வேளாளர் கையெழுத்து போராட்டம்

அனைத்து வெள்ளாளர்/ வேளாளர் சமுதாய மக்களுக்கு வணக்கம்…🙏

 

பண்டைய காலம் தொட்டு இன்றுவரை தமிழையும், தமிழர் நாகரிகத்தையும் காத்து வருகின்றனர் வேளாளர் சமூகத்தினர்.

 

ஆன்மீகம்

 

கோவில்கள்,சைவ மடங்கள்,இறை வழிபாடு போன்றவை 18 ஆதீனங்கள் மூலம் பல ஆயிரம் ஆண்டுகாலம் பாதுகாத்து

வருகின்றனர்.

 

அறிவு

 

தமிழ் நூல்கள், பாடல், இலக்கியம்,அறிவு சார்ந்த நூல்களை எழுதி அறிவை வளர்த்தவர்களும் வேளாளர்களே…

 

வீரம்

 

மன்னர் ஆட்சி செய்த காலத்தில் வேளாளர் சமுதாயத்தில் சிலர் மன்னர், அமைச்சர்,காவல்,போர்ழதொழில் செய்யும் போர்குடிகளாக இருந்தனர்.தமிழ்குடி மக்களை பாதுகாத்திட வேளாளர் பெரும் பங்கு வகிக்கின்றனர்.

இப்படி பெருமை வாய்ந்த வேளாளர் இனம் தமிழ் மண்ணில் எல்லா இடங்களிலும் வாழ்கின்றனர்.அவர்கள் வாழும் இடத்திற்கு ஏற்ப வேளாளர்கள்.தங்கள் சாதி பெயரை பாண்டிய நாட்டில் வாழுந்த வேளாளர் பாண்டிய வேளாளர்,சோழ நாட்டில் வாழுந்த வேளாளர் சோழிய வேளாளர்,சேர நாட்டில் வாழுந்த வேளாளர் சேரகுல வேளாளர், கொங்கு நாட்டில் வாழுந்த வேளாளர் கொங்கு வேளாளர்,தொண்டை மண்டலத்தில் வாழ்ந்த வேளாளர் தொண்டை மண்டல வேளாளர், சைவத்தையும், ஆன்மீகத்தை காத்து வந்த தால் சைவ வேளாளர்.

 

பல இடங்களில் கவுண்டர், பிள்ளை, முதலியார் பட்டங்களை கொண்ட 42 -வேளாளர் உட்பிரிவுகளாக இதுபோல் பிரிந்து வாழுகின்றனர்.

 

எங்கள் 42 – வேளாளர் சாதி உட்பிரிவு பெயர்களை ஒரே பெயரில் அறிவிப்பு விடவேண்டும்.

 

பிற மாற்று சமூகம் யாரும் எங்கள் வேளாளர் சாதி பெயரை பயன்படுத்த கூடாது. வழங்கியதை ரத்து செய்ய வேண்டும்.

 

மத்திய, மாநில அரசுக்கு எங்கள் கோரிக்கையை கொண்டு செல்லும் வகையில் வேளாளர் கையெழுத்து போராட்டம் நடைபெறுகிறது. அனைவரும் ஆதரவு தரும்படி கேட்டு கொள்கிறோம்…

 

நன்றி…

வை.பி.பாலகுமார்

சுதேசி செய்திகள்