Velalar Name Issue

வாதிரியார் சாதியை பள்ளன் உட்பிரிவில் இருந்து வெளியில் எடுத்து விடக்கோரி தென் இந்திய ஃபார்வட் பிளாக் கட்சி சார்பில் வாதிரியார் சமுதாய மக்கள் ஆட்சியரிடம் மனு

✍தென் இந்திய ஃபார்வட் பிளாக் கட்சி சார்பில் வாதிரியார் சமுதாய மக்கள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்க திரளானோர் வந்தனர்.

அம்மனுவில் கூறியிருப்பதாவது;

✍மேல்மாந்தை என்னும் இடத்தை பூர்விகமாக கொண்ட வாதிரியார் சாதி பெயர் கொண்ட நாங்கள் கன்னியாகுமரி நாகர்கோவில் திருநெல்வேலி தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் வாதிரியார் என்ற ஜாதி பெயரோடு வாழ்ந்து கொண்டு வருகிறோம் மேலும் எங்களது நில பட்டாக்கள் அரசு ஆவணங்களில் வாதிரியார் என்றுதான் உள்ளது எங்களுடைய வாதிரியார் ஜாதி பெயர் 1956 ஆம் ஆண்டு பள்ளன் உட்பிரிவில் எங்கள் வாதிரியார் மக்களின் அனுமதி இன்றி இணைக்கப்பட்டு இருக்கிறார்கள் அதுவும் எங்களுக்கு சம்பந்தம் இல்லாத ஊர் சேலம், கோவை மாவட்டத்தை உள்ளடக்கி இணைத்திருக்கிறார்கள். சேலம், கோவை மாவட்டத்தில் வாதிரியார் ஜாதி மக்கள் நாங்கள் வாழவில்லை பள்ளன், பண்ணாடி என்பவர்களுக்கும் வாதிரியார் ஜாதியான எங்களுக்கும் எந்த ஒரு உறவின் முறையும் கிடையாது. வாதிரியார் ஜாதி எங்களுக்கு 7 கிளை 28 வம்சம் உள்ளது நாங்கள் தனித்தன்மையோடு மிகவும் கௌரவமாக தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

✍தற்போது தேவேந்திர குலம் என்ற பெயர் சம்பந்தமாக பள்ளன், குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், தேவேந்திர குலத்தான் என்ற பெயரில் வாழ்ந்து வருபவர்கள் வாதிரியார் என்பவர்கள் எங்கள் கூட சார்ந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு போராட்டங்களை நடத்தி வந்தார்கள் அதை எதிர்த்து வாதிரியார் ஜாதியை சார்ந்த நாங்கள் பலமுறை அரசு அதிகாரிகளிடம் எங்களது எதிர்ப்பினை தெரிவித்ததனால் 27/02/2019 அன்று தமிழக அரசின் அறிவிப்பின்படி உயர்திரு ஹன்ஸ் ராஜ் வர்மா அவர்கள் தலைமையில் ஒரு ஆய்வு குழு நடந்தது அதில் எங்கள் வாதிரியார் ஜாதி பெயரை விளக்கி மீதமுள்ள ஆறு பிரிவினர்களுக்கு மட்டும் தான் ஆய்வுக் குழு போடப்பட்டது அதில் எங்கள் வாதிரியார் ஜாதி பெயர் கிடையவே கிடையாது. அதன்பின் தேவேந்திர குல பெயர் சம்பந்தமாக புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி எங்கள் வாதிரியார் ஜாதி பெயரை விலக்கி ஆறு பிரிவு என்று தான் கோரிக்கை வைத்துக்கொண்டு வருகிறார்.

✍ஆனால் அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சித் தலைவர் ஜான் என்பவர் வாதிரியார் என்ற ஜாதி பெயரை சேர்க்கத்தான் செய்வேன் என்று வாதிரியார் மக்கள் எங்களை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார் வாதிரியார் என்ற ஜாதி பெயர் பள்ளன் உட்பிரிவில் தான் இருக்கிறது அதனால் நான் இணைக்கத் தான் செய்வேன் என்று தெளிவாகச் சொல்லுகிறார். அதனால் 1956 இல் வாதிரியார் என்ற எங்கள் ஜாதி பெயரை பள்ளன் பண்ணாடி உட்பிரிவு என்று எங்கள் அனுமதியின்றி செய்த சட்டத்திருத்தத்தை ரத்து செய்து தரும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

✍மேலும் என்னவென்றால் வாதிரியார் என்ற நாங்கள் பள்ளன் என்பவர்கள் உட்பிரிவில் இருந்தால்தான் ( ) SC பட்டியலில் தொடரமுடியும் என்ற கேள்விகள் எழும்பியது என்றால் எங்களுக்கு SC பட்டியல் வேண்டாம் 1956 க்கு முன்னாள் வாதிரியார் ஜாதியான நாங்கள் எந்த இடத்தில் இருந்தோமோ அதே இடத்தில் வாதிரியார் ஜாதி எங்களை வைக்க வேண்டும் என்று மிகவும் தெளிவாக கோரிக்கை வைத்துக் கொள்கிறோம். அந்த மனுவில் கூறியுள்ளனர்.

இது மட்டும் அல்லாமல் வேளாளர் என்ற பெயரில் ஒரு சாதி இருக்கும் போது அந்த பெயரை எப்படி இவர்கள் கேட்கலாம்?