குச்சனூர் அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோவிலின் நிர்வாகத்தை பரம்பரை அறங்காவலரிடம் திருக்கோவில் நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டுமென கண்டன ஆர்ப்பாட்டம்

24.12.2023 அன்று தேனி மாவட்டம் குச்சனூர் ஊர் பொதுமக்கள்/ வெள்ளாளர் முன்னேற்றக் கழகம்/ தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி இணைந்து தேனி மாவட்டம் குச்சனூர் அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோவிலை உயர் நீதிமன்ற உத்தரவின் படி பரம்பரை அறங்காவலரிடம் திருக்கோவில் நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டுமென கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

 

குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோவில் தமிழ்நாடு இந்து அறநிலை துறையின் கீழ் நிர்வாகம் செயல்பட்டு வந்துள்ளது. இதனை கண்டித்து பரம்பரை அறங்காவலர் சார்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோவிலின் நிர்வாகத்தை  பரம்பரை அறங்காவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஆணையிட்டது. ஆனால் தமிழ்நாடு இந்து அறநிலைத்துறை இன்றுவரையிலும் நிர்வாகத்தை பரம்பரை அறக்கவல்களிடம் ஒப்படைக்கவில்லை அதனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது….

வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் மாநில மகளிர் அணி தலைவி/ தென்மண்டல அமைப்பாளர் திருமதி அன்னலட்சுமி சகிலா கணேசன் , தோழமை இயக்கமான தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அன்பு சகோதரர் ராஜேஷ் அவர்களும் கண்டன கோசம் எழுப்பி
கண்டனத்தை தெரிவித்தோம்.

இந்த நிகழ்வில் குச்சனூர் ஊர் பொதுமக்கள்,
வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் (மாநில கொள்கை பரப்பு செயலாளர் தென்மண்டல இளைஞர் அணி செயலாளர் புல்லட். ராம்குமார், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் குச்சனூர் கோபிநாத், தேனி மாவட்டச் செயலாளர் வீரபாண்டியன் பிள்ளை, தேனி மாவட்ட தலைவர் சதீஷ்குமார், தேனி மாவட்ட துணைத் தலைவர் சுப்பிரமணியன், தேனி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வெங்கடேஷ் கண்ணன், தேனி மாவட்ட மாணவர் அணி தலைவர் மகேஷ், தேனி மாவட்ட மாணவரணி இணைச்செயலாளர் அருண்குமார் பிள்ளை, தேனி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவினை செயலாளர் ரூபன்,
சின்னமனூர் நகர செயலாளர் / ஒருங்கிணைப்பாளர் பாலாஜி, சின்னமனூர் நகரத் தலைவர் தங்கபாண்டி, சின்னமனூர் நகர பொருளாளர் ராம்குமார் மேற்றும் சின்னமனூர் நகர இளைஞர் அணி, மாணவர் அணி, தொழிற்சங்க பிரிவு நிர்வாகிகள் , போடி ஒன்றிய இளைஞரணி செயலாளர் தேனி மணி மற்றும் வீரபாண்டி பேரூர் கழக இளைஞர் அணி நாகராஜ் & பகவதி). மதுரை மாவட்ட இளைஞரணி தலைவர் விக்கி, மதுரை தெற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பாண்டி குமார், சிந்தாமணி அய்யனார், செல்லூர் மணி, குச்சனூர் பேருர் பொறுப்பாளர் விக்கி, முத்துக்கண்ணன் பலர் கலந்து கொண்டனர்.

தோழமை இயக்கமான தென் இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலத் தொண்டர் அணி செயலாளர் செல்வகுமார், மாநில இளைஞர் அணி செயலாளர் தனபால்,
மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ்குமார்,
தேனி மேற்கு (மாவட்ட பொதுச் செயலாளர் தெய்வம், மாவட்டச் செயலாளர் ஆனந்த் & ரஞ்சித், மாவட்ட தொண்டரணி பொதுச் செயலாளர் முத்து செல்வம், மாவட்ட தொழிற்சங்கப் பிரிவு செயலாளர் சுதாகரன், மாவட்ட தொண்டரணி செயலாளர் அஜித் குமார்), தேனி கிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் மகேந்திரன், தேனி மேற்கு (மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கிருத்திக் ரோஷன், கம்பம் நகர பொதுச்செயலாளர் முத்துசாமி, கம்பம் நகர பொறுப்பாளர் சதன்,சின்னமனூர் நகர தொண்டரணி பொதுச் செயலாளர் ராஜ்குமார், சின்னமனூர் நகர ஒன்றிய தொண்டரணி நிர்வாகிகள் சிவா, தட்சணாமூர்த்தி , பாலமுருகன், அஜித், விகாஷ்) மற்றும் கூழையனூர் டைலர் ராமன் பலர் கலந்து கொண்டனர்.