வ.உ.சியை காந்தி ஏமாற்றினாரா?

ஐயன் வ.உ.சிதம்பரம்பிள்ளை எழுதி பதிப்பித்த நூல் மெய்யறம்
இந்த நூலில் ஐயன் பல வரலாற்று தரவுகளை பதித்து உள்ளார்

காந்தியிடம் ஐயனுக்கு கொடுக்கசொல்லி தென் ஆப்ரிக்காவில் பணம் கொடுத்துது விட்ட #வேதியப்பபிள்ளை இந்த நூல் அச்சிடவும் நிதி உதவி செய்துள்ளார்
காந்தி நம் ஐயனுக்கு தரவேண்டிய பணத்தை தராமல்
( வேதியப்ப பிள்ளை கொடுத்து விட்டது ) ஏமாற்றியது தமிழர்கள் கட்டிவிட்ட கதை வேதியப்ப பிள்ளை என்ற ஒருவர் இல்லவே இல்லை என்று கதறினார்கள்
இதோ அந்த வேதியப்பபிள்ளை பற்றி ஐயனே இந்த நூலுக்கு நிதி உதவி அளித்தவர் என வேதியப்ப பிள்ளையை குறிப்பிடுகிறார் அவர் தென்னாப்பிரிக்காவில் வணிகம் செய்பவர் என்பதையும் அழுத்தமாக பதிவிடுகிறார்

மேலும் இந்த நூல் அச்சிட அதே தென்னாப்பிரிக்காவை சேர்ந்த #விருத்தாச்சலம்_பிள்ளை என்பவரும் நிதியுதவி தருகிறார் அது குறித்தும் நம் வ.உ.சி குறிப்பிட்டு உள்ளார்

அந்த விருத்தாச்சலம்பிள்ளை தென்னாப்பிரிக்காவில் தமிழருக்கு நன்மை புரிந்து வருபவர் என்ற சிறப்பு அடைமொழியும் தருகிறார் எங்கு சென்றாலும் வேளாளார்களின் கொடை பண்பை கைவிடுவதில்லை என்பதை எளிமையாக அழுத்தமாகஇதன் மூலம் பதிவு செய்கிறார்

இந்த நூலை தஞ்சாவூரை சேர்ந்த #கார்காத்த_வேளாளர் #தாளாண்மை_செய்யும்_வேளாளன்_சீனிவா_பிள்ளைக்கு என்பவருக்கு சமர்பிக்கிறார்

வேளாளர் என்போர் யார் தாளாண்மை செய்பவர்கள் என தெளிவாக இங்கும் நம்மை ஐயன் வ.உ.சி பதிவு செய்கிறார்

இந்த நூலை பதிப்பிற்கு கொண்டுவரும் போது ஐயன் வறுமையில் வாடிய நிலை இந்த நூலை 1917 ல் பதிப்பிக்கிறார்

1915 ல் காந்தி தென்னாப்பிரிக்காவை விட்டு இந்தியா வந்து விடுகிறார் தென்னாப்பிரிக்காவில் ஐயன் வழக்கு செலவுக்கு தமிழர்களால் நிதி திரட்டப்பட்டு அந்த நிதியை தென்னாப்பிரிக்கா அகிம்மசை போராட்டத்திற்கு செலவிடப்பட்டதாக ஐயனுக்கும் கடித போக்குவரத்து ஆதரங்கள் உள்ளன

ஆனால் இந்த வேதியப்ப பிள்ளை குறித்தோ அவர் அளித்த ஐயாயிரம் குறித்தோ காந்தி வாய் திறக்கவில்லை
வேதியப்பபிள்ளை தமிழகம் வந்தபிறகே இது குறித்து இந்த பணம் குறித்து ஐயன் அறிந்து வேதியப்ப பிள்ளையை நேரில் காந்தியிடம் அழைத்து சென்று அந்த பணத்தை திரும்ப பெறுகிறார்

வறுமையில் வாடினாலும் அந்த பணம் கிடைக்கபெற்ற ஐயன் அதை தான் எழுதிய தமிழ் நூலை அச்சடிக்க பயன்படுதினாரே ஒழிய தன் சுக போகத்திற்கு பயன்படுத்தவில்லை

மேலும் ஐயன் வறுமையில் வாடியபோது வேளாள சாதியினர் ஐயனுக்கு
அவர் வேண்டி தேவைப்படும் பொதுக் காரியங்களுக்கான நிதி உதவிகளை செய்தே வந்தனர் என்பதும் ஐயனின் இந்த பதிவுகள் மூலம் தெரிய வருகிறது
வாழ்க வேளாளன் ஐயன் வ.உ.சிதம்பரம்பிள்ளை புகழ்