Mahendran DMK

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகி திமுகவில் இணைந்த டாக்டர் மகேந்திரனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கியதில் இருந்தே அவருடன் பயணித்தவர்களில் முக்கியமானவர் மகேந்திரன்.. அக்கட்சியின் துணைத்தலைவராக இருந்த அவர், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, கமலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகினார். அவரை தொடர்ந்து கட்சியின் மற்ற முக்கிய நிர்வாகிகளான பொன்ராஜ், குமரவேல், மவுரியா, முருகானந்தம், சந்தோஷ்பாபு, பத்ம பிரியா உள்ளிட்ட அனைவரும் கட்சியில் இருந்து விலகினர். இதனையடுத்து மகேந்தின் திமுகவில் இணைய உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன..

அதற்கேற்றார் போலவே கடந்த மாதம் மக்கள் நீதிமய்யத்தில் இருந்து விலகிய மகேந்தின், பத்மபிரியா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் நேற்று திமுகவில் இணைந்தனர்.. மேலும் அவருடன் 78 நிர்வாகிகளும், 11,000-க்கும் மேற்பட்ட தொண்டர்களும் திமுகவில் இணைந்தனர்.. இதனிடையே மகேந்திரனுக்கு திமுகவில் ஏதேனும் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று ஏற்கனவே தகவல் வெளியானது.. இந்நிலையில் டாக்டர் மகேந்திரனுக்கு தகவல் தொழில்நுட்ப இணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே நிமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் அவர் இணைந்து பணியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..