பிராமணர்களை தண்டித்த வீரக்கொடி வேளாளர்

“வீரக்கொடியார் கைய்யாலே கொலை உண்ண கடவாராக”

என்ற வாசகம் கல்வெட்டில் பயின்றுவருவதை காண முடியும்,

இந்த கல்வெட்டு வாசகத்தின் மூலம் நாம் என்ன அறிய முடிகிறது, வீரகொடியாரிடம் சிக்கிக்கொண்டால் சிக்கிகொண்டவர்களின் நிலமை என்ன என்பதை யோசித்து பார்த்தால் மிஞ்சுவது திகில் மட்டுமே

அவ்வளவு கொடுமையானவர்கள் அவர்கள் அதன் காரணமாக தன்மங்களை மீறுபோர்கள் அவர்கள் கையால் சாவார்கள் என்று கூறிவைத்துள்ளார்கள்.

இவர்கள் முசிறி நாட்டின் நாட்டார்கள் இவர்கள் இலங்கை சென்று சிங்களரைகளை தும்ஷ்சம் செய்தார்கள் இவர்களின் இந்த வெற்றிக்காக முசிறி அருகே இருக்கும் சிங்களாந்தபுரம் என்ற ஊரை பரிசாக அவர்களுக்கு வழங்கப்பட்டது.

சிங்களந்தபுரத்தின் ஊரின் நடுவில் இருக்கும் வலங்கை உய்யகொண்டார்களின் கல்வெட்டின் மூலம் இதனை அறிய முடிகிறது.

சிங்களன் + அந்தம் + புரம் : சிங்களாந்தபுரம்

அந்தம் என்றால் முடிவு என்று பொருள் அதாவது சிங்களர்களுக்கு முடிவு கட்டியதால் சிங்களாந்தபுரம் என்ற பெயர் வந்தது.

இது போல பல கல்வெட்டுகளில் வாள் வீரர்களாக கூறப்பட்டிருப்பார்கள்.

இவ்வளவு பராக்கிரமம் நிறைந்த வீரகொடியார்கள் முசுகுந்தனின் வழிவந்தவர்கள் என்பதால் இவர்களை முசுகுந்த வெள்ளாளர் என்று அழைக்கப்படுகிறார்கள்

ஆனால் அரசு கெசட்டில் வீரகொடி வெள்ளாளர் என்றே உள்ளது. பேச்சு வழக்கில் வீரகுடி வெள்ளாளர் என்று அழைக்கப்படுகிறார்கள்.

 

Subscribe sudhesinews