நம் வேளாளர் பெயரை இழந்துவிட்டோம்… நம் உரிமையை இழந்துவிட்டோம்… நம் உணர்வுகளை இழக்க கூடாது…

தென் மாவட்டங்களில் வேளாளர்/வெள்ளாளர் (பிள்ளைமார்) வேட்பாளராக அறிவிக்க மறுப்பது ஏன்…?

திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை,தேனி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக வாழுகின்ற பகுதி…

அந்த பகுதிகளில் வாழும் வேளாளர் சமூக மக்களுக்கு எந்தவொரு அரசியல் கட்சிகளும் சீட்டு தர மறுக்கிறார்கள்…

ஏன்..?

தமிழகத்தில் குறைவான எண்ணிக்கையில் வாழும் சமூகத்திற்கு அனைத்து கட்சிகளும் ஒன்று, இரண்டு சீட்டுகளை கொடுத்து உள்ளனர்…

வேளாளர்/வெள்ளாளர் (பிள்ளைமார்) சமூகம் மட்டுமே புறக்கணிக்க படுகிறது…

சிந்தியுங்கள் எங்கள் வேளாளர்/ வெள்ளாளர் இனமே..!

பாஜக, அதிமுக, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்,நாம் தமிழர் கட்சி மற்றும் இன்னும் பல கட்சிகளில் வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள்…

அதில் இருப்பதனால் என்ன பயன்..?

பல வருடங்களாக பல அரசியல் கட்சிகளில் பயணிக்கிறேர்கள்.
உங்களுக்கான அரசியல் அங்கீகாரம் இதுவரை எதுவும் கிடைத்தது இல்லை…

அந்த அரசியல் கட்சியை வைத்து நீங்கள் பிறந்த குடும்பம், சாதிக்கும் இதுவரை என்ன செய்து உள்ளேர்கள்…

நீங்களும் பயன் அடையாமலும், நீங்கள் பிறந்த இனத்திற்கும் எதுவும் செய்யாமல் இருப்பது ஞாயமா..?

உங்கள் கண் முன்னே உங்கள் இனம் வீழ்ந்து கொண்டும், அழிந்து கொண்டும் இருக்கிறது…

பிற இனங்கள் ஒற்றுமையாக இருக்கிறது…
அவர்களுக்கென்று ஒரு கட்சி,ஒரு அமைப்பு,ஒரு தலைமைகள் உள்ளது…
கல்வி,அரசு வேலைவாய்ப்பு, பல்வேறு நல திட்டங்களை அவர்கள் பூர்த்தி செய்து கொள்கிறார்…

நம் இனம் மட்டும் ஏன் சிதைந்து கிடக்க வேண்டும்…

42 – உட்பிரிவு வேளாளர் சங்கங்களும் ஒன்று சேர்வோம்…
நம் இனத்தில் எத்தனையோ கட்சி, அமைப்புக்கள், இயக்கங்கள் உள்ளது…

அனைவரும் ஒன்று சேருவோம்…

இழந்த அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவோம்..!

நாம் ஒற்றுமையாக இருந்து ஒரே முடிவுகளில் இருந்தால்..

யாரிடமோ..! சென்று 1 சீட்டு கொடுங்கள்,2 சீட்டு கொடுங்கள் என்று கேட்க வேண்டாம்…

அவர்களே..! நம்மை தேடி வருவார்கள்…

நம் வேளாளர் பெயரை இழந்துவிட்டோம்…

நம் உரிமையை இழந்துவிட்டோம்…

நம் உணர்வுகளை இழக்க கூடாது…

வெள்ளார்களே சிந்திங்கள்….

வை.பி.பாலகுமார்
சுதேசி செய்திகள்