Velalamuthaliyar

முதலியார் என்பது பட்டம் மட்டுமே அது ஜாதி பெயர் கிடையாது.

 

இந்த கல்வெட்டில் பாருங்கள் தெளிவாக கூறுகிறது பையூர் கோட்ட வெள்ளாள ஜாதி பிசகாமொழி கோத்திரம் வேலப்ப முதலியார் என்று கூறுகிறது.

 

இதில் பையூர் கோட்டம் என்பது பூகோள பெயர், வெள்ளாளர் என்பது ஜாதி பெயர், முதலியார் என்பது பட்டம்.

 

அதாவது வெள்ளாளர்கள் மேற்கு தமிழகத்தில் கவுண்டர் என்றும், வட தமிழகத்தில் முதலியார் என்றும், கிழக்கு மற்றும் தெற்கு தமிழகத்தில் பிள்ளை என்று தங்களின் ஜாதி பட்டங்களாக பயன்படுத்தி வருகிறார்கள்.

 

இதே பட்டங்களை வேறு ஜாதினரும் பயன்படுத்துவார்கள் உதாரணம் கவுண்டர் என்பதை  வேட்டுவர்களும், முதலியார் என்பதை  கைக்கோள செங்குந்தர்களும், பிள்ளை என்பதை  ஈழவர்களும் பயன்படுத்துவார்கள்.

 

இன்றைய காலங்களில் பட்டங்களை கொண்டு ஒருவர் என்ன ஜாதி என்று முடிவு செய்ய முடியாது என்பதற்கு இக்கல்வெட்டே சாட்சி

 

கொங்கு வெள்ளாளரில் நீருண்ணி என்ற கோத்திரத்தாரும் முதலியார் பட்டம் உடையவர்கள்.

 

ஆக ஜாதியின் பட்டங்கள் என்பது தோளில் போடும் துண்டு போன்றது அது இல்லாமல் கூட வெளியே போக முடியும். ஆனால் ஜாதி என்பது இடுப்பில் கட்டும் வேட்டி போன்றது அது இல்லாமல் வீட்டுவாசப்படியை கூட தாண்ட முடியாது.

 

இதை ஏன் சொல்கிறேன் என்றால் அனைவரும் தாங்கள் பயன்படுத்து பட்டங்களைத்தான் ஜாதி பெயர் என்று நினைத்து வருகிறார்கள். அவர்களுக்கு இந்த பதிவை சமர்ப்பிகிறேன்..

 

சோழர்களின் ஆட்சி காலமே வேளாளர்களின் பொற்காலம்

 

சோழம் மீளும்

 

நன்றி.

சோழன் சிவப்பிரகாஷ்

27/11/2020