திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் வெள்ளாளர் முன்னேற்ற கழகம்

வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் நிலைப்பாடு!

கழக நிறுவனத் தலைவர் அண்ணா சரவணன்
அவர்களது தலைமையில் 2021 சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் பயணித்து. தற்போது
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணியில் இருந்து
வெள்ளாளர் முன்னேற்ற கழகம் வெளியேறுகிறது.

1.) இந்த தேசத்திற்கு மாபெரும் தியாகத்தை செய்த ஐயா வ.உ.சி யை தவறாக பேசிய நீலகிரி எம்.பி ஆண்டிமுத்து ராசாவை இதுவரை கண்டிக்காத திமுக தலைமை

2.) நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் உங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு அதாவது எங்கள் சமூகத்தைச் சார்ந்த திமுக நிர்வாகிகளுக்கு வாய்ப்பளிக்காத திமுக தலைமை வெள்ளாளர் வேளாளர் சமூக மக்களின் அரசியல் அதிகாரத்தை பறிக்கும் விதமாக புறக்கணித்து திமுக தலைமை.

3.) 2024 திமுக நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் பட்டியலில் தொடர்ந்து மீண்டும் எங்கள் சமூகத்தைச் சார்ந்த தங்கள் கட்சி நிர்வாகிகளுக்கே வாய்ப்பளிக்காத திமுக தலைமை வெள்ளாளர் வேளாளர் மக்களின் அரசியல் அதிகாரத்தை பறிக்கும் விதமாக புறக்கணித்து
திமுக தலைமை தொடர்ந்து செயல்படுகிறது.

எங்கள் சமூக மக்களின் அரசியல் நிலைப்பாட்டின் நலனை கருத்தில் கொண்டு திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக கழகத் தோழர்களின் பெரும் ஆதரவோடு இந்த முடிவை எடுத்துள்ளோம்!.

நன்றி..

அண்ணா.சரவணன்

நிறுவன தலைவர்

வெள்ளாளர் முன்னேற்றக் கழகம் தமிழ்நாடு