பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை கொடூரமாக கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை கொடூரமாக கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகில் உள்ள மாதாப்பூர் ஊராட்சியில் கள்ளக்கிணறு என்ற இடத்தில் நேற்று மாலை தங்கள் தோட்டத்திற்குள் மது அருந்தியவர்களை தடுத்து கேட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த செந்தில்குமார், மோகன்ராஜ், புஷ்பவதி, ரத்தினாம்பாள் ஆகிய நான்கு பேரையும் எந்த பயமும் இல்லாமல் அறிவாளை வைத்து கொடூரமான முறையில் வெட்டிக் கொன்ற கொலையாளிகளை தாமதம் இல்லாமல் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மதுபான கடைகளில் மது வாங்குபவர்கள் பக்கத்தில் இருக்கின்ற இடங்களுக்கு சென்று அமர்ந்து மது அருந்துவது வாடிக்கையான ஒன்றாக இருக்கிறது. அதேபோன்ற ஒரு நிகழ்வுதான் இங்கும் நடந்திருக்கிறது. கொலை நடத்தப்பட்ட விதத்தை பார்க்கும் பொழுது அதற்காக மட்டுமே இது நடந்திருக்குமா என்ற சந்தேகம் எழத்தான் செய்கிறது. முன்பகை ஏதும் இருக்குமோ என்ற ஐயமும் எழுகிறது. காவல் துறை விசாரணையை தீவிரப்படுத்தி உண்மையை கண்டறிந்து கொலை செய்தவர்கள் மீது தயவு தாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். துரிதமான நடவடிக்கை தான் இது போன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடப்பதை தடுக்கும். அந்தப் பகுதி மக்களிடையே அச்சத்தை போக்கும். கொங்கு மண்டலத்தில் இது போன்ற நிகழ்வுகள் பல பகுதிகளிலே தொடர்ந்து நடந்தேறி வருகிறது. காவல்துறை இதையெல்லாம் கவனத்தில் கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. காவல்துறை உயர் அதிகாரிகள் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் எப்படிப்பட்ட தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இதைப் போன்ற நிகழ்வுகளிலே ஈடுபடுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமையும்.