ஐயா வ.உ.சி150-வது பிறந்தநாள் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது

1.கோவை மத்திய சிறையில் உள்ள ஐயா வஉசி நினைவிடத்தில் வீர வணக்கம் செலுத்தினார் வை.பி.பாலாபிள்ளை சுதேசி செய்திகள்

2.யார் இவர்
சுயவிளம்பரம் தேடாதவர் போட்டாவுக்கும், பேக் ரவுண்ட் வீடியோவிற்கும் போஸ் கொடுக்காதவர்,
தொடர்ந்து 6 வருட காலமாக நெல்லை
வ உ சிதம்பரம் பிள்ளை மணி மண்டபத்தின் பாதுகாவலன்,சமுதாய பற்று அதிகம் கொண்டவர்,ஒரு வேலை உணவுக்கே கஷ்டப்படும் இவரது குடும்பம்,வயது முதிர்ந்த தாய்,தந்தை
ஐயாவின் குருபூஜை மற்றும் பிறந்த நாள் விழாவில் ஐயாவின் சிலைக்கு அருகிலேயே எப்போதும் நிற்பார்,அந்த இரண்டு நாட்களும் இவர் கடும் விரதம் எடுப்பார் நீர் கூட அருந்தமாட்டார்…..
சிலைக்கு அதிகமாக மாலை போடும் போது சிலையினுடைய எடை தாங்காது என பக்கத்திலேயே இருந்து மாலைகளை உடனே அகற்றுவார்….
மணி மண்டபத்தில் எந்த மாதிரியான சூழல் நடக்கிறது என தினமும் போய் பார்த்து அங்குள்ள சூழலை அரசியல் கட்சிகளுக்கும்,நெல்லை மாநகராட்சி அதிகாரிகளுக்கும் எடுத்துரைப்பவர்….
இவருக்கு நல்ல பொருளாதார வசதி வேண்டும்
விரைவில் திருமணம் நடக்க ஐயா வ உ சிதம்பரம் பிள்ளையின் அருளை வேண்டுகிறேன்.

3.ஐயா வ.உ.சி அவர்களின்150வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் விருதுநகர் மாவட்ட செயலாளர் மரியாதைக்குரிய அண்ணன் திரு மு. ராஜேந்திரன் அவர்கள் மற்றும் விருதுநகர் மாவட்ட தலைவர் திரு மு. பழனிச்செல்வம் அவர்கள் மற்றும் விருதுநகர் மாவட்ட துணை தலைவர் திரு புங்கன் பிள்ளை அவர்கள்தலைமையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் திருத்தங்களில் உள்ள ஐயா வ. உ. சிதம்பரம்பிள்ளை அவர்களின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

4.தேனிமாவட்டம் பெரியகுளம் தாமரை குளத்தில் அய்யாவின் சிலைக்கு மரியாதை

 

 

5.கப்பல் ஓட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல் அய்யா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் பேரளம் கடைவீதியில் அய்யா அவர்களின் திருஉருவ படத்திற்கு மாலை அனுவித்து இனிப்புகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது மாநில துணைத்தலைவர்B.P.அமுதன் பிள்ளை தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

6.தேசியத்தலைவர் ஐயா வ உ சி யின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீ சாய் இலை கடையில் அய்யாவின்  திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

 

7.செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட வ.உ.சி பேரவையின் தலைவர் மணீஷ் K. மகேஸ்வரன் அவர்கள் தலைமையில் கரூர் மாவட்டத்தில் உள்ள தாந்தோன்றிமலையில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி ஐயா அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதற்கு சிறப்பு விருந்தினராக மாநில கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் மாநில பொதுச் செயலாளர் மற்றும் நான்கு திசை வேளாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவருமாகிய அண்ணன் கொங்கு K. தேவராஜ் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

8. செக்கிழுத்தசெம்மல் , இரட்டை ஆயுள் தண்டனை பெற்றவர், இந்திய சுதந்திர போராட்ட வீரர் சுதேசி இயக்கம் என்பதை இந்திய மக்களின் நன்மைக்காக என்று தெளிவாக எடுத்துரைத்த ஐயா திரு வ.உ.சிதம்பரனாரின் 150 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் ஜெயமங்கலம், பெரிய குளம், தாமரைக்குளம், தேனி,சிலமலை,பார்க்கையில் கோட்டை, குச்சனூர், போடிநாயக்கனூர், ஆகிய இடங்களில் உள்ள  திரு உருவ சிலைக்கு  அனைத்துலக முதலியார் பிள்ளைமார் அமைப்பின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

9.ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் உள்ள அய்யா வ உ சி அவர்களுக்கு மரியாதை செலுத்திய போது .

10.செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி அவர்களின் 150-வது பிறந்தநாள் விழாவான இன்று சென்னை துறைமுகத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுடன் மலர்தூவி மரியாதை செலுத்திய போது..!

11.தேனி மாவட்டம் டொம்புச்சேரி ஐயா வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் 150 பிறந்தநாள் விழாவில் வணங்கிய போது….

12.செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு, போக்குவரத்து துறையின் சார்பில் அவரது வாழ்க்கை வரலாற்றை குறித்து மாணவமணிகள் அறிந்து கொள்ளும் வகையிலான புகைப்பட தொகுப்பு அடங்கிய பேருந்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார் Sakkarapani MLA

13.மதுரை மாவட்டம் பெரியஊர்சேரியில் தேசியத் தலைவர் ,கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல்,சுதந்திர போராட்ட வீரர்,ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் திருவுருவ சிலைக்கு பால் அபிஷேகம், தேன் அபிஷேகம், சந்தன அபிஷேகம்,பன்னீர் அபிஷேகம், திருநீறு அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் , தேன் அபிஷேகம் செய்து மாலை அனுவித்து மரியாதை செய்த அண்ணலெட்சுமி சகிலாகணேசன் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் மாநில மகளிரணி தலைவி.

14. இனிதே முடிந்தது தியாகி வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் 150வது பிறந்தநாள் கொண்டாட்டம் & சைவமுரசு நூல் வெளியீட்டு விழா. சிறப்பித்த, கலந்து கொண்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் திருநெல்வேலி மாவட்ட சைவ வேளாளர் இளைஞர் பேரவை சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

15.கப்பல் ஓட்டிய தமிழன் வாஉசிதம்பரம்பிள்ளை வேளாளர் அவர்களின் 150 வது பிறந்தநாள் முன்னிட்டு காமின்டன் படம் ரிலீஸ் செய்ய பட்டுள்ளது அனைவரும் பார்கவும் வஉசிதம்பரம்பிள்ளை பிறந்தநாள் தமிழகம் முழுவதும் வேளாளர் சமுதாயத்தால் சிறப்பாக கொண்டாட பட்டது