வேளாளர் குலத்தில் பிறந்த மன்னர் வல்வில் ஓரி வரலாறு

யார் இந்த வல்வில் ஓரி…?

கி.பி 120 ஆம் ஆண்டு கொங்கு வேளாளர் கவுண்டர் குலத்தில் பிறந்த மன்னர் ஆவார்.

வில் வித்தையில் சிறந்து விளங்கியவரும், ஈகையின் மறு உருவமும், கடையேழு வள்ளல்களில் ஒருவருமான கொல்லிமலையை ஆண்ட “வல்வில் ஓரி” மன்னனின் சிறப்பை போற்றி, ஆடி மாதம் 17,18 ஆகிய இரு நாட்கள் அரசு சார்பில் விழா இன்று வரை நடத்தப்பட்டு வருகிறது.

சங்க காலத்தில் கொடையில் சிறந்த கடையெழு வள்ளல்களில் ஒருவரான “வல்வில் ஓரி” வேளாள மன்னன் நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கொல்லிமலையை ஆட்சி செய்தார் எனவும் வரலாறு குறிப்பிடுகிறது.

வில் வித்தையில் சிறந்த விளங்கிய ஓரி மன்னனின் வீரம், கொடைத்தன்மை குறிக்கிறது.

வில்வித்தையில் சிறந்து விளங்கிய ஓரி மன்னனின் சிறப்பை போற்றும் வகையில் வில்வித்தை போட்டி, பாரம்பரிய நடனங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த விழாவில் மன்னர் வகையறாக்கள் , மலைவாழ் மக்கள் மட்டுமன்றி சுற்றுப்புற மக்களும் பங்கேற்பது வழக்கம். இதனால், ஓரி மன்னன் சிலை அமைந்துள்ள கொல்லிமலை செம்மேடு பகுதி விழாக்கோலம்போல் காட்சி தருகிறது. இதுபோன்ற பல்வேறு சிறப்புகள் பொருந்திய ஓரி மன்னனுக்கு அவர் ஆட்சி செய்த கொல்லிமலையில் மணி மண்டபம் கட்ட வேண்டும் என கொங்கு வேளாளர் சமுதாயம் மற்றும் வல்வில் ஓரி வகையறாக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

யாரும் அறிந்திராத கொல்லிமலை சிறப்புகள்:

கொல்லிமலை, தமிழ்நாட்டின் மத்தியில் இருக்கும் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும். 1000 முதல் 1300 மீ உயரம் கொண்ட கொல்லிமலை 441.4 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டது. ஏராளமான மூலிகை வளம் கொண்ட இந்த மலையில் 14 நாடுகளையும் உள்ளடக்கிய கொல்லிமலையை தலைமையிடமாகக் கொண்டு ஓரி மன்னன் ஆட்சி செய்து வந்தார்.

ஒரு முறை வல்வில் ஓரி ராசபுரம் என்னும் பகுதியில் (தற்போது இராசிபுரம்) வேட்டையாட சொல்லும் போது அங்கு ஒரு பன்றியின் மீது அம்பினை செலுத்த, அப்பன்றியானது ஒரு புதரில் போய் மறைந்து விட, அந்த இடத்தில் வல்வில் ஓரி சென்று பார்க்கும் போது அங்கு பன்றிக்கு பதிலாக ஒரு சிவலிங்கமும், அச்சிவலிங்கத்தின் மீது வல்வில் ஓரி எய்த அம்பும், அந்த அம்புபட்டதால் அந்த சிவலிங்கத்தில் ரத்தமும் கசிந்தது. இதைக் கண்ட ஓரி சிவன்தான் தன்னை பன்றி வடிவில் வந்து சோதித்ததாக எண்ணி அவ்விடத்திலேயே சிவபெருமானுக்கு ஸ்ரீ கைலாச நாதர் திருக்கோயில் என்ற பெயரில் ஆலயம் எழுப்பினான்.
இதனை குறிக்கும் வகையில் அந்த ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயிலின் கொடிமரத்தில் சிவபெருமானை குறிக்கும் வகையில் முள் புதரின் முன் பன்றி வடிவமும், வல்வில் ஓரியை குறிக்கும் வகையில் வாளும் கேடயமும், பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு இவ்வாலய கோபுரத்தின் பின்புறத்தில் சித்தரிக்கப்பட்டனர்..

கடையெழு வள்ளல்களுள் ஒருவனான ஓரி சிறந்த வில்லாளி. கொல்லிமலைக்கும் அதைச் சார்ந்த நாட்டிற்கும் தலைவன். வல்வில் ஓரி எனவும் ஆதன் ஓரி எனவும் அழைக்கப்பெறுவார். தமிழகத்தின் கொல்லிமலைப்பகுதியில் ஆண்டுதோறும் வல்வில் ஓரியின் நினைவாக திருவிழா கொண்டாடப்படுகிறது.