்து திருச்சி ஜில்லாவிற்கு ஆறுநாட்டு வேளாளர்கள் வந்ததேன்?

 

1. இந்திய சரித்திர வரலாற்றை ஆராயும் போது, ஆங்கிலேயர் இந்தியாவைக் கைப்பற்றிய காலம்வரை இந்தியாவில் உள்ள பல ஊர் அரசர்கள் ஒருவருக் கொருவர் அடிக்கடி நாட்டைப்பிடிக்கும் ஆசையில் யுத்தம் செய்து, நாடே நிம்மதியில்லாமலிருந்திருக்கிறது. குறிப்பாக வடக்கிலிருந்து முஸ்லீம் அரசர்கள் தென்னாட்டிலுள்ள கோயில்களில் உள்ள தங்கம், வைரம் போன்ற செல்வங்களைக் கொள்ளையடிக்கும் நோக்கில் அடிக் கடி, கடல் வழியாகவும், ஆறுகள் வழியாகவும் வந்து கொள்ளை அடித்து சென்றிருக்கிறார்கள்.

2. யுத்ததிற்கும், கொள்ளைஅடிக்கவரும் எதிரளிகளைச் சமாளிப்பதற்கும், தென்னாட்டிலுள்ள அரசர்கள். தங்கள் படைகளிலுள்ள போர் வீரர்கள் மடியும்போது, மீண்டும் மீண்டும் போர்ப்படைக்கான வீரர்களை திரட்டியிருக்கிறார்கள். வீரர்களை திரட்டும்போது வீட்டுக்கு ஒருவர், இருவர் என திரட்டியிருக்கிறார்கள். இதனால் பல குடும்பங்களில் நிம்மதியே இல்லை.

3. சிதம்பரம் வட்டத்தில் கடல் 10 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதாலும், சிதம்பரம் ஊடே ஆறு ஓடுவதாலும் இஸ்லாமியப்படைகள் அடிக்கடி இவற்றின் வழியே வந்து கோயில்களை கொள்ளையடித்தும், எதிர்பவர்களைக் கொன்று கொடுமைகள் பல செய்தனர்.

4.இம்மாதிரியான சந்தர்ப்பங்களின் போது ஆறுநாட்டு வேளாளர் சமூகத்தினர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு நிம்மதியின்றி வாழ்ந்து வந்தனர்.

5.கடல் அருகாமையிலும் ஆறுகள் ஓடும் சமீபத்திலும் வாழ்ந்து வந்தால் நமக்கு கஷ்டமும் நஷ்டமும் என்று நினைத்து ஒருமனதாக பெரியவர்கள் கடல், ஆறு இல்லாத மேட்டுப்பகுதிகளில் குடியேற வேண்டும்; அப்போதுதான் நிம்மதியாயிருக்கலாம் என திருச்சி ஜில்லாவை தேர்ந்தெடுத்தனர்.

6. ஆறுநாட்டு வேளாளர்கள் 12ம் நூற்றாண்டுக்கு முன்பே சிதம்பரத்தில் வாழ்ந்து வந்தனர். எவ்வளவு காலம் என்பது சரித்திர ஆராய்ச்சியில் பெற முடியவில்லை.

7. ஆறுநாட்டு வேளாளர் குலத்தினர் சிறிது சிறிதாக 17ம் நூற்றாண்டிலிருந்து 18ம் நூற்றாண்டிற்குள் திருச்சி ஜில்லாவிற்கு வருகை தந்து அவரவர்கள் விரும்பிய ஊர்களில் தங்கி வருகின்றனர். திருச்சி ஜில்லாவில் 18ம் நாற்றாண்டில் ஆறு நாட்டு வேளாளர்கள் நிலத்தை கிரயம் செய்ததற்கு போதிய சான்றுகள் இருக்கின்றன.

ஆறுநாட்டு வேளாளர்களைப்பற்றி சரித்திரம் கூறுவது:

8. சிதம்பரத்தில் வசித்து வந்து ஆறுநாட்டு வேளாளர்கள். மிகவும் கௌரவமாகவும் சுதந்திரமாகவும் பிறரிடம் கடன் வாங்காமலும் உழவுத் தொழில் ஒன்றையே செய்தும் வாழ்ந்தும் வந்திருக்கிறார்கள். (ஆதாரம்)

9. ஆங்கிலேயரான எழுத்தாளர் ஒருவர் கூறுகிறார். வேளாளர் சமூகத்தினர் மிகவும் மதிக்கப்பட்டு கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். இச்சமூகத்தினர் மிகவும் நேர்மையானவர்களாகவும் நம்பிக்கை உடையவர்களாகவும் இருப்பவர்கள். இதன் காரணமாக தஞ்சாவூர் மகாராஜா தன் பிறந்த நாளன்று தனது எடைக்கு எடை தங்கக் கட்டிகளை நிறுவை செய்வதற்கு ஒரு வெள்ளாளரையே தேர்ந்தெடுத்தாராம். அதன்பின் மதுரையை ஆண்ட அரசர் சோமசுந்தர பாண்டியர். தனது முடிசூட்டு விழாவின் போது, யார் முடியை ராஜா தலையில் சூடுவது எனப் பற்பல ஆலோசனைக்குப்பின், ஒரு வேளாளர்தான் உகந்தவர் என முடிவு செய்து ஒரு வெள்ளாளரையே முடிசூடச் செய்தாராம்.

10. வேளாளர் சமாதானத்தையே எப்போதும் விரும்புபவர். நெல் மற்றும் தானியங்கள் முதலியவைகளை விவசாயம் செய்வதில் உலகத்திலேயே இவர்களுக்கு சமமானவர்கள் இல்லை. வேளாளர் பொருள் உற்பத்தியிலும் கைதேர்ந்தவர்கள். (ஆதாரம்) வேளாளர்கள் தங்களைக் கவுண்டர்கள் என அழைத்துக் கொள்வர். மிகவும் சிக்கனமானவர்கள் என 372ம் பக்க த்தில் சொல்லப்படுகிறது. வேளாளர்கள் அதிகமாக சோழமண்டலம் தஞ்சாவூர், திருச்சி ஜில்லாவில் வசி க்கிறார்கள். இவர்கள் தங்களை பிள்ளை என்றும் அழைத்துச் கொள்கின்றனர் என ஆங்கிலேய எழுத்தாளர் எழுதுகிறார்.

11. ஆதிகாலத்தில் வேளாளர் சமூகம் என்றுதான் வழங்கி வந்தது என ஆங்கிலேயே எழுத்தாளர் குறிப்பிடுகிறார். உற்று ஆராயும்போது ஆறுநாட்டு வேளாளர்கள் சமூகம், கொங்கு வெள்ளாளர் சமூகத்திலிருந்து தோன்றிய உட்பிரிவுதான் என புலப்படுகிறது. கொங்கு நாட்டு வேளாளர்களும் ஆறு நாட்டு வேளாளர்களும் ஒரே விதமான கலாச்சாரத்தைத்தான் கடைப்பிடிக்கிறார்கள்.

12. ஆங்கிலேயே எழுத்தாளர் கூறுகிறார். உட்பிரிவான வேளாளர்கள் தலை உச்சியில் முடிபோட்ட குடுமி வைத்திருப்பார்கள். இவர்கள் மேல்நாடு, கீழ் நாடு என தங்களை பிரித்துக்கொண்டு திருச்சிராப்பள்ளி ஜில்லாவிலே வசிக்கிறார்கள்.

13. ஆறு நாட்டு வேளாளர் எனப்படுபவர் மொட்டை வெள்ளாளர் எனவும் அழைக்கப்படுவர். மீசையை எடுத்து விடுவதால் மொட்டை என அழைக்கப்பட்டனர். இவர்கள் தலை உச்சியில் முடியை முடிச்சு போட்டிருப்பார்கள். மொட்டை வெள்ளாளர்கள் அக்காள் மகளை திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். திருமணத்தின்போது தாலி அணிவிப்பார்கள். ஆறு நாட்டு வேளாளர்களின் ஆறு நாடுகளில் மூன்று நாடுகள் அய்யாற்றுக்கு இரு பக்கங்களிலும் உள்ளன. அவை சேருடி நாடு, நாமக்கல் தாலுக்கா, ஓமாந்தூர் நாடு.

14. ஆங்கிலேயர்கள் 18ம் நூற்றாண்டில் இந்தியா வந்தமையாலும் அவர்களுடைய ஆராய்ச்சி 19ம் நூற்றாண்டில் செய்திருப்பதாலும். ஆறுநாட்டு வேளாளரைப் பற்றி ஆராய்ச்சிகள் பூரணமாக எழுதப்பட முடியவில்லை. ஆனாலும் ஆராய்ச்சிப்படி 12ம் நூற்றாண்டில் சிதம்பரத்தில் மடம்கட்டி, முன்னோர்கள் ஆறுநாட்டு வேளாளர் என ஓர் உட்பிரிவை ஏற்படுத்தினர். 17ம் நூற்றாண்டிலிருந்து 18ம் நூற்றாண்டு வரை திருச்சி, சேலம், நாமக்கல் வட்டாரத்தில் குடியேறினர் என்பது வரலாறு.

15. ஆறுநாட்டு வேளாளர்கள் வரலாற்றினை தஞ்சாவூர் மகாராஜா சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகசபை, திருச்சி அண்ணா பவள விழா கட்டிட நூலகங்கள், சென்னை கன்னிமாரா நூலகங்கள் ஆகிய நூலகங்களிலிருந்த திருவானைக்கோவில் ஆறுநாட்டு புத்தக்கங்களிலிருந்து வேளாளர் சத்திரத்திலிருக்கும் இரண்டு செப்பேடு களிலிருந்தும் அறிந்து எழுதியிருக்கிறேன்.