நாடாளுமன்றத்தில் வ.உ.சிக்கு முழு உருவ சிலை நிறுவ வேண்டும் -வ.உ.சி கொள்ளு பேத்தி

கப்பலோட்டிய தமிழன் நினைவைப் போற்றும் வகையில் நாடாளுமன்றத்தில் முழு உருவ சிலை நிறுவ வேண்டும் என வ.உ.சி கொள்ளு பேத்தி செல்வி கூறியுள்ளார்.

 

சுதந்திரப் போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழன் நினைவைப் போற்றும் வகையில் நாடாளுமன்ற வளாகத்தில் முழு உருவ வெண்கலச் சிலையை நிறுவ வேண்டும் என வ.உ.சி கொள்ளு பேத்தி செல்வி கோரிக்கை விடுத்துள்ளார்.

வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 86 நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வ.உ.சி யின் கொள்ளுப்பேத்தி செல்வி மற்றும் அவரது குடும்பத்தினர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த வ.உ.சியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வ.உ.சி கொள்ளு பேத்தி செல்வி , தென்னக இந்தியாவின் தியாகங்களை நினைவு கூறும் வகையில் நாடாளுமன்ற வளாகத்தில் வ உ சிதம்பரம் பிள்ளையின் முழு வெண்கல உருவச்சிலையை நிறுவப்பட வேண்டும் என பேசினார்.

மேலும், நாடாளுமன்ற பிரதான நுழைவாயில் வ உ சிதம்பரம் பிள்ளை பெயரைச் சூட்டவும் கோரிக்கை விடுத்தனர் . தொடர்ந்து பேசிய அவர், இது சம்பந்தமாகக் கோவில்பட்டிக்கு வருகை தந்த தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனுவை அளித்து உள்ளதாக கூறினார். இது தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தார் சார்பாக கேட்டுக் கொள்வதாக வ.உ.சி. கொள்ளுப்பேத்தி தெரிவித்தார்.