பரமக்குடி ஓட்டபாலம் ரவுண்டானாவில் வ.உ.சி சிலை வேண்டும்….

தென் தமிழகத்தில் ஒரு மாபெரும் தியாகி, தலைவர் என்றால் அது ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் மட்டும்தான்…

 

அப்படி என்ன செய்தார் வ.உ.சி…?

வாருங்கள் பார்ப்போம்…

 

1700ஆண்டுகளில் இருந்து படி படிப்படியாக தமிழகத்தை ஆட்சி செய்ய தொடங்கினார்கள் ஆங்கிலேயர்.

பல மன்னர்கள், மாவீரர்கள் போராடியும் இந்த தமிழக மண்ணை மீட்க முடியவில்லை.

வருடங்கள் ஓடி கொண்டே இருந்தது.வேருன்றி ஆளும் வகையில் வெள்ளையன் “தமிழர்களை” அடிமை படுத்தி ஆட்சி செய்ய தொடங்கினான்.

1872 ஆம் ஆண்டில் தூத்துக்குடியில் ஒரு “வீர சிங்கம்” ஒன்று பிறந்தது ஆம் அவர் தான்”சிதம்பரம் பிள்ளை”

முதலில் வழக்கறிஞராக தன் வாழ்க்கையை தொடங்கினார்.இரக்க மனம் கொண்ட சிதம்பரம் பிள்ளை ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக நீதிமன்றங்களில் வாதாடி நீதிகளை பெற்று தந்தார்…

ஆங்கிலேயரின் அடக்குமுறை, தமிழர்களை அடிமை படுத்தியும்,பல அநீதிகளை கண்டு எழுச்சி கொண்டார் சிதம்பரம் பிள்ளை.

 

எப்படி வெள்ளையனை விரட்டி அடித்து ஓட விடுவது….?

 

வியாபாரம் செய்ய வந்த வெள்ளையன் நம்மை ஆளுகிறான். முதலில் அவனை பொருளாதாரத்தில் இருந்து முடக்க வேண்டும்.

 

கொழும்புக்கும், தூத்துக்குடிக்கும் இடையே இரண்டு சுதேசி கப்பல்களை விட்டார்…

 

தன் சொத்துக்களை ஏழை எளிய மக்களுக்கு கொடுத்தார்.

 

பிறப்பால் மனிதர்கள் எல்லாரும் ஒன்று தான் உயர்ந்தவர்,தாழ்ந்தவர் என்று யாரும் பாகுபாடு பார்க்க கூடாது.அதற்கு எடுத்து காட்டாக சிதம்பரம் பிள்ளை இருந்தார்.

 

தாழ்ந்த சாதியில் இருந்த கண் தெரியாத ஒரு சிறுவனை தத்தெடுத்து தன் பிள்ளையை போல் வளர்த்தவர்.

 

வெள்ளையானுக்கு எதிராக பல போராட்டங்களை செய்தார்.

முதன் முதலில் தொழில் சங்கங்கள் உருவாக்கியவர் வ.உ.சி தான்…

 

வேலை நேரத்தை குறைத்து எட்டு மணி நேரமாக கொண்டு வந்தவரும் வ.உ.சி தான்…

 

வெள்ளையன் வ.உ.சியின் மீது பொய் வழக்கு போட்டு 40 ஆண்டு காலம் தண்டனை வழங்கினான்.

 

சிறையில் செக்கிழுத்தார்,கல் உடைத்தார்…

 

இப்படி தன் சொத்து, சுகங்களை இழந்து இந்த நாட்டிற்காக போராடியவர் வ.உ.சி அவர்கள் போல் இனியும் இந்த மண்ணில் பிறக்க போவதும் இல்லை…

 

ஐயா வ.உ.சியின் தியாகத்தை போற்றும் வகையில் இந்த தமிழக அரசு தூத்துக்குடி கடலில் 150 அடி உயரத்தில் சிலை வைக்க வேண்டும்…

 

அனைத்து வெள்ளாளர் மகாசபையின் கோரிக்கை,

 

வெள்ளாளர் சமுதாய மக்கள் அதிக அளவில் வாழும் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஓட்டபாலம் ரவுண்டானாவில் சுதந்திர போராட்ட தியாகி ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களுக்கு முழுஉருவ வெண்கல சிலை நிறுவப்பட வேண்டும் என்று இராமநாதபுரம் மாவட்டம் சுற்று வட்டார வேளாளர்/வெள்ளாளர் சமுதாயம் மற்றும் அனைத்து வெள்ளாளர் மகாசபை சார்பாகவும் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்…