வ.உ.சிதம்பரனார் சாலை

மதுரை மாநகராட்சி ஆணையாளர் அவர்களுக்கு வணக்கம்!

மதுரை வடக்கு வெளி வீதி- சிம்மக்கல் சாலைக்கு விடுதலைப் போராட்ட வீரர் வழக்கறிஞர் வ.உ.சிதம்பரனார் சாலை என்று உலகத் தமிழ் மாநாடு மதுரையில் நடைபெற்ற போது அவரது தியாகத்தைப் பறைசாற்றும் விதமாகத் தமிழ்நாட்டின் அரசால் சூட்டப் பெற்றது.காலப் போக்கில் வ.உ.சிதம்பரனாரின் தியாகத்தை இருட்டடிப்பு செய்யும் விதமாக வ.உ.சிதம்பரனார் சாலை என்ற பெயர் பலகை அகற்றப்பட்டது.அது தொடர்பாகத் தகுந்த ஆதாரங்கள் அளித்தும் மாநகராட்சி அதிகாரிகள் மீண்டும் பெயர் பலகை வைக்க மறுத்துவிட்டனர்.வ.உ.சிதம்பரனார் என்பவரின் தியாகத்தை நினைத்துக் கூடப் பார்க்க யாருமில்லை எனவே ஆதரவற்ற நிலையில் உயர்நீதிமன்றத்தை அடைந்தேன்.மனுவை விசாரித்த மாண்புமிகு நீதியரசர் வ.உ.சிதம்பரனாரின் தியாகத்தால் நாமெல்லாம் சுதந்திரமாய் வாழ்கின்றோம்!அவரின் தியாகத்தை போற்றிப் பாதுகாப்பு நம் அனைவரின் கடமையாகும் என்று கூறியதோடு வடக்கு வெளி வீதி – சிம்மக்கல் சாலையில் 48 மணி நேரத்திற்குள் மீண்டும் வ.உ.சிதம்பரனார் பெயர் பலகையினை நிறுவிட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.அதன் பேரில் சேதுபதி மேல்நிலைப் பள்ளி அருகிலும், சிம்மக்கல் வடக்கு வெளி வீதி சந்திப்பிலும் (பூர்வீகா மொபைல் அருகில்) இரு பெயர் பலகைகள் உடனடியாக மதுரை மாநகராட்சியால் நிறுவப் பெற்றது.உயர்நீதிமன்ற உத்தரவின்படி மாநகராட்சியால் மீண்டும் நிறுவப் பெற்ற வ.உ.சிதம்பரனார் சாலைப் பெயர் பலகை மர்மமான முறையில் அகற்றப்பட்டுள்ளது.இந்த செயல் எங்களை போன்றவர்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.என வே தாங்கள் எனது புகாரினை வேண்டுகோளாக ஏற்று உரிய விசாரனை செய்து மேற்கண்ட வ.உ.சிதம்பரனார் சாலைப் பெயர் பலகையினை அகற்றிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீண்டும் அதே இடங்களில் வ.உ.சிதம்பரனார் சாலை பெயர் பலகையினை நிறுவி அன்னாரின் தியாகத்தைப் போற்றிப் பாதுகாத்திட ஆவண செய்ய வேண்டும்.

வை.பி.பாலாபிள்ளை

சுதேசி செய்திகள்