வீரக்கொடி வேளாளன் குன்றாத பெருமாள்

Subscribe sudhesinews channel

👉   SUDHESI NEWS   👈

சோழகுலாந்த பெரு வழி எனும் பாண்டிய கொங்கு நாட்டு இராசபாட்டை யில்
13 ம் நூற்றாண்டில் குலசேகர பாண்டியன் காலத்தில் வெறும் கைகளால் வணிக குழுக்களுக்கும் மக்களுக்கும் தொல்லை கொடுத்த ஒரு பெரும் ஆட்கொல்லி புலியை கொன்று தானும் உயிரிழத்த பெருவீரன் வீரக்கொடி வேளாளன் குன்றாத பெருமாள்

நினைவாக எடுப்பித்த நடுகல்

இந்த கல் சுற்றி ஒன்னரை மா நிலம் இந்த நடுகல்லுக்காக உதிர தானமாக வணிகர் நிலத்தை விலைக்கு வாங்கி அளித்துள்ளனர் ..

தமிழகத்தில. எத்தனையோ புலிகுத்திகற்கள் கிடைத்துள்ளன ஆனால் நிலக்கோட்டை அருகே உள்ள இந்த கல் வித்தியாசமானது

ஒருபுலியும் மனிதனும் செய்யும் துவந்த யுத்தம் …

புலியிடமாவது கூரிய நகங்கள் உள்ளது மோதும்  மனிதனிடம் அதுவும் இல்லை

புலி தன் முன் கால்களால் குன்றாத பெருமாள் கைகளை தன் நகங்களால் பிடித்து உள்ளது பின் கால்களால் அவரின் ஒரு காலை மட்டும் பிடித்துள்ளது குன்றாத பெருமாள் தன் பெயருக்கு ஏற்றவாறு தன் நிலை சற்றும் குன்றாது தன் ஒருகாலை சற்று பின் வைத்து நன்கு ஊன்றி நின்று புலியை எதிர் கொள்கிறார்

இந்த நிலை வர்ம தாக்குதலின் ஒருநிலை தன் வலது கரத்தினால் புலியின் பலவீனமான நெற்றி உச்சியில்  வர்ம தாக்குதல் செய்கிறது போல இந்த நடுகல் சிற்பம் வடிக்கபட்டுள்ளது.