தேவரை ஏற்றுக்கொண்டவர்கள் வெள்ளாளர் சமூகத்தினர்…

முதுகுளத்தூர் கலவரத்திற்கு எந்தவொரு சம்பந்தமும் இல்லாத,முழுக்க முழுக்க வெள்ளாளர் சமூக மக்கள் வாழ்கின்ற கல்லூரணி கிராமத்தில் 130-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.அந்த கிராமமே காமராஜர் அரசின் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டது.ஏன்? எதற்காக? அந்த கிராம மக்கள் எல்லாம் பசும்பொன் தேவரை தலைவராக ஏற்றுக்கொண்டார்கள் என்பதற்காகவும்,அந்த மக்கள் எல்லாம் ஃபார்வர்டுபிளாக் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பதற்காகவும் தான் பல்வேறு அடக்குமுறைகள் அவர்கள் மீது ஏவப்பட்டது.அந்த கிராம மக்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து தேவருக்கு சிலை வைத்துள்ளார்கள்.அந்த சிலை தான் தேவர் மறைவிற்கு பிறகு அவருக்கு முதன்முதலில் வைக்கப்பட்ட சிலை.இதேபோல இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில்,விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியில் உள்ள தேவர் சிலை வெள்ளாளர் சமூகத்தவரால் வைக்கப்பட்ட சிலை.இவர்கள் எல்லாம் ஃபார்வர்டுபிளாக் கட்சியை சேர்ந்தவர்கள்.தேவரை தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள்.தேவர் அவர்கள் தன்னுடன் இருந்து தனக்கு உதவி செய்துவந்த 16 பேருக்கு தன் சொத்தின் ஒரு பகுதியை எழுதி பத்திரபதிவு செய்துகொடுத்துள்ளார்.அந்த 16 பேரில் அய்யா குருசாமி பிள்ளை அவர்களும் ஒருவர்.திருச்சுழி பகுதியில் தேவர் ஜெயந்தி விழாவை நடத்திவந்தவர்.ஃபார்வர்டுபிளாக் இயக்கத்தின் விருதுநகர் மாவட்ட தலைவராக இருந்தவர். தேவர் அவர்கள் 137 ஏக்கர் நிலங்களை இவர் பெயருக்கு எழுதி பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார்.தேவர் பெயரில் கல்லூரி அமையும் போது தேவர் சொத்து தேவருக்கே என்று 137 ஏக்கர் நிலங்களையும் மீண்டும் தேவர் பெயருக்கே எழுதி கொடுத்துவிட்டார்.அதன்மூலம் அமைந்தது தான் கமுதி தேவர் கல்லூரி.அய்யா குருசாமி பிள்ளை அவர்கள் தேவரை போலவே சட்டை அணிந்து வந்தவர்.இவரை போல உண்மையான தேவர் திருத்தொண்டர்களை இனி எங்கே காணபோகிறோம்? வெள்ளாளர் சமூகத்தில் மட்டுமில்லை அனைத்து சமூகத்திலும் உழைக்கும் மக்கள் என்றைக்கும் தேவர் பக்கம் தான் இருந்தார்கள்…

தேவர் அவர்களும் வ.உ.சி அவர்களை சிதம்பரம் சிங்கம் என்று தான் அழைத்தார்…

சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்டவர் வ.உ.சிதம்பரம்பிள்ளை என்று ஒரு கூட்டத்தில் வீர முழக்கம் செய்தார்..