18 வருடங்களாக வ.உ.சி சிலையை காணவில்லை?

திருப்பூர் மாவட்டம்

அவிநாசி வட்டம்

வ.உ.சி பூங்கா

 

இந்திய நாட்டின் விடுதலைக்காக தன் சொத்து, சுகங்களை இழந்து கப்பல் இரண்டுகளை வாங்கி சுதேசி வணிகம் செய்தார்.

 

யாருமே இதுவரை அனுபவிக்காத சிறை தண்டனையை வ.உ.சிக்கு 40ஆண்டுகள் கொடுத்தனர்.

 

வ.உ.சி அவர்கள் பிறந்தது தூத்துக்குடியாக இருக்கலாம்.

அவர் வாழ்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது கோவை மத்திய சிறை தான்.

 

இந்த நாட்டின் விடுதலைக்காக எத்தனையோ தலைவர்கள் போராடி சிறை சென்றுள்ளனர்.

 

 போராடிய அனைத்து தலைவர்களுக்கும் குறைந்த அளவில் சிறை தண்டனை….

 

வ.உ.சிக்கு மட்டுமே இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கோவை சிறையில் கல் உடைத்தார்,செக்கிழுத்தார்,பல கஷ்டங்களை அனுபவித்தார்.

 

 

தேசிய தலைவர்,

தியாகி, ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தை சுற்றி பல இடங்களில் வ.உ.சி பூங்கா,வ.உ.சி சாலை,வீதி,தெரு, பேருந்து நிலையம்,அரசு கட்டிடங்கள் அனைத்திற்கும் “வ.உ.சி” பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 

இன்று “திருப்பூர்” மாவட்டமாக இருப்பது அன்று “கோவை” மாவட்டத்தின் ஒரு பகுதி தான்.

திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகில், பெருமாநல்லூர் ரோடு பாண்டியன் நகர், சுல்தான் பேட்டை, போன்ற இடங்களுக்கு வ.உ.சியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 

18.11.2005 அன்று வ.உ.சியின் நினைவாக அவிநாசி வட்டாரத்தில் சேவூர் ரோட்டில் “வ.உ.சி குழந்தைகள் பூங்கா” ஒன்று புதியதாக நிறுவப்பட்டுள்ளது.

 

பூங்காவின் நுழைவு வாயில் அருகே வ.உ.சி சிலை வைப்பதற்காக இடம் ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு வ.உ.சி சிலை வைக்கும் இடத்தில் கட்டிட வேலையும் நடைபெற்று கொண்டு இருந்தது.

 

அப்போது நவம்பர் – 18 வ.உ.சி நினைவு நாள் வார தொடங்கியது. அவர் நினைவு தினத்தில் பூங்கா திறக்க வேண்டும் என்று நோக்கத்தில் சிலைக்கான‌ பணி பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

இன்று வரை 18 வருடங்கள் நிறைவு அடைந்து விட்டது இன்னும் அந்த பூங்காவில் வ.உ.சி சிலை வைக்கவில்லை.

 

வ.உ.சியின் சிலை வைப்பதற்கான கட்டிட பணி அரைகுறை நிலையில் உள்ளதை படத்தில் காணலாம்.

மேலும் வ.உ.சி பூங்காவை சுற்றி பராமரிப்பு இன்றி இருக்கின்றது, திறப்பு விழா கல்வெட்டு, குழந்தைகள் விளையாடும் அனைத்து பொருட்களும் சேதாரமாக உள்ளது. 

அவிநாசி பேரூராட்சி இவை அனைத்தையும் சரி செய்து புதுப்பொலிவுடன் வ.உ.சியின் தியாகத்தை அனைத்து பொதுமக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் வ.உ.சியின் வரலாற்று சரித்திரங்களை படங்கள் மூலம் பூங்காவை சுற்றி கண்காட்சியாக வைக்க வேண்டும். பழுது அடைந்து இருக்கும் வ.உ.சி பெயர் பலைகைகள் புதியதாக அரசு சார்பில் அமைக்க வேண்டும்.பாதி நிலையில் உள்ள வ.உ.சி சிலை வைப்பதற்கான இடத்தில் முழுஉருவ வெண்கல சிலை நிறுவ வேண்டும். 

 

அவிநாசி பேரூராட்சிக்கு அன்பான வேண்டுகோள்…

 

வ.உ.சி பூங்காவை சரிசெய்து, வ.உ.சியின் தியாகத்தை பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்லும் படி,

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் வாழும் வேளாளர்/ வெள்ளாளர் சமுதாய மக்கள் சார்பாக கேட்டு கொள்கிறோம்…

 

என்றும் பொது பணியில்,

சுதேசி செய்திகள் குழுவினர்