பெயருக்கு பின்னால் இருக்கும் சாதி பட்டத்தை நீக்க நீங்கள் யார்?

தமிழ்நாடு பாடநூல் கழகம் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

பாடநூல்களில் வரும் அறிஞர்கள் பெயருக்கு பின்னால் வரும் சாதி பட்டங்கள் நீக்கம் என அறிவித்துள்ளது.

 

ஐயா வ.உ.சிதம்பரம்பிள்ளை  கையெழுத்து.

அதில் அவர் வ.உ.சிதம்பரம்பிள்ளை என்று தான் போட்டு உள்ளார். 

அதை  நீங்கள் வ.உ.சிதம்பரனார் என்று ஏன் மாற்றுகிறேர்கள்?

அவர் பெயரை மாற்ற உங்களுக்கு யார் உரிமை குடுத்தார்?

உ. முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் கையெழுத்து.

அதில் அவர் உ. முத்துராமலிங்கத்தேவர் என்று தான் போட்டு உள்ளார்.

அதை ஏன் உ. முத்துராமலிங்கம் என்று போடுகிறேர்கள். 

பெயருக்கு பின்னால் வரும் சாதி பட்டங்கள் நீக்கினால் சாதி ஒழியும் என்று யார் சொன்னது?

சாதியை ஒழிக்க வேண்டும் என்றால் தமிழ்நாடு அரசு வழங்கும் சாதி சான்றிதழ் வழங்குவதை நிறுத்துங்கள். 

சாதி பெயரால் வழங்கும் இட ஒதுக்கீட்டை நிறுத்துங்கள். அனைத்து சாதி யிலும் பணக்காரன் உள்ளான், ஏழையும் உள்ளான். 

அவர்கள் திறமைக்கு ஏற்ப அரசு வேலை வழங்குங்கள். 

இந்தியாவில் எத்தனையோ அமைச்சர், அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய புள்ளிகள் பெயருக்கு பின்னால் சாதி பெயர் போட்டு உள்ளார்கள் முதலில் அதை நீக்குங்கள். பிறகு தலைவர்கள் பெயருக்கு பின்னால் உள்ள சாதி பட்டத்தை நீக்கலாம்.